Sunday, July 13, 2008

ஆலப்புழா

மாநிலம் : கேரளா நகரம் : ஆலப்புழா விமான நிலையம் : கொச்சின்தூரம் : கொச்சினிலிருந்து 80 கி.மீ.ரயில் நிலையம் : ஆலப்புழாமொழி : மலையாளம்
கிழக்கின் வெனிஸ் என்று அழைக்கப்படும் இந்நகரம், இயற்கையின் எழில் கொஞ்சும் கேரள மாநிலத்தின் பல பிரதேசங்களில் முதன்மையானதாகும்.
இன்று அதிக வெளிநாட்டுக்காரர்களை ஈர்க்கும் ஒரு சுற்றுலா தலமாக விளங்கும் ஆலப்புழா படகு சவாரிக்கு பிரசித்தி பெற்ற இடமாகும். கடலுக்கு மிக அருகாமையில் இருக்கும் இந்நகரத்தின் மிக முக்கியமான இடம் `குட்டநாடு' என்ற இடமாகும். பச்சைப்பசேலென்ற வயல்களைக் கொண்ட இந்த இடம், கேரளாவின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.
இல்லப்பி கடற்கரை: உள்ளூர் வாசிகளிடம் மிகவும் பிரசித்தி பெற்றது இக்கடற்கரை. மிகத்தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்கப்படுகிறது இக்கடற்கரையின் தெற்குப் பகுதியில் குழந்தைகள் விளையாட தனிப்பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. படகுச் சவாரி செய்யும் வசதிகளும் உண்டு. ரயில் நிலையம் இங்கிருந்து அருகாமையில் உள்ளது.
நேரு ஸ்னேக் கோப்பை படகுப் போட்டி
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 2-ம் சனியன்று இங்கு பிரசித்திபெற்ற படகுப் போட்டி நடைபெறும். பல தினுசுப் படகுகள் அலங்கரிக்கப்பட்டு, அதில் 100 துடுப்பாளர்கள் துடுப்பு போடுவார்கள். இந்தப் படுகுச் சவாரிப் போட்டி, நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய வேம்பாநந்த் ஏரியில் நடைபெறும். இதற்கான நுழைவுச் சீட்டுகள் எல்லா கடைகளிலும் விற்கப்படும்.
ஆலப்புழாவில் எங்கு தங்குவது?
1. ஹோட்டல் கய்லோரம் 2. மராரி பீச்3. கேரளா ஹவுஸ் போட்4. கேரளீயம் ஆயுர்வேதிக் லேக் ரிசார்ட் ஆகிய ஹோட்டல்களில் தங்கலாம்.

No comments: