Monday, July 14, 2008

நெல்லை மாவட்டம் - அருவிகள்

நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் மட்டுமல்ல, சுற்றுலாவிற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. இவற்றில் களக்காடு அருகேயுள்ள செங்கல்தேரி முக்கிய இடம் வகிக்கிறது.
களக்காட்டில் இருந்து சுமார் 20 கி.மீ., தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது செங்கல்தேரி. கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில் பசுமை போர்த்தி காணப்படும் இங்கு தேங்காய் உருளி, தலையணை, கேவுழிக்கால், முதலிருப்பான் உள்ளிட்ட நீரோடைகளும், அருவிகளும் உள்ளன.
தலையணையில் மிருகங்களை பார்வையிட 2 உயரமான பார்வையாளர் மாடங்கள் உள்ளன. மான், மிளா, யானை உள்ளிட்ட விலங்குகளை பார்க்கும் ஆவலில் விடுமுறை காலங்களில் ஏரளாமான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர். மேலும் விலங்குகள் குடிநீர் அருந்தும் வகையில் சிறிய நீர்தேக்கம் ஒன்றும் அமைந்துள்ளது.
தேங்காய் உருளி அருவி 
தலையணைக்கு கீழ் தேங்காய் உருளி அருவி உள்ளது. மிகவும் சிறிய அருவியான இதன் அருகே பழங்காலத்தில் செதுக்கப்பட்டுள்ள ராம, லட்சுமணர், அனுமன் ஆகிய இந்து மத கடவுள் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அருவியில் நீராடிவிட்டு இச்சிலைகளை வழிபடுவதை சுற்றுலா பயணிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
செங்கலதேரி அருவி
தலையணையில் இருந்து சுமார் 15 கி.மீ., தூரத்தில் செங்கல்தேரி அருவி உள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று இயற்கை அன்னையின் பொக்கிஷமாக காணப்படும் இந்த அருவியில் இருந்து சில மைல் தூரத்தில் தான் பச்சையாறு நதி உற்பத்தியாகிறது. இப்பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஓய்வு விடுதி தற்போதும் அழகுடன் மிளிர்கிறது. இப்பகுதியில் கடந்த 1976ம் ஆண்டில் சிங்கவால் குரங்குகள் சரணாலயம் அமைக்கப்பட்டது. தற்போதும் சிங்கவால் குரங்குகளை இப்பகுதியில் காணலாம்.
இங்குள்ள கருமாண்டி அம்மன் ஆலயம் களக்காடு பகுதி மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. செங்கல் தேரி பகுதிக்கு செல்ல வனத்துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்றல் தாலாட்டும் குற்றாலம்:
தென்னகத்தின் "ஸ்பா" என்றழைக்கப்படும் குற்றாலத்தில் சீசன் இந்த ஆண்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறது. சிவாஜி வசனம் போல குற்றாலமே ஒவ்வொரு நாளும் "சும்மா அதிருதில்ல"....
பஞ்சு நிரப்பிய தலையனையை கிழித்து, மின் விசிறி காற்றில் பறக்கவிட்டது போல வெண்மேகக்கூட்டங்கள் அணிவகுத்து செல்ல, முத்து முத்தாய் சுற்றுலா பயணிகளின் உடல் வருடும் சாரலும் தொடர்கின்றன. சுற்றுலா பயணிகளுக்காகவே இந்த ஆண்டில் மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறையும் பல்வேறு பணிகளை செய்துள்ளன. சாரல் விழாவும் வெகு சிறப்பாக நடந்து வருகின்றன.
இந்த சூழலில் மதுரை, திருநெல்வேலி, கொல்லம் ஆகிய இடங்களில் இருந்து தென்காசிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. மதுரையில் இருந்து இயக்கப்படும் ரயில்களிலும் பயணிகள் கூட்டம்....
அருவிகள் அழகு...
குற்றாலம என்றாலே நினைவுக்கு வருவது மெயின் அருவிதான். இது செண்பகாதேவி அருவி மற்றும் தேனருவிகளின் விழுந்து பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் மெயின் அருவியாக விழுகிறது. சுமார் 290 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து விழும் தண்ணீரை கல் மண் கலக்காமல் வடிகட்டுவதற்காகவே இயற்கை அமைத்த பொங்குமாக்கடலில் விழுந்து, அதிலிருந்து மேல் எழுந்து வரும் அருவி நீரில் பயமின்றி குளிக்கலாம். வனப்பகுதியில் கடும் மழை பெய்யும் பேவுது மட்டும் ஆர்ப்பரிக்கும் இந்த அருவியில் குளிக்க தடை செய்வார்கள். அருவிக்கரையிலேயே குற்றாலநாதர் சன்னதி உள்ளது. இந்த அருவியை சுற்றிலும் பல்வேறு விடுதிகள் உள்ளன. சீசன் கால கடைகள் மெயின் அருவிப்பகுதியிலேயே அதிக அளவில் உள்ளன. அருவிக்கு செல்லும் வழியில் தற்காலிக மஸாஜ் சென்டர்களில் உடல் வலி தீர தைலம் தேய்த்து மசாஜ் செய்கிறார்கள்.
ஐந்தருவி
குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மி., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இவற்றில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே அருவிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அருவிக்கரையில் அய்யனார் சாஸ்தா கோவில் உள்ளது. அருவியில் இருந்து சுமார் 3 கி.மி. தெவுலைவில் பழத்தேவுட்ட அருவியும், அதையடுத்து தமிழ்நாடு அரசின் தேவுட்டக்கலைத்துறைக்கு செவுந்தமான பழக்கன்று தோட்டமும் உள்ளது. இப்பகுதிக்கு மேலே சில கி.மீ., தூரம் சென்றால் துர்யன் பழம் என்று அழைக்கப்படும் மருத்துவ மரங்கள் அதிக அளவில் உள்ளன (துர்யன் பழம் 1 மட்டும் ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் விலை வரை விற்கப்படுகிறது)
பழைய குற்றாலம் அருவி
அழகனாற்று நதியில் இருந்து விழும் தண்ணீரே பழைய குற்றாலம் என்று அழைக்கப்படுகிறது. குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மி., தொலைவில் உள்ள இந்த அருவிக்கரையிலும் மசாஜ் சென்டர்கள் அதிகம் உள்ளன. இந்த அருவி பல ஆண்டுகளுக்கு முன்பு சீர் செய்யப்படாமல் இருந்தது. பின்னர் அருவிக்கரை அழகாக மாற்றப்பட்டு பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பயமின்றி குளிக்கும் வகையில் மாற்றமடைந்துள்ளது. அருவிக்கரையில் மசாஜ் சென்டர்கள் அதிகம் உள்ளது. ஆர்ப்பரிப்பு இல்லாத இந்த அருவியின் முன்புறம் சிறார்கள் குளிக்கும் வகையில் மினி நீச்சல் தொட்டியும் உள்ளது.
செண்பகாதேவி அருவி
மெயின் அருவியில் இருந்து 2 கி.மீ. தூரம் மலைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். நடை பயணத்தின் மூலம் இந்த அருவிக்கு செல்ல முடியும். இந்த அருவியில் பாதுகாப்பான முறையில் குளிப்பது நல்லது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கேவுவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அருவியின் மேல் பகுதியில் உள்ள தேனருவி அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
சிற்றருவி, புலியருவி
இந்த அருவிகள் இரண்டும் நடந்து செல்லும் தூரத்துலேயே உள்ளது. ஆனால் புலியருவியில் இலவசமாய் குளியல் போடலாம். சிற்றருவி குளியலுக்கு கட்டணம் உண்டு. பாதுகாப்பாய் குளித்து பெண்கள் உடை மாற்றுவும், சிறுவர்கள் பயமின்றி குளிக்கவும் இந்த அருவிகளில் போதிய வசதி உள்ளது.
குற்றாலம் விடுதிகள்
குற்றாலத்தில் பேரூராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன. பேரூராட்சி விடுதிகளில் சீசன் காலத்தில் 150 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விடுதிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் விடுதிகளில் தரத்திற்கேற்ற வாடகை வசூலிக்கப்படுகிறது. இவை தவிர ஹோம்களும் உள்ளன.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து குற்றாலம் செல்ல மதுரையில் இருந்து திருமங்கலம், ராஜபாளையம், புளியங்குடி வழியாக செல்லலாம். கொல்லம் உள்ளிட்ட இடங்களில் இருந்து செங்கோட்டை வந்து குற்றாலம் செல்லாம்.
பேருந்து வசதிகள்
தென்காசியில் இருந்து குற்றாலம், ஐந்தருவிக்கு டவுண் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ஆட்டோ, கார் நிறுத்துமிடம் தென்காசி பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகிலேயே உள்ளது.

No comments: