Monday, July 14, 2008

மலேசியா

கி.பி 671-ஆம் நூற்றாண்டுகளில் சிரிவிஜயா(SRIVIJAYA) அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கட்டிட சுவடுகள் மீண்டும் ராஜேந்திர சோழனால் கி.பி 1030களில் மேம்படுத்தப் பட்டதாக நம்பப் படுகிறது) இந்த வார்த்தை மலேசியர்களுக்கு பழைய வார்த்தையாதான் இருக்கும். அது ஒரு மலாய் மொழி வார்த்தையாகும். இந்த வார்த்தைக்குத் தனி அர்த்தங்களை ஆராய்ந்தால் அது தமிழில் வேறு அர்த்தத்தைத் தந்துவிடும். நாம் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் Lembah Bujang என்றால் என்ன என்பதுதான். ஆங்கிலத்தில் இவ்விடத்தை Bujang Valley என்று அழைக்கிறார்கள். Lembah Bujang மலேசியாவில் உள்ள கெடா மாநிலத்தில் அமைந்திருக்கும் சரித்திர புகழ் பெற்ற சுற்றுலா தளமாகும். கெடா என்ற சொல் கடாரம் என்ற சொல்லின் வழி வந்ததாகும். கடாரம் என்ற தமிழ்ச் சொல் எப்படி வந்தது. கி.பி 1030-ஆம் ஆண்டுகளில் ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் அவர் தென் கிழக்கு ஆசியாவின் மீது படை எடுத்த போது இந்நிலத்திற்கு கடாரம் என்று பெயரிட்டிருக்கிரார். நாளாடைவில் அது கெடா என மாறி அது இப்பொழுது வழக்கத்தில் உள்ளது. அக்காலத்தில் ராஜேந்திர சோழனால் அமைக்கப் பட்ட வியாபார மையமாகவும், ஆட்சியிடமாகவும் இருந்ததுதான் Lembah Bujang ஆகும். இதற்கன சான்றுகள் பட்டிணபாலை என்ற தமிழ் கவிதையில் இருந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அது மட்டுமிற்றி அப்பொழுது வியாபாரத்திற்கு வந்து சென்ற அரபு மற்றும் சீன நூல்களிலும் Lembah Bujang -கை பற்றி நிறைய தகவல்கள் இருபதாக Braddly மற்றும் Wheatly-யின் ஆராய்சியில் கூறியிருக்கிறார்கள்.
இப்படியாக பல நூறு வருடங்களுக்கு முன் மாபெரும் வியாபார சந்தயாக விளங்கிய அவ்விடம் வெரிச்சோடி கிடந்தது. பள்ளிச் சுற்றுலா என சொல்லிக் கொண்டு ஐந்தாறு பிள்ளைகள் அங்கங்கு சுற்றிக் கொண்டிருந்தார்கள். மலேசிய அரசாங்கத்தால் நல்ல படியாக இதற்கு விளம்பரங்கள் கிடைப்பினும், சுற்றுலா தளமாக கருதி மக்கள் வருகை புரிய ஆர்வம் காட்ட தவரியிரிக்கிறார்கள். இதனை அடுத்து lembah bujang -கிள் உள்ள தகவல்கள் வௌதநாட்டு சுற்று பயணிகளுக்கு போதிய விளக்கத்தை தர வில்லை என்பதே என் கருத்து.
( Lembah Bujang காட்சியகத்தில் வைக்கப் பட்டிருக்கும் பழங்காள கண்ணாடித் துண்டுகள்- கி.பி 670களில் வியாபாரத்திற்கு பயன்படுத்த பட்டவையென நம்பப்படுகிறது)
( Lembah Bujang -கின் கடற்கரையேர அமைப்பு இந்தியா-சீனா கப்பல் வழி வியாபார வசதிக்காக அமைக்கப் பட்டதாக நம்பப் படுகிறது)

No comments: