Monday, July 14, 2008

குற்றாலம் - பகுதி 3

நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே உள்ளது. நடராஜப்பெருமானுக்குரிய பஞ்ச சபைகளில் சித்திரசபை. திரிகூடராசப்பக்கவிராயர் தலபுராணம் முதலிய பிரபந்தங்கள் எழுதியுள்ளார். சுற்றுலாத் தலங்களில் சிறப்புடையது.
திருமால் வடிவில் இருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கத் திருமேனியாக மாற்றிய தலம். இங்குள்ள அருவி புகழ் பெற்றது. குற்றால அருவியில் குளிப்பதற்கு ஜுன், ஜுலை, ஆகஸ்டு மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் பலரும் வருவர். திருஞானசம்பந்தர் தேவாரம் பெற்றது. சுவாமி பெயர் குற்றாலநாதர். அம்பாள் பெயர் குழல்வாய்மொழியம்மை. இத்தலம் குறும்பலா எனவும் வழங்கப் பெறும்.

No comments: