Monday, July 14, 2008

நாகப்பட்டினம்

சிறப்பான சமய பாரம்பரியத்திற்கு பிரசித்தி பெற்று வளங்கும் நாகை மாவட்டம் தஞ்சை மாவட்டத்திலிருந்து 18-10-1991-லிருந்து தனித்து செயல்படுகிறது. இம்மாவட்டம் வங்காள விரிகுடாவின் கரையோரம் 188 கி.மீ நீளத்தில் பரந்து விரிந்து காணப்படுகிறது. சோழர் ராஜ்ஜியத்தின் மிகவும் பழமைவாய்ந்த ஒரு முக்கிய துறைமுக நகரமாக விளங்கிய நாகை இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்று. மேலும் ' நேவல் பட்டினம் ' - கப்பல்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஸ்ரீகயகோரனா சுவாமி, நீலயதாக்சி அம்மன் கோவில், சவுரி ராஜ பெருமாள் கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் போன்ற முக்கிய தளங்கள் உண்டு. சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அழகிய நீண்ட கடற்கரை, வியக்க வைக்கும் உயரமான கலங்கரை விளக்கம், சிறிய அருங்காட்சியகம் போன்றவைகள் நாகை மாவட்டத்திற்கு அழகு சேர்க்கின்றன. 2005-ம் ஆண்டு சுனாமியால் நாகை மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. புதுப்பிக்கும் பணி அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
வேளாங்கன்னி: வங்காள விரிகுடாவின் கரையோரத்தில் நாகையிலிருந்து 14 கி.மீ தொலைவில் தெற்கே அமைந்துள்ளது. இந்த சிறிய நகரம் கிரிஸ்த்துவர்களின் முக்கியமான புண்ணிய தலமாகும். இங்கு புகழ்பெற்று விளங்கும் ஆரோக்கியமாத தேவாலயம் அனைத்து சமய மக்கள்கள் வழிப்படுகிறார்கள். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் திருவிழா வேளாங்கன்னியில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 
பூம்பூகார்: நாகை மாவட்டம் சீர்காழி தாலூக்காவில் பூம்பூகார் உள்ளது. மேலும் மயிலாடுதுறையிலிருந்து 24 கி.மீ சீர்காழியிலிருந்து 21 கி.மீ தொலைவில் உள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் பூம்பூகார் காவிரி பூம்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. 
நாகூர்: நாகையிலிருந்து 5 கி.மீ வடக்கே நாகூர் அமைந்துள்ளது. இஸ்லாமிய சமய புகழ்பெற்ற நாகூர் தர்கா அனைத்து சமய மக்கள் வழிப்படுகிறார்கள். அக்டநூபர் மற்றும் நவம்பர் இங்கு நடைபெறும் கந்தூரி திருவிழா மிகவும் சிறப்பானதாகும். 
சிக்கல்: நாகை திருவாரூர் சாலையில் 5 கி.மீ தொலைவில் சிக்கல் ஸ்ரீசிங்கார வேலன் கோவில் உள்ளது. புகழ்பெற்று விளங்கிய அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற தமிழ்புலவர்கள் தனது தெய்வீக பாடல்களில் இக்கோவிலின் மகிமைகளை அழகர பாடியுள்ளார்கள். ஐப்பசி மாதத்தில் நடைபெறும் சூரசம்காரம் மிகவும் முக்கிய திருவிழாவாகும். கோடிக்கரை: நாகையிலிருந்து 68 கி.மீ தொலைவில் கோடிக்கரை உள்ளது. இங்குள்ள பறவைகள் சரணாலயம் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இதன் அருகாமையில் உள்ள முத்துப்பேட்டை நீர் நிலைகள் சுற்றுலா பயணிகளை கவருகிறது. 
வேதாரண்யம் (திருமறைக்காடு): நாகையிலிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ளது வேதாரண்யம். சப்த விதங்க தலங்களில் ஒன்றாக விளங்கும் வேதாரண்ணிவரர் கோவில் இங்கு மிகவும் பிரசித்திபெற்றது. சுதந்திர போராட்டத்தின் போது தென்னியாவில் நடந்த உப்புசத்தியா கிரகம் வரலாற்று முக்கிய நகரமாகும். 
எட்டுக்குடி: நாகையிலிருந்து 8 கி.மீ தொலைவில் எட்டுக்குடி உள்ளது. முனிவர் அருணகிரி நாதர் தனது திருப்பாடலில் இங்கு புகழ்பெற்று விளங்கும் பழமைவாய்ந்த முருக கோவில் பற்றி பாடியுள்ளார். 
திருக்குவளை: நாகையிலிருந்து 27 கி.மீ தொலைவில் திருக்குவளை திருவாருரில் உள்ளது. சப்த விதங்க தலங்களில் ஒன்றாகும். இங்கு தியாகராஜ சுவாமி கோவில், அங்காளம்மன் கோவில் புகழ்பெற்று விளங்குகிறது. 
கூத்தனூர்: புகழ்பெற்ற தமிழ்ப்புலவர் ஒட்டக்கூத்தர் வாழ்கையோடு இணைந்த கூத்தனூர் நாகையிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு கல்விக்கடவுள் சரஸ்வதி தாயாருக்கு தனிக்கோவில் உள்ளது. 
மன்னார்குடி: நாகையிலிருந்து 56 கி.மீ தொலைவில் உள்ளது மன்னார்குடி. இங்குள்ள வைஷ்ணவ தலம் - ராஜகோபால சுவாமி மிகவும் புகழ்வாய்ந்து.

No comments: