Monday, July 14, 2008

தலயசனம்

மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயில் பழங்காலத்தைச் சேர்ந்த கோயிலாக இருந்த போதிலும் இன்னும் புழக்கத்திலுள்ள கோயிலாகவே இருந்து வருகின்றது. இக் கோயிலிலுள்ள இறைவர் உலகுய்ய நின்ற பெருமாள் எனவும் இறைவி நிலமங்கை நாச்சியார் எனவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. உலகுய்ய நின்ற பெருமாள் என்பது நிற்கும் தோற்றத்திலுள்ள விஷ்ணு பெருமானையே குறிக்கும். எனினும் இங்கு கருவறையில் உள்ள இறைவர் படுத்த நிலையிலிருக்கும் திருமாலாகவே காணப்படுகின்றார் என்பதுடன் இதற்கொப்ப அவர் பெயரும் தல சயனப் பெருமாள் என வழங்கி வருகின்றது.
இதனால் இங்கு ஆரம்பத்தில் இருந்த மூலவருக்குப் பதிலாகப் பிற்காலத்தில் பள்ளிகொண்ட பெருமாள் சிலை வைக்கப் பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள்.
திருமங்கையாழ்வார் எழுதிய பாசுரம் ஒன்றில் மாமல்லபுரத்துக் கோயிலொன்று குறித்து வரும் கடல் மல்லைத் தலசயனம் என்பது இக்கோயிலையே குறிக்கின்றது என்பது பலரது கருத்து. அவ்வாறன்றி இது கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரையிலுள்ள பல்லவர் காலக் கோயிலையே குறித்தது என்பது வேறு சில அறிஞர் கருத்து.
இத்தலத்திலேயே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

2 comments:

+Ve Anthony Muthu said...

சுற்றுலாவுக்காக ஒரு மிக அற்புதமான வலைப்பூ அன்பரே.

உங்களின் உழைப்பும், பணியும் உன்னதமானது.

மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

இயலுமானால் கீழ்க்காணும் மின்னஞ்சலுக்கோ அல்லது கைபேசிக்கோ தொடபுள்ள முடியுமா?

உங்களிடமிருந்து எனக்கு ஒரு உதவி தேவை.

anthonymuthu1983@gmail.com

9381455799 or 044-26323185

Tamil Home Recipes said...

மிகவும் அருமை