Monday, July 14, 2008

ஆலயம்

ஆலயம் என்பதற்கு எல்லா உயிர்களும் லயம் அடையும் இடம் என்று பொருள். எல்லோரும் ஒன்றுகூடி இறைவனை வணங்குவதற்குரிய இடம். ஆ என்பது பசு. இது ஜீவர்களை குறிக்கின்றது. லுயம் - ஒடுக்கம். ஜீவர்களை தமது ஆணவ மாயையிலிருந்து விலகி இறைவனிடம் ஒடுங்குவதற்குரிய இடமே ஆலயமாகும்.
இத்தகைய இடத்தில் ஐம்பூதங்களின் வடிவமாக அதனை அடக்கி ஆள்பவராக உள்ள வடிவங்களை குறிக்கும் வகையில் இறைவனின் திருமேனி கல்லினால் செய்யப்படுகிறது. கல்லிலே காற்று உள்ளது. கல்லிலே நலம் (மண்) உள்ளது. கல்லிலே வெளி அதாவது ஆகாயம் உள்ளது. எனவே தான் நம் முன்னோர்கள் சிலைகளை வடிக்க கல்லை பயன்படுத்தினர். கல்லிலே நீர் உள்ளது. கல்லிலே அக்னி உள்ளது.
கோயில் என்பது நமது உடம்பினை ஒத்ததாக உள்ளதை திருமூலர் திருமந்திரத்தில் உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் கூள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத்தெளிந்தூர்க்கு ஜீவன் சிவலிங்கம் கள்ளப்புலனைந்தும் காணா மணி விளக்கே கோபுர தரிசனம் பாப விமோசனம், கோபுர தரிசனம் என்பது கோடி புண்ணியம் என்று கூறியதால் தான் வானளாவிய கோபுரங்களை முன்பு கட்டி வைத்தனர்.
ஆலயம் என்பது மனித உடலாக கொண்டால்
கர்ப்பிரகம் - உடம்பின் தலை 
அந்தராளம் - கழுத்து 
அர்த்த மண்டபம் - மார்பு 
மகாமண்டபம் - வயிறு 
உள்காற்று - தோல்கள் 
வெளிகாற்று - கைகள் 
மூர்த்தம் - ஆன்மா 
கருவரை தூண்கள் - கண்கள் 
சுவர் கற்கள் - எலும்புகள் 
தூண்கள் - நரம்புகள்
நாம் வாழும் இல்லத்திற்கு வருடம் ஒருமுறை பொங்கலுக்கு வெள்ளை அடித்து சுத்தம் செய்து பாதுகாத்து வருகிறோம். அதுபோல இறைவன் வாழும் இடமாகிய ஆலயம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து சாந்தி செய்து கும்பாபிஷேகம் செய்வது வழக்கமாகும். புதிதாக கட்டப்பட்ட கோயிலுக்கு குடமுழக்கு செய்வது என்பது அனாவர்த்தனம் என்றும், நீண்ட காலமாக பூஜை செய்யப்படாமல் சீர் குலைந்து இருந்தால் அதனை செப்பனிட்டு நிகழ்த்தப்படுவதற்கு குடமுழுக்கு ஆவர்த்தனம் என்றும், ஆலயம் முழுமையாக சிதைந்தோ, பிளவு பட்டவோ, அஷ்டப்பந்தனம் சிதைந்து இருந்தாலோ பாலாலயம் செய்து எல்லாவற்றையும் சரி செய்து குடமுழுக்கு செய்வது புனராவர்த்தனம் என்றும் கூறுவது மரபு.
ஆகம சாஸ்திரப்படியும், ஆலயத்தின் முறைப்படியும் வெகுநாட்களாக பூஜை நடைபெறாவிடில் சிவபெருமான் லிங்கத்தை விட்டு விமானத்திற்கு வந்து மூன்று வருடங்கள் வரையிலும் யாவருக்கும் அருள்பாலித்து கொண்டிருப்பதாகவும், பன்னிரெண்டு வருடத்திற்கு தல விருஷத்தில் -ருந்து அனுகிரகம் செய்வதாகவும், அதற்கும் மேற்பட்டால் தல விருஷத்திலிருந்து நீங்கி சூரிய மண்டலத்திலிருந்து அருள் பாலிப்பதாகவும் ஐதீகம். ஆகவே -றைவன் நம்முடனேயே வைத்திருக்க ஆலய கும்பாபிஷேகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாது செய்யப்படவேண்டும்.
தோன்றி ஒடுங்கும் தன்மை வாய்ந்தது உலகம். எவற்றிலிருந்து எவ்வாறு தொடங்குகிறதோ அங்ஙனமே இறுதியில் ஒடுக்கம் கொள்கிறது. லிங்கம் என்ற சொல் அடையாளம் அல்லது சின்னம் என்று பொருள்படும். சிவத்தின் அடையாளமாக சொல்லப்படுவதால் இது சிவலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.
சிவலிங்கம் - பாணலிங்கம் என்று அழைக்கப்படும் தண்டு பகுதி - பிரம்மபாகம், விஷ்ணு பாகம், ருத்ரபாகம் என்று மூன்று பாகமாய் உள்ளது. இது படைப்பது, காப்பது, அழிப்பது என்று மூன்று நிலைமைகளையும் குறிக்க வல்லது.
சிவபெருமான் இந்த உலகில் 1. உருவம் 2. அருவம் 3. அருஉருவமாக இருந்து அருள்பாலிக்கின்றார்.
உருவம்
இறைவன் உருவமாக அதாவது சந்திரசேகர், மோமாஸ்கந்தர், நடராஜர் என்ற உலாத் திருமேனியாக அருள்பாலிக்கின்றார்.
அருவம் : என்பது பிரணவம் ஆகும். இந்த பிரபஞ்சமே சிவமாகம். எங்கும் சிவம், எதிலும் சிவம்.
அருஉருவம் : என்பது லிங்கத்திருமேனியாகும். நாம் லிங்கத்தை காண முடியுமே தவிர, திருமுடி, திருக்கரம், திரவடி இல்லாமல் இருக்கின்ற காரணத்தால் திருமேனி என்று சொல்ல முடிகிறது. எனவே உருவமாயும் அருவமாயும் விளங்குகின்ற காரணத்தால் சிவலிங்கம் அருவுருவத் திருமேனியாக கருதப்படுகிறது.
கண்ணூர் - அரைவாக்கம் கோயிலில் சிறப்பியல்புகள் - இக்கோயில் சுங்குவார் சத்திரம மப்போடு செல்லும் சாலையில் உள்ளது. சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ.
1. பொதுவாக ஆவுடையார் பாண லிங்கத்தை சுற்றி வட்டவடிவிலே அமைத்திருக்கின்றனர். ஆவுடையார் என்பது சக்தியை குறிக்கும். -க்கோவிலில் ஆவுடையார சதுர வடிவில் அமைந்து உள்ளது. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் பாணலிங்கத்திற்கு அமைத்திருப்பது மிகவும் அபூர்வமாகும். நூற்றுக்கும் மேற்பட்ட சிவாலயங்கள் சூசஸ்தலையாற்று கரையில் உள்ளது. இந்த ஆறு திருத்தணிக்கு அருகே உற்பத்தியாகி திருவள்ளுர் பொன்னேரி வழியாக வங்கடலில் கலக்கிறது. சூசமாகிய தர்பையிலிருந்து இந்த நதி வந்ததால் சூசஸ்தலை என்ற பெயர் பெற்றது. இந்த ஆற்றின் இருபுறமும் அகத்திய மரபினரால் அமைத்து வழிபட்ட சிவாலயங்கள் அகத்திஸ்வரம் என்றே அழைக்ப்படுகிறது. இத்தகைய ஆலயங்களில் கர்ப்பகிரகத்தில் சதுர வடிவ ஆவுடையாருடன் பாலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
2. பாணலிங்கம் என்ப ருத்ரபாகம், பிரம்மபாகம், வி'ணுபாகம் என்ற மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டிருக்கும். இதில் பிரம்ம பாகமும், வி'ணு பாகமும் ஆவுடையரால் மறைக்கப்பட்டிருக்கும். இங்கு உள்ள பாண லிங்கத்தில் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் இல்லை. இது தான் தோன்றி சிவலிங்கம். அதாவது சுயம்பு திருமேனியாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
3. இக்கோயில் குகைக்கோயிலாக கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆவுடையார் சதுரமாக அமைக்கப்பட்டிருப்பதால் -ந்த சிவலிங்கத்தை ரிஷி பிரதிஷ்டையாக ஆகங்கள் கூறுகின்றன.
4. இங்கு உள்ள அம்பாள் பெயர் மரகதாம்பிகை ஆகும். மிகவும் அழகாக கலைநயத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சிவபெருமான் சன்னதி கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. அம்பாள் தெற்கு நோக்கி நின்று அருள் பாலிக்கின்றாள். இவ்வாறு அமைவதை அகத்தீஸ்வரங்களின் காண முடிகிறது. அதாவது அகஸ்தியர் (அ) அவரது மரபினர் வழிபட்ட ஆலயங்களில் அமைந்து உள்ளது.
5. இங்கு உள்ள பாணலிங்கத்திற்கு மேற்புறம் சற்று வெட்டுப்பட்டுள்ளது. மேலும் பாண லிங்கத்திற்க அபிஷேகம் முடித்து அலங்காரம் செய்யும்போது பாணலிங்கத்தில் வராக மூர்த்தியின் முக அமைப்பை காண முடிகிறது. இவ்வாறு சிவலிங்கத்தில் பெருமாளின் முக அமைப்பை காண்பது அரிதான ஒன்று. அகத்தியர் பூஜை செய்வதற்காக சில ஸ்தலங்களில் மற்ற தெய்வங்களின் திருமேனியை சிவலிங்கமாக மாற்றி பூஜை செய்து வழிபட்டார். எனவே இந்த விங்கம் அகத்தியர் மாற்றி அமைத்து வழிபட்ட சிவலிங்கமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
நந்தி என்ற சொல்லுக்கு மகிழ்ச்சி என்பது பொருள். -ங்கு மகாமண்டபத்தில் அழகிய நந்தி அமைக்கப்பட்டுள்ளளது.
நந்திதேவர் எப்பொழுதும் சிவலிங்கத்தின் முன் அதையே பார்த்து கொண்டிருக்கும் நிலையில் இருப்பவர். நந்தி என்பது எப்பொழுதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். சிவநந்தியின் காவல் பூண்டுள்ள இவருடைய அனுமதி பெற்று உள்ளே சென்று இறைவனை தரிசிக்க வேண்டும்.
மிகவும் அழகான பிள்ளையார் சிலை ஒன்று கிடைத்துள்ள. பழைய கோவிலில் கோஷ்டங்கள் அமைக்கப்பட்டதற்கான மாடங்கள் உள்ளது. ஆனால் யாரோ சிலைகளை எல்லாம் தூக்கி சென்று விட்டனர். இந்த கோலிலுக்கு பின்புறம் மேற்கில் மிக அழகிய குளம் உள்ளது.
பைரவர் : சிவபெருமானின் வேக வடிவமாக கருதப்படுவது பைரவர் ஆகும். பைரவர் என்ற சொல்லுக்கு பயத்தை போக்குபவர் என்று பொருள். சிவாலயங்களில் காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும், இரவில் அர்த்த ஜாம வழிபாடு நிறைவு பெற்ற பின்னரும் திருக்கோயிலின் அனைத்து சன்னதிகளையும் பூட்டி அந்த சாவியினை பைரவரின் திருவடியில் சமர்ப்பித்து கோயிலை பூட்டுவது மரபு. இவர் ஆலயத்தின் காவலராக இருப்பதால் க்ஷேத்திர பாலகர் என்று கூறுவர். சனீஸ்வரருக்கு குருவாகவும், அதிதெய்வமாகவும் விளங்குபவர் பைரவர் ஆவார.
பைரவ உருவங்கள் பல உண்டு. அவற்றில் முக்கியமானது காலபைரவர் திருவுருவம் ஆகும். பைரவரில் 64 அம்சங்கள் உடைய திருவுருவங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
இறைவனே அத்வைதம்
ஒன்றானவன் - உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் இறைவனின் வடிவங்களே. ஒவ்வொரு உயிரினிலும் இறைவன் நிறைந்துள்ளார். பகவான் ரமண மகரிஷி உன்னில் இருக்கும் இறைவனை நீ அறியும்போது உன்னை உணர்வாய் என்றார். எனவே எல்லாவற்றிலும் இறைவன் உள்ளான் என்பதையே ஒன்றானவன் என்று வேதங்கள் கூறுகின்றன.
இரண்டானவன் - சிவனும் சக்தியுமாக அதாவது அர்த்த நாரீஸ்வரராக இருந்து இந்த உலகத்தை காத்து ரட்சிப்பதால் இரண்டானவன்.
மூன்றானவன் - இறைவன் இந்த உலகத்தை படைத்து, காத்து, அழிப்பதால் மூன்றானவன் என்று வேதங்கள் போற்றுகின்றன. (பிரம்மா, விஷ்ணு, சிவன்)
நான்கானவன் - ரிக், சாம, யஜுர், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களை உலகிற்கு அளித்து நல்வாழ்க்கையை வாழ வழிகாட்டியவன்.
ஐந்தானவன் - பஞ்சபூதங்களாகிய நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று பஞ்சபூதங்களை படைத்து அடக்கி ஆள்பவன்.
ஆறானவன் - ஆறுமுகங்களைக்கொண்ட ஆறுமுகனை நமக்கு அருளியவன். தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஊர்த்துவமுகம், அதோமுகம் என்று ஆறுமுகங்களால் பக்தர்களை காத்து ரட்சிப்பவன்.
ஏழானவன் - இறைவன் சப்தஸ்வரமாக இருப்பவன். இசையை நன்கு உணர்ந்தவன். இறைவனை உணர்ந்தவன். காலங்களில் சாமகானமாய் விளங்குபவன். பக்தர்களின் குறையை தீர்க்க சப்தவிடங்களில் ஏழுவிதமான ஆடல்களை புரிந்து அடியவர்களை ஆட்கொள்ளுபவன்.
எட்டானவன் - அஷ்டதிக்கு பாலகர்கள் அஷ்டவகங்கள் அஷ்ட ஐஸ்வர்யங்கள் படைத்து பக்தர்களின் மாயை அகல காரணமாக இருப்பவன். எட்டு குணங்களை உடையவர். இறைவன் என்றும் ஆன்றோர் கூறுவர். உலக உயிர்கள் இறைவனை உணரும் வகையில் எட்டு வீரச்செயல்களை புரிந்து இடங்கள் அட்ட வீரட்டங்களாக அறியப்படுகிறது.
ஒன்பதானவன் - சிவபெருமான் நவக்கிரகங்களை படைத்து மக்கள் செய்யும் பாவபுண்ணியத்திற்கு ஏற்ப அவர் வாழ்க்கையை வகுத்தளிக்கிறார். நவக்கிரகங்களின் செயல்பாட்டை தெய்வ வழிபாட்டால் மாற்றி அமைக்க முடியும் என்று உலகிற்கு உணர்த்தியவர்.
பத்தானவன் - சிவபெருமான் பத்து திசைகளுக்குரியவர்கள் படைத்து அவர்களை பரிபாலனம் செய்து அவர்கள் மூலமாகவே பக்தர்களை காத்து ரட்சிப்பவன்.
இத்தலத்திற்கு அருகே உள்ள சிவத்தலங்கள்
கூவம் - தீண்டாத்திருமேனி திருவிற்கோல நாதர்அம்மன் - திரிபுரசுந்தநஸ்தல விருட்சம் - ருத்ராட்சம்பாடல் பெற்ற ஸ்தலம் - திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம்
காஞ்சிபுரம் - பாடல் பெற்ற ஸ்தலம்
ஏகாம்பரநாதர், காமாட்சி அம்மன் ஆகியோருக்கு மிகப்பெரிய ஆலயங்கள் உள்ளது. நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
மண்ணூர் - உமாமகேஸ்வரன், காமாட்சி அம்மன், கோவிலின் இருபுறமும் மிக அழகாக தாமரை பூத்த தடாகங்களுக்கிடையே மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவில் வளர்புரத்தை அடுத்து உள்ளது.
நெமிலி பெருமாள் - கபாலீஸ்வரர் அம்பாள் கற்பகாம்பாள் இந்த ஆலயம் 2005ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இலமையங்கோட்டூர் - திருஞான சம்பந்தர் ஸ்வாமிகளால் பாடல் பெற்ற ஸ்தலம். சுவாமி சந்திரசேகர் அம்பாள் கன சூசலாம்பிகை.
திருப்பாச்சூர் - இறைவன் பாசூர் நாதர். அம்பாள்  பகபதி நாயகி. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
சிவலாய திருப்பணி என்பது அஸ்வமேதயாகம் செய்வதற்கு ஒப்பாகும். சிவாலயத்திருப்பணி செய்வதால் ஒருவரின் 21 தலைமுறைகள் -றைவனின் அனுக்கிரகத்தை பெறுவதாக கூறப்படுகிறது. முன்பு மிகப்பெரிய கோவில்களை அரசர்களும், இறைவனின் அடியவர்களும் கட்டி -றைப்பணியை எங்கும் பரப்பினர். ஆனால் நாம் நம் முன்னோர்கள் கட்டிய ஆலயங்களை பராமரிக்காமல் அவைகளை பாழ்படுத்தி இயற்கையின் சீற்றங்களை அனுபவிக்கிறோம்.
மனிதப்பிறவி எடுப்பதே இறைவனை உணரத்தான். இனி ஒரு பிறவி இல்லாமல் செய்வதற்கு இறைப்பணி அவசியம். அந்த இறைப்பணிக்கு ஆலயங்கள் அவசியம். ஆலயங்கள் இல்லாத இடங்களில் வன்முறையும், வரட்சியும் தாண்டவமாடுவதை நாம் பார்க்கிறோம். எனவே தான் ஔவையார் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். எனவே நாம் புதிய கோவிலைக்கட்டுவதை விட நம் முன்னோர்கள் நமக்கு அளித்த பொக்கிஷமாக கருதி மிகப்பழமையான கோவில்களை புனருத்தாரணம் செய்து நம் வருங்கால சமுதாயத்திற்கு அளிப்போம்.
இந்த கோயிலின் திருப்பணி வேலைகள் கடந்த ஆகஸ்ட் 26 அன்று பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. சிவனுக்கு கர்ப்பகிரகமும், அர்த்தமண்டபம், விமானத்துடன் கூடிய ஆலயம், அம்மனுக்கு தெற்கு நோக்கி சன்னதியும், இறைவன் முன்பு மகா மண்டபத்தில் சிறிய நந்தி மண்டபமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் வருகிற தை மாதம் (2008) நடைபெறவிருக்கிறது.

No comments: