Monday, July 14, 2008

கோனர்க் சூரியன் ஆலயம்

பூரிஜகன்னாதர் மற்றும் கோனர்க் ஆலயம் - ஒரு சிறிய சுற்றுலா அறிமுகம்
கோனர்க் சூரியன் ஆலயம்
பூரிஜகன்னாதர் கோவிலும் கோனார்க் சூரிய கோவிலும் கண்டிப்பாக நீங்கள் பார்த்து ரசிக்கவேண்டிய இடம். பூரி ஒரிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வர் அருகில் உள்ளது. கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், வரலாற்றில் அதிக நாட்டம் உள்ளவன் என்பதால் சென்றேன். பூரியில் குறைந்த கட்டணத்தில் விடுதிகள் கிடைக்கின்றன. நான் மற்றும் என்னுடைய நண்பனும் சென்றிருந்தோம். நாங்கள் சென்றுவர விடுதியின் உரிமையாளரரே ஏற்பாடு செய்தார். பூரிஜகன்னாதர் கோவில் நகரத்திலே உள்ளது. நான் முதலில் சென்றுவர அதிகசெலவு ஆகும் என்று நினைத்தேன். அப்படி ஒன்றும் ஆகவில்லை. கோனார்க் சூரியகோவில் சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ளது. நாங்கள் ஆட்டநூவில் சென்றுவர ரூபாய் 350 ஆனது. மற்றும் தென்னிந்திய சாப்பாட்டு வகைகளும் ஆங்காங்கே கிடைக்கின்றன. பூரிஜகன்னாதர் கோவிலில் செல்லிடபேசி, புகைப்படகருவி அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாலயம் அவ்வளவு சுத்தமாக இல்லை. ஆலயத்தினுள் பிரவேசிக்கும்போது பண்டிட் எனப்படும் பூசாரிகளின் தொல்லை தாள முடியவில்லை. ஆலயத்தினுள் செல்பவர்கள் அவர்கள் கூறுவதைப் கேளாமல் செல்லவும். இல்லாவிடில், எதாவது பிரசாதம் கொடுத்து பணம் பிடுங்குவார்கள் (நான் முன்கூட்டியே என்னுடைய ஒரிசா நண்பர்களால் இதுபற்றி எச்சரிக்கப்பட்டு இருந்தேன்). கங்கர்களின் கட்டிடகலை வியக்கத்தக்கதாகவும் அருமையாகவும் உள்ளது. இந்த ஆலயம் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பூரிஜகன்னாத் தேர்த்திருவிழா வெகு பிரசித்தி பெற்றது.

கோனர்க் சிறந்த சுற்றுலாதலம். வௌதநாட்டவர்கள் அதிகமாக வந்து போகிறார்கள். கோனர்க்கில் விமானத்தின் உள்ளே அனைத்தும் சிதிலம் அடைந்துள்ளதால், நாற்புரமும் அடைக்கப்பட்டுள்ளது. நான் ஜகன்னாதர் கோவிலை விட கோனர்க் கோவிலையே அதிகமாக விரும்பினேன் (வெகு சுத்தமாக பாரமரிக்கப்படும் காரணத்தால்). இந்த ஆலயம் தேர்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 13ம் நூற்றாண்டில் கங்க பேரரசால் கட்டப்பட்டது. காலை தொடங்கி மாலை முடிவதற்குள் எங்கள் பயணத்தை முழுவதுமாக முடித்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தோம்

No comments: