Monday, July 14, 2008

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் தமிழ்நாட்டின் ராஜ்ஜியத்தில் முக்கியமான தொழில் சார்ந்த மாநகரமாகும். நூற்றுக்கும் மேற்ப்பட்ட நெசவு தொழிற்சாலைகளை கொண்ட இந்நகரம் துணி உற்ப்பத்தியில் இந்தியாவில் முக்கிய பங்கு வகிக்கிறது. தென்னிந்தியாவின் நெசவு தொழிலுக்கு தலைநகரமாக விளங்கும் கோவை பல பொருள் உற்ப்பத்தி பிரிவு அமைத்து பொறியியல் உபகரணங்கள் மற்றும் மின்னியியல் சம்பந்தமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. நீலகிரி மலை அடிவாரத்தில் காணப்படும் இந்நகரம் மனதிற்கினிய காலநிலையை கொண்டது. 
மருதமலை கோவில்: மருதமலை கோவில் கோயம்புத்தூர் இரயில் நிலையத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் மருதமலையில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளிருக்கும் முருகப் பெருமானை தண்டாயுதபாணி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இத்திருத்தலத்தில் முருக கடவுள் பல அற்புதங்களை நிகழ்த்தியாக நம்பப்படுகிறது . 
பட்டீஸ்வரசுவாமி கோவில்: கோயம்புத்தூர் மேற்கே 7 கி.மீ தொலைவில் நோயல் நதிக்கு அருகே கரிகாழ சோழனால் பட்டீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இத்திருத்தலத்தில் சிவன் தன் துணைவி பச்சைநாயகி தாயாருடன் எழுந்தருளியுள்ளார். மிக அழகான சிற்ப்பங்களை கொண்டு அமைக்கப்பட்ட கனகசபா மண்டபம் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. மிகவும் பெரிய சிலைகளை கொண்ட இக்கோவில் மேல சிதம்பரம் என்று பெயர் பெற்றுள்ளது. இக்கோவில் தோன்றிய காலத்தில் அருணகிரி நாதர் மற்றும் காசியப்ப முனிவர் பல காவியங்களை படைத்துள்ளார்கள்.
திருமூர்த்தி கோவில்: திருமூர்த்தி மலையின் அடிவாரத்தில் திருமூர்த்தி அணைக்கட்டு எல்லையை ஒட்டி ஸ்ரீஅமரலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பழனி கோயம்புத்தூர் நெடுஞ்சாலையில் உடுமலைப்பேட்டையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. இத்திருத்தலத்தில் ஒருபுறமாக சிறிய ஒடை மற்றும் அருகாமையில் எழில் மிகு நீர்வீழ்ச்சி காண்போரை மகிழ்விக்கிறது. இங்கிருந்து 25 கி.மீ தொலைவில் அமராவதி அணைக்கட்டில் இருக்கும் முதலை பண்ணையை சென்றடையலாம். 
அருவிகள்: 
செங்குபதி அருவி: கோயம்புத்தூர் சிறுவானி சாலையில் கோவையிலிருந்து 25 கி.மீ தொலைவில் செங்குபதி அருவி அமைந்துள்ளது. 
குரங்கு அருவி: கோயம்புத்தூர் - பொள்ளாச்சி - வால்பாறை நெடுஞ்சாலையில் கோவையிலிருந்து 65 கி.மீ மற்றும் பொள்ளாச்சியிலிருந்து 27 கி.மீ தொலைவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக குரங்கு அருவி அமைந்துள்ளது. 
சிறுவானி: கோயம்புத்தூருக்கு மேற்கே 37 கி.மீ தொலைவில் சிறுவானி அணைக்கட்டு மற்றும் அருவி அமைந்துள்ளது. வனர்ப்புமிக்க தோற்றத்தை கொண்ட இந்த அணைக்கட்டு மற்றும் நீர்வீழ்ச்சி காண்பவர்களை வசியப்படுத்தும் ஆற்றல் கொண்டது. சிறுவானி நீரின் சுவை தனிதன்மை வாய்ந்தது. வைதேகி அருவி:கோயம்புத்தூரிலிருந்து நராசிபுரம் கிராமம் வழியாக 30 கி.மீ தொலைவில் வைதேகி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது ஒரு அழகான உல்லாச சுற்றுலா தலமாகவும் மலை ஏறுதல் பயிற்சிக்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது. 
அருங்காட்சியகம்: 
வனகல்லூரி அருங்காட்சியகம்: இந்நாட்டின் மிக பழமையான அருங்காட்சியகம் வனகல்லூரி அருங்காட்சியகம். கோயம்புத்தூர் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 3.5 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த அருங்காட்சியகம் புதையுண்டுள்ள கல்போல பலப்படைகளின் கீழ்படிந்த புராதன மரம் மிருகம் முதலியவற்றின் எச்சத்தை பதம்செய்து பாதுகாத்து வருகிறது. மேலும் அறிய வகை செடி கொடிகள் மற்றும் மிருகங்கள் இங்கு உதாரணமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் சேவை மையத்தில் செடி கொடி பயிர்செய்கை சம்பந்தமான விவரங்களோடு கூடிய அறிவுரைகள் கூறி தொழில் வளர்ச்சி அடைய உதவுகிறார்கள். 
காந்தி காதி கண்காட்சியகம்: தமிழக அரசால் கோயம்புத்தூரில் ஜீலை மாதம் 15-ம் தேதி 1970-ம் ஆண்டு காந்தி காதி கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. காந்தியின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரது வாழ்க்கை சித்திரங்களை காட்சிக்கு வைத்துள்ளார்கள். இங்கு கனசதுர வடிவில் தனி அறை அமைத்து காந்தியின் வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டங்களில் நடந்த முக்கிய சம்பவங்களை ஓவியம் மற்றும் புகைப்பட வடிவில் காட்சிக்கு வைத்துள்ளனர். இதில் காந்தியின் குடும்பம், நண்பர்கள் சுதந்திர போராட்டம் ஹரிஜன வாழ்க்கை பயணம், சிறைச்சாலை வாழ்க்கை மற்றும் அமைதி பேச்சுவார்த்தைகள் போன்றவற்றின் அறிய புகைப்படங்கள் மிகவும் சுவாரஸ்சியமாக உள்ளது. சிறப்பு பஜனைகள் அமைத்து காந்தி ஜெயந்தி பெருமிதத்துடன் கொண்டாடப்படுகிறது. 
அரசு அருங்காட்சியகம்: தமிழக அரசால் 1989 -ம் ஆண்டு அரசு அருங்காட்சியகம் வ.ஊ.சி பூங்கா ரோட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஐந்து பிரிவுகளை கொண்ட இக்காட்சியகம் பழங்கால உபகரணங்கள் கொண்டுள்ளது. இங்கு பண்டையகாலத்தவர் நடைமுறையில் இருந்த நாணயங்கள், புதையல்கள் அழங்கரிக்கப்பட்ட கலைப் பொருட்கள் போன்ற அறிய பொக்கிஷங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த பாறைகள், மருத்துவ குணமுடைய செடி கொடிகள், மரங்களின் எச்சம் மற்றும் கனிமங்களும் தனிபிரிவாக அமைக்கப்பட்டுள்ளது. 
ஆணைமலை விலங்குகள் சரணாலயம்: கோயம்புத்தூரிலிருந்து 90 கி.மீ தொலைவில் கடல்மட்டத்திலிருந்து 1400 மீட்டர் உயரத்தில் பொள்ளாச்சிக்கு அருகே ஆணைமலை விலங்குகள் சரணாலயம் உள்ளது. 958 சதுர கி.மீ பரப்பில் சொர்க்கமாக விளங்கும் இந்த சரணாலயத்தை தேசிய பூங்காவாக கொண்டுள்ளது. சமீபகாலத்தில் இந்திகாந்தி விலங்குகள் சரணாலயம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் முதலைகள் ஆணை மலையில் அமைந்திருக்கும் அமராவதி நீர் தேக்கத்தில் காணப்படுகிறது. இங்கு அதிக அளவில் தோட்டம், அணைக்கட்டு, நீர்தேக்கம், நீர்வீழ்ச்சி, அடர்ந்த சோலை, தேக்கு மரங்கள், புல்வெளிகள் அழகுர காட்சியளிக்கின்றன.  
டாப்ஸிலிப்: ஆணைமலையில் அமைந்திருக்கும் மிக அழகான சூழ்நிலையை கொண்ட ஒரு சிறிய நகரம். இந்நகரம் பொள்ளாச்சியிலிருந்து 37 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஒரு சிறந்த உல்லாச பயணத்திற்கு ஏற்ற இடமாகும். 
பிளாக்தண்டர்-பொழுதுபோக்கு பூங்கா: கோயம்புத்தூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் ஊட்டி பிரதான சாலையில் உள்ளது. குடும்பத்துடன், நண்பர்களுடனும் செல்வதற்கு ஒரு சிறந்த இடமாகும். இங்கு குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள்.
பரம்பைகுளம்-ஆழியாறு திட்டம்: பரம்பைகுளம் ஆழியாறு திட்டத்தின் மூலம் பல அணைக்கட்டுகளை அமைத்து பரம்பைகுளம், ஆழியாறு, நிராறு, சோழியாறு, துணைக்காடு, தேக்கடி, பாலாறு முதலிய நதிகளிலிருந்து சுரங்கபாதை மற்றும் வெட்டு கால்வாய்கள் மூலம் தண்ணீர் அணைக்கட்டை வந்தடைந்து நீர் பாசானத்திற்கும் மின் உற்ப்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது. இத்திட்டம் பொருளியியல் துறையின் திறனை ஒரு எடுத்துகாட்டாக விளங்கிறது. 
வ.ஊ.சி பூங்கா: கோயம்புத்தூர் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் வ.ஊ.சி பூங்கா சுதந்திர போராட்ட தியாகியான வ.ஊ.சிதம்பரம் அவர்களின் பெயரில் அழைக்கப்படுகிறது. கோவையில் மிக சிறந்த குழந்தைகளுக்கான பூங்கா வ.ஊ.சி பூங்காவாகும். இங்கு குழந்தைகளை கவரும் சிறிய மிருக காட்சி சாலை, டைனோஸ்சரின் மாதிரி உருவம் ஊஞ்சல், இரயில், சிறுவர்கள் உயர்ந்து தாழ்ந்து விளையாடும் பலகை, அமருவதற்கு ஏற்ப அமைக்கப்பட்ட புல்வெளிகள், சறுக்குகள் மற்றும் பல விதமான விளையாட்டு புரல்களை கொண்டு ஒரு சிறந்த விளையாட்டு தலமாக விளங்கிறது. 
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நெசவு தொழிலுக்கு பெயர் பெற்று விளங்கிறது. பின்னப்பட்ட கால்மேசு பொருட்களுக்கு பெயர் பெற்று விளங்கும் திருப்பூர் கோயம்புத்தூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. துணிச்சல் நிறைந்த சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் சொந்த ஊராகும்.

No comments: