Monday, July 14, 2008

காரைக்கால்

கடற்கரை நகரமான காரைக்காலில் கடற்கரையிலேயே அமைந்துள்ளது ஸீகல் உணவகம். இரண்டு பெரிய ஹால். மேலே நவநாகரீக கூரையும், கீழே வழவழ தரையும் கொண்ட இந்த ஹாலை சுற்றி குட்டிச் சுவர் உடைய திறந்தவௌததான். கடற்காற்று மோத கடலைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம், உணவருந்தலாம்.
'பார்' இணைக்கப்பட்டுள்ளது கூடுதல் வசதி. ஒரு ஹாலில் அசைவமும் மதுவும் வழங்குகிறார்கள். குடும்பத்தினர் அனைவரும் அவரவர் ருசிக்கு ஏற்ப உணவும், மதுவும் பெறலாம். பாதுகாப்பும் சுத்தமும் உள்ள இந்த ஸீகல் உணவகம் பாண்டிச்சேரி அரசால் நடத்தப்படும் 'ஸ்டார்' உணவகம் என்றே சொல்லலாம்.
சனீஸ்வர பகவான் புகழ் திருநள்ளாறு மிக அருகில் உள்ள காரைக்காலில்தான் இந்த ஸீகல் பீச் உள்ளது. மேலும் ஸீகலுக்குச் செல்லும் வழி நெடுக நம் வலபுறம் அரசலாறு ஓடுகிறது. இங்குதான் தற்போது மிதவை உணவகம் அமைத்துள்ளனர். எனவே படகு உணவகத்தில் பயணித்துக் கொண்டே ஆடலாம், பாடலாம், சாப்பிடலாம், ஒரு சுற்று சுற்றியும் வரலாம். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தனிமை சுகத்தை அள்ளி வழங்கும் எமெரால்ட் பீச் இங்குதான் உள்ளது. ஈ.ஸி.ஆர். வழித்தடத்தை தொட்டு நிற்கிறது இந்த பீச்.
காரைக்காலை அடுத்து வாஞ்சூர் என்ற இடத்தில் உள்ளது ரங்கையா மடம். இங்கு சித்தரின் ஜீவசமாதி உள்ளது. இதனருகில் நாய்க்கும் சமாதி கட்டி இருக்கிறார்கள். இதற்கு ஒரு அழகான நிகழ்வை அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். சித்தரின் ஜீவ சமாதிக்கு தினமும் மாலையிட்டு மரியாதை செய்ய ஆற்றின் மறுகரையில் உள்ள மக்கள் தீர்மானித்தனர். தீர்மானிக்கப்பட்ட பின் மழைகாலம் வரும் வரை ஒரு குறைம் இல்லை. மழை கொட்டியது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பூமாலை அனுப்புவதில் தடை ஏதும் ஏற்படக்கூடாது என நினைத்து, ஒரு நாயின் கழுத்தில் மாலையை போட்டு ஆற்றில் இறக்கிவிடப்பட்ட  தினம் தனம் நீந்தியே மாலையை கொண்டு சேர்த்தது. அங்குள்ள பூசாரி அதனைப் பெற்று, தொடர்ந்து மாலை மரியாதை செய்து வந்தனர். ஒருநாள் ஜீவ சமாதிக்கு மாலையுடன் சென்ற அந்த புண்ணிய நாய் திரும்பவில்லை. இயற்கையாய் இறந்த அந்த நாய்க்கு மரியாதை நிமித்தம் அங்கேயே சமாதி கட்டப்பட்டது. இந்தியாவிலேயே வேறு எங்கும் நாய்க்கு சமாதி கிடையாது. இன்றும் இச்சமாதி அருகே நீத்தார் கடன் தீர்க்க மக்கள் சாரி சாரியாகை வந்து கொண்டு இருக்கின்றனர்.
இப்படியொரு இந்து சித்தர் வழிபாடு நடக்கிறது என்றால் முஸ்லீம் மகானுடைய வரலாறும் ஓர் அதிசயமாகத்தான் இருக்கிறது. நூற்றி -ருபது வயது வரை வாழ்ந்த சையத்மஸ்தான் என்ற சையத் தாவூத் துருக்கி தலைநகரான பொக்காரோவில் பிறந்தவர். இவர் நரிகள் நாயகத்தின் வழிவந்த சீடர். இவர் காரைக்காலை அடைந்து, இன்று கண்ணாடி மாளிகை என அழைக்கப்படும் தர்க்காவில் வசித்து, மக்களுக்கு பல அற்புதங்களைச் செய்து காட்டியவர். காரைக்கால் அருகே உள்ள அன்றைய அரச குடும்பத்தில் பிறந்தவர் அரசிளங்குமாரி ஒருவர் கனவில் மகான் மஸ்தான் தோன்றியதாக கூறி, அப்பெண் அவருக்கு தொடர்ந்து பணிவிடை செய்து வந்தார். இந்த அரசிளங்குமாரி இந்து மதத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அலங்கரிக்கப்பட்ட தேரில் கொண்டு வரப்படும் சந்தனம் மகான் சையத் மஸ்தான் சமாதியின் மீது மெழுகப்படும் சந்தனக் கூடு திருவிழா, ஆண்டுதோறும் இந்த தர்க்காவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வளமுடைய வணிகர் குலமகள் தெய்வீகமானதும் இங்குதான். குன்றிவிட்ட விளக்கு போல் அழகும், செல்வமும், வளமும், வனப்பும் கொண்ட புண்ணியவதிதான் புனிதவதியார். இவரது தெய்வ சக்தி கண்டு அரண்ட இவரது கணவர் ஊரை விட்டு நீங்கி மறுமணம் புரிய, இறைவனே கதி என வாழ்ந்து, முக்தி அடைந்து அறுபத்தி மூன்று யான்மார்களில் ஒருவரான இவர்தான் காரைக்கால் அம்மையார். காரைக்காலில் இந்த வரலாறினை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் மாங்கனித் திருவிழா மிகச்சிறப்பானது. இவ்விழாவில் ஈசன் மீது அன்புடன் எரியப்படும் மாங்கனியை பிடித்து உண்டால் மகப்பேறு ஏற்படும் என்ற நம்பிக்கை மக்களிடையே உலவுகிறது.
தலைமுறை உருவாக்கித்தரும் தெய்வம் காரைக்கால் அம்மையார் என்றால், ஐந்து தலைமுறைக்கு அருளை அள்ளித் தருகிறார் அன்னை ஆயிரங்காளி. கடலில் ஆடி அசைந்து வந்த பெட்டியில் இருந்த காளி அருளை வாரி வழங்கும் வண்ணம் சாந்த சொரூபியாக இருந்தாள். வடநாட்டு மன்னன் பூஜித்த இந்த வடநாட்டு காளிக்கு, எது நைவேத்தியம் செய்தாலும் ஆயிரமாயிரமாக இருக்க வேண்டும். தினம் தினம் இப்படி செய்ய சதாரண குடிமக்களால் இயலாது என உணர்ந்த அருள் காளி, ஊர் பெரியவரின் கனவில் தோன்றி ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை, ஆயிரமாயிரமாய் நைவேத்தியம் செய்ய பணிந்து, அன்று மட்டுமே வெளிவருகிறாள். அருளை மட்டும் நொடிக்கு நொடி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் ஆயிரங்காளி.
பக்திக்கும் முக்திக்கும் மட்டுமல்ல காரைக்கால், சுற்றிப் பார்த்து சுகப்படவும் சுற்றுலா இடங்கள் இன்னும் பல உண்டு.
சீர்காழி, சிதம்பரம், திருக்கடையூர், அமைந்தமங்கலம் (ஆஞ்சநேயர் கோயில்) தரங்கம்படி, மாயவரம், வைதீஸ்வரன் கோவில், செம்பொன்னார் கோயில், நவகிரக ஸ்தலங்கள், திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன் கோயில், அய்யாவாடி, கும்பகோணம், சுவாமிமலை, ஆலங்குடி, திருபுவனம், ஜெயங்கொண்டான், அணைகரை, கங்கைகொண்ட சோழபுரம், 95 கி.மீ. தூரத்தில் தான் பிரஹதீஸ்வரர் கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர், வேளாங்கண்ணி, நாகூர் தர்க்கா, நாகப்பட்டினம், வேதாரண்யம் மற்றும் சப்தவிடங்கள் ஆகிய நகரங்கள் காரைக்காலை சுற்றி அருகில் உள்ளது.

No comments: