Monday, July 14, 2008

மாசூசட்ஸ்

மாசூசட்ஸ் மாகாணத்துல விரல் மாதிரி நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு தீபகற்பம்(தீவு!!) தான் இந்த பகுதி. இது ஒரு காலத்தில் நிலத்தோடு சேர்ந்தே இருந்தது. எல்லா பக்கங்களிலும் கடல் சூழ்ந்து ஒரே ஒரு துண்டு பகுதி மட்டும் மாகாணத்தோட ஒட்டிக்கொண்டு இருந்ததை ஒரு பெரிய கால்வாயை வெட்டி இரண்டு பக்க கடலையும் சேர்த்து மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயிரம் ச.கிமீ ( கிட்டதட்ட சென்னை மாநகர அளவு) கொண்ட தீவாகி விட்டது. 115 கடற்கறைகளும், கிட்டதட்ட நிலப்பகுதியில் 50% காடுகளும் ஏரிகளும் நிறைந்தது. மக்கள தொகை; 2 லட்சம்.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தில் சுற்றுலாவுக்கும், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கும், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களுக்கும், வரலாற்று ஆராய்ச்சியாள்களுக்கும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. வரலாற்றை பொருத்தவரை அமரிக்காவின் ஐரோப்பியாவுக்கு எதிரான Rebel கலாசாரத்திற்கு அடிநாதமாக விளங்கும் நிகழ்வுகள் ஆரம்பித்த இடமாக கருதப்படுகிறது. மேலதிக விவரங்களை இங்கு மற்றும் இங்க பார்க்கலாம்.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களை பொருத்தவரை இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் கடல் அரிமானத்தால் இந்த இடம் அழிந்துவிடும் என்கிறார்கள். கடல் சூழ்ந்திருப்பதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பஞ்சமே இல்லை. கடல்வாழ் உயிரினங்கள் குளிர் காலத்தில் தன் குஞ்சுகுளுவான்களோடு கரீபியன் கடலுக்கு சென்று விடும். கோடை காலத்தில் வட அட்லாண்டிக் பக்கம் வந்துவிடும்
இவற்றில் முக்கியமானது திமிங்கிலங்கள். குட்டிகள் போட்டு பாலூட்டும் இனத்தைச் சார்ந்த இவை கடல் மிருகமாக கருதப்படுகிறது. வெய்யில் காலத்தில் பிரம்மாண்டமான உருவமுடைய இவை கடலில் விளையாடுவதை பார்க்க கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். அதற்கென்றே தனியாக whale watching என்று நடத்துகிறார்கள். ஒரு பெரிய படகில் இரண்டு மணி நேரம் கடலுக்குள் போய் பின்பு நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்தால் திமிங்கிலங்கள் விளையாடுவதை பார்க்க முடிகிறது. நான் பார்த்த காட்சிகள் சில.
இங்கு கடற்சிங்கங்களும்(Seal) இளைப்பாறுவதற்கு வரும். Seal watching என்றும் நடத்துகிறார்கள். சுற்றுலாவுக்கு, கடல் உணவு, கடல் சார் விளையாட்டுகளான water skiing, para sailing, boating, fishing, அழகான, ரம்யமான கடற்கரைகளில் சூரியக்குளியல், ஏகப்பட்ட குறுங்காடுகளில் camping, trail walking எனப்படும் இயற்கை நடைப்பயணங்கள், தேசிய பொழுதுபோக்கான Golfing என இரண்டு மூன்று வாரங்கள் தாராளமாக செலவிடலாம். கடற்புரத்தில் அமைந்தள்ள காடுகள் எழில்வாயந்தவை.
கலா ரசிகர்களுக்கும், திருநங்கையருக்கும் Province town என்னும் Capecod ன் விளிம்பு நகரம் ஒரு முக்கியமான இடம். இங்கிலாந்தின் மாற்று கலாசாரமாய் வாழ விரும்பிய Pilgrims கால் பதித்த இடம் இதுவே. மூன்று பக்கமும் கடல், மாலையில் சூரியன் மறைவதைக்காண்பதற்கும், இயற்கை எழிலை படமெடுப்பதற்கும் வரைவதற்கும் இங்கு ஏகப்பட்ட ஓவியர்களை காண முடியும்.
இங்கு வருபவர்களுக்கு நான் பரிந்துரைப்பவை Nobska Light ஹவுஸ் (இந்த பதிவின் தலைல இருப்பது), whale watching, நிச்கேர்சொன் ஸ்டேட் பார்க், Provincetown sunset, Clam சாதர் ( ஒருவகை கடல் உணவு)

No comments: