Monday, July 14, 2008

ஐரோப்பா

ஐரோப்பா
பொதுவாக, இந்தியர்கள் கோடை காலங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கே அதிக அளவில் சுற்றுலா மேற்கொள்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை விரும்புகின்றனர். தற்போது வேறு சில நாடுகளும் இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன.
இது குறித்து காக்ஸ் - கிங்ஸ் நிறுவனத்தின் ஆனந்த் மேலும் கூறும்போது, "இந்திய சுற்றுலா பயணிகள் இவ்வாண்டின் கோடை காலத்தில் வழக்கத்திற்கு மாறாக சீனா மற்றும் கொரியா ஆகிய நாடுகளின் கோடை வாசஸ்தலங்களை கண்டுகளிக்க விரும்புகின்றனர்'' என்று தெரிவித்தார்.
உள்நாட்டு சுற்றுலா
உள்நாட்டிற்குள் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள விரும்பும் இந்தியர்கள் காஷ்மீருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக கோவாவின் இயற்கை காட்சிகளை கண் குளிர கண்டுகளிக்க விரும்புகின்றனர். நெடிதுயர்ந்த மலைப் பகுதிகளைக் கொண்டுள்ள இமாச்சலபிரதேசம் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் தோட்டங்களையும், ஏரிகளையும் கொண்டுள்ள கேரள மாநிலத்திற்கும் சுற்றுலா மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஹோட்டல் துறை
கோடை காலத்தை நிம்மதியாக கழிப்பதற்காக சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை விறுவிறுப்பான அளவில் அதிகரித்து வருவதையடுத்து ஹோட்டல் அறைகளும் 70 முதல் 80 சதவீதம் வரை பதிவாகி வருகின்றன.
இது குறித்து கிராண்ட் குழுமத்தின் தலைவர் - தலைமைச் செயல் அதிகாரி ஃபர்ஹட் ஜமால் கூறும்போது, "எங்களது விடுமுறை இல்ல ஹோட்டல்களில் அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இவ்வாண்டு கோடை காலத்தில் நிறுவனத்தின் வருவாய் சென்ற ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும்'' என்று தெரிவித்தார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திடும் வகையில் ஓபராய் குழுமம், ஐ.டி.சி. ஹோட்டல்கள், தாஜ் ஹோட்டல் குழுமம், பார்க் ஹோட்டல்ஸ் ஆகிய விருந்தோம்பல் துறை நிறுவனங்களும் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
இது குறித்து ஐ.டி.சி. ஹோட்டல் நிறுவனத்தின் துணைத் தலைவர் பவான் வர்மான் கூறும்போது, "கோடை காலத்திற்காக சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதையடுத்து, இவ்வாண்டின் கோடை காலத்தில் நிறுவனத்தின் வருவாய் சுமார் 10-15 சதவீதம் அதிகரிக்கும்'' என்று தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையின் சிறப்பான வளர்ச்சியால் நிறுவனங்கள் பயனடைவதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது உந்து சக்தியாக திகழ்கிறது.

No comments: