Monday, July 14, 2008

மாமல்லபுரம் - பகுதி 3

தர்மராஜ இரதம் என அழைக்கப்படும் கோயிலானது, மாமல்லபுரத்திலுள்ள புகழ் பெற்ற பஞ்சபாண்டவர் இரதங்கள் எனப் பரவலாக அறியப்படுகின்ற ஒற்றைக் கற்றளிகளில் ஒன்றாகும். இக்கோயிலின் மேல் தளமொன்றில் காணப்படுகின்ற கல்வெட்டு ஒன்றின் மூலம் இதன் பெயர் ஸ்ரீ அத்யந்தகாம பல்லவேச்சுர கிருஹம் என அறியப்படுகின்றது. இதன் மூலம் இது அந்யந்தகாமன் என்னும் விருதுப்பெயர் கொண்ட பல்லவ மன்னன் ஒருவனால் கட்டப்பட்டது என்பது தௌதவு. எனினும் இவ் விருதுப்பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட பல்லவ மன்னர்களைக் குறிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இராஜசிம்மன் எனப்படுகின்ற இரண்டாம் நரசிம்மனே இங்குள்ள கற்றளிகளைக் கட்டுவித்தவன் எனச் சிலரும், இவை முதலாம் நரசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது என வேறு சிலரும் நிறுவ முயன்றுள்ளனர்.

No comments: