Monday, July 14, 2008

கன்னியாகுமரி - பகுதி 2

இந்தியாவின் தென்முனையில் அரபிக் கடல் , இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா இணையம் இடைத்தில் உள்ளது கன்னியாகுமரி. பார்வதி தாயார் தனது கன்னி பருவத்தில் சிவனை மண முடிப்பதற்காக எழுந்தருளியுள்ள பழமைவாய்ந்த குமரி அம்மன் கோவிலின் பெயரால் இம்மாவட்டம் கன்னியாகுமரி என்று பெயர் சூட்டப்பட்டது. ஏழு வண்ண மணல்களை இங்கு காணலாம். புராண கதைகளில் சிவன் பார்வதியின் திருமணத்தின் போது இந்த வண்ணங்கள் உருவானதாக நம்பப்படுகிறது. மனதை தூண்டும் எழில்மிகு சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் காண சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகின்றனர்.  
குமரி அம்மன் கோவில்: குமரி அம்மன் கோவிலில் சிவனையை கைப்பிடிக்க பார்வதியை தாயார் கன்னி தெய்வமாக அழகுற காட்சியளிக்கிறார். அம்மனின் வைர மூக்கூத்தி உலகில் மிகவும் புகழ்பெற்றது. கடற்கரையில் அமைந்திருக்கும் இக்கோவிலை வழிபட இந்தியாவின் அனைத்து பகுதியிலிருந்தும் யாத்திரகர்கள் வருகின்றனர். இக்கோவிலினுள் இந்துக்களை மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். சுவாமி விவேகானந்தர் நினைவுச்சின்னம்: தத்துவ அறிஞர் சுவாமி விவேகானந்தரின் நினைவுச்சின்னம் கன்னியாகுமரியின் கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் அமைந்திருக்கும் ஒரு சிறிய பாறைத்தீவு. 
திருவள்ளுவர் சிலை: திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் நினைவாக விவேகானந்தர் நினைவிடத்திற்கு அருகாமையில் அமைக்கப்பெற்றுள்ளது மிக உயரமான திருவள்ளுவர் சிலை. இச்சிலை 2000-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 
காந்தி நினைவிடம்: கன்னியாகுமரியில் மகாத்மா காந்தி அஸ்தி கரைப்பதற்கு முன் வைத்திருந்த இடத்தில் அவர் நினைவாக ஒரு நினைவுச்நின்னம் கட்டப்பட்டுள்ளது. சூரியனின் ஔத நேரடியாக இவ்விடத்தில் படுவது இதன் சிறப்பாகும். 
காமராஜர் மணி மண்டபம்: இந்திய தேசிய காங்கிரசின் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான சுதந்திர போராட்ட வீரர் ஸ்ரீ காமராஜரின் நினைவுச்சின்னமாக விளங்குகிறது காமராஜர் மணி மண்டபம். இந்த நினைவுச்சின்னம் காமராஜரின் அஸ்தியை கரைப்பதற்கு முன் வைத்திருந்த இடத்தில் கட்டப்பட்டது. 
அருங்காட்சியகம்: தமிழக அரசால் கன்னியாகுமரியில் கடற்கரை ரோட்டில் அருகாட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மரச்சிற்பங்கள் , பழமையான நாணயங்கள் , பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் உபயோகித்த பொருட்கள் போன்றவற்றை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 
தனுமலையான் கோவில்: கன்னியாகுமரியிலிருந்து 13 கி.மீ தொலைவில் சுஷிந்திரத்தில் உள்ளது தனுமலையான் கோவில். இங்கு முப்பெரும் கடவுளான சிவன், விஷ்ணு, பிரம்மன் எழுந்தருளியுள்ளார்கள். இத்திருத்தலம் சிற்ப வேலை நிறைந்த கோபுரம், இசை தூண்கள், பல்வேறு காலக்கட்டங்களை சேந்த கலை பொருட்கள் முதலியவற்றை கொண்டுள்ளது. 
குமரகோவில்: கன்னியாகுமரியிலிருந்து 34 கி.மீ தொலைவில் பசுமை நிறைந்த மலைக்குன்றில் அமைந்துள்ளது குமர கோவில் . சுப்பிரமணிய கடவுள் எழுந்தருளியுள்ள இக்கோவில் கட்டட நிர்மான கலை மற்றும் அருகாமையிலுள்ள பெரிய ஏரிக்கு பெயிர் பெற்றது. 
நாகர்கோவில்: நாகர்கோவில் என்ற பெயர் கடவுள் நாகராஜன் பெயரில் அழைக்கப்படுகிறது. 15-ம் நூற்றாண்டை நினைவுப்படுத்தும் வகையில் நாகர்கோவிலுள்ள சென்ட் சேவியர் தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 24-ந் தேதியிலிருந்து 10 நாட்களுக்கு திருவிழா மிக சிறத்தையாக நடைபெறும். நாகர்கோவில் அருகில் உள்ள உலக்கை அருவி சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.
மண்டைகாடு பகவதி அம்மன் கோவில்: கன்னியாகுமரியிலிருந்து 41 கி.மீ தொலைவில் உள்ள மண்டைகாடு பகவதி அம்மன் கோவில் கி.மு 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள அம்மன் 12 அடி புற்று வடிவில் காணப்படுகிறது. மேலும் புற்று வளருவதாக கருதப்படுகிறது.
குகநாத சுவாமி கோவில்: ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமைவாய்ந்த குகநாத சுவாமி கோவில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது.
தென்னகப்பட்டினம் கடற்கரை: கன்னியாகுமரியிலிருந்து 54 கி.மீ தொலைவில் உள்ள கடலோர நகரம் தென்னகப்பட்டினம். இந்த கடற்கரை மத்திய கிழக்கில் வியபார சேவை உதவி மையமாக உளவுகிறது. இங்கு 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளவாசல் உள்ளது. தெளிந்த நீருடன் அமைதியான சூழலில் அமைந்த இந்த கடற்கரை நீந்துவதற்கு ஏற்ற இடமாக விளங்குகிறது.
பத்மநாபபுரம்: கன்னியாகுமரியிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது பத்மநாதப்புரம் பழய கோட்டை. இங்கு ட்ரவன்பூர் மன்னர்கள் வாழ்ந்த அரண் மணை இராமாயன கதையில் நடந்த சம்பவங்கள் சித்தரிக்கப்பட்ட பலகை உள்ள இராமசாமி கோவில் போன்றவை புகழ்பெற்று விளங்கும் இடங்களாகும்.
பேச்சிப்பாறை அணைக்கட்டு: கன்னியாகுமரியிலிருந்து 56 கி.மீ தொலைவில் பேச்சிப்பாறை அணைக்கட்டு உள்ளது. இங்குள்ள படகு சவாரி பெருமளவிலான சுற்றுலா பயணிகளை கவருகின்றது.
உதயகிரி கோட்டை: கன்னியாகுமரியிலிருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள உதயகிரி கோட்டை 18-ம் நூற்றாண்டில் மார்தாண்ட அரசரால் கட்டப்பட்டது. இங்கு ஜெனரல் டீ லெனாயின் சமாதி உள்ளது.
மாத்தூர் தொங்கும் பாலம்: ஆசிய கண்டத்தில் மிகவும் உயரமானதும் நீளமானதாகவும் விளங்குகிறது மாத்தூர் தொங்கு பாலம். 1966-ம் ஆண்டு 115-அடி உயரம் ஓரு கி.மீ நீளம் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இப்பாலத்திற்கு படிக்கட்டுகள் அமைத்துள்ளன.
முட்டம் கடற்கரை: கன்னியாகுமரிலிருந்து 32 கி.மீ மற்றும் நாகர்கோவிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது புகழ்பெற்ற முட்டம் கடற்கரை. கடலினுள் மூழ்கியுள்ள மிக உயரமான பாறைகள் மற்றும் இயற்கையான நிலக்காட்சி இந்த கடற்கரைக்கு சிறப்பு சேர்க்கின்றன. வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கும் கலங்கரை விளக்கம், சூரிய அஸ்தமனம் மேலும் முட்டத்திற்கு அழகு சேர்க்கின்றது.

No comments: