Monday, July 14, 2008

உத்திரசுவாமி திருக்கோயில்

தலைநகர் புதுதில்லியில் உள்ளது உத்திரசுவாமி திருக்கோயில். தில்லியில் ராமகிருஷ்ணாபுரத்தில் ஒரு சிறு குன்றின் மீது அமைந்துள்ள இவ்வாலயம் ஓர் மலைக்கோயிலாகும். இக்கோயிலில் குடிக்கொண்டிருக்கிறார் சுவாமிநாதப் பெருமாள். ஏற்கெனவே ஆறு படைவீடுகள் உள்ள நிலையில் இவ்வாலயம் ஏழாம் படைவீடு என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பெருமையும், சிறப்பையும் பெற்று விளங்குகிறது. மேலும் மலைமந்திர் என்றும் அழைக்கப்படுகிறது.
இம்மலையின் அடிவாரத்தில் ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீ சுந்தரேஸ்வரர் மற்றும் தேவி முகாம்பிகை கோயில்கள் அமைந்துள்ளன. பண்டைய சோழர்காலத்து கோயில்களை போன்றே சுவாமிநாத கோயில் கட்டப்பட்டுள்ளது. அதுபோல் விநாயகர், சுந்தரேஸ்வர் மற்றும் தேவி மூகாம்பிகை கோயில் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களை போல் கட்டப்பட்டுள்ளது சிறப்பு.
மலைகோயிலுக்கு செல்லும் வழியில் நவகிரகங்களுக்கான கோயிலும், ஆதி சங்கர ஹாலும் அமைந்துள்ளது. இந்த ஹாலில் தினமும் பஜன்களும், தியானங்கள் மற்றும் பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.
கடந்த 1973ஆம் ஆண்டு ஜுன் மாதம் சுவாமிநாதப் பெருமாள் கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதுபோல் கற்பக விநாயகர், சுந்தரேஸ்ர் மற்றும் தேவி மூகாம்பிகைக்கான கோயில்களான கும்பாபிஷேகம் 1990ம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்றது. அன்று சுவாமிநாத பெருமாளுக்கு ஜுரோண்தரனா கும்பாபிஷேகமும் நடைபெற்றது சிறப்பு.
அன்று முதல் உலக நன்மைக்காக பல்வேறு ஹோமங்களும், யாகங்களும் தொடர்ந்து இக்கோயில்களில் நடைப்பெற்று வருகின்றன. பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவனை தரிசித்து செல்கின்றனர்.
இந்நிலையில் உலக அமைதி, சமயநல்லிணக்கம் மற்றும் தேச சுபிட்சம் ஆகியவற்றுக்காக வருகிற கடந்த ஜுன் மாதம் முதல் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு பன்னிரு சிவாச்சாரியர்களைக் கொண்டு நாள் ஒன்றுக்கு ஏழு ஆவர்த்திகள் வீதம் பத்தாயிரம் சகஸ்ரநாமங்கள் அடங்கிய கோடி அர்ச்சனை நடைபெற்று வருகிறது.
அர்ச்சனை ஒன்றுக்கு ரூ. 400 செலுத்தி இக்கோடி அர்ச்சனையில் பங்கேற்று பிரசாதத்துடன், ஒரு பக்கம் சுவாமியின் திருவுருவமும், மறுபக்கம் ஷட்சக்கரமும் பொறித்த வெள்ளிப் பதக்கம் ஒன்றை நினைவுச் சின்னமாக பெற்றுக்கொள்ளும்படி பக்தர்களை இத்திருக்கோயில் ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
நேரில் வரமுடியாதவர்கள் "S.S.S.S.Samaji - Koti Archanai A/c" என்ற பெயரில் மணியார்டரோ அல்லது டிமாண்ட் டிராப்ட்டோ அல்லது Cheque payable at Delhi என்ற முகவரில் தங்களது கோத்திரம், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை தெரிவித்து கீழ்கண்ட விலாசத்திற்க நன்கொடை செலுத்தி பிரசாதத்தை தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments: