Monday, July 14, 2008

தாஜ்மகால்

இந்திய சுற்றுலா என்றாலே எவருக்கும் முதலில் ஞாபகம் வருவது தாஜ்மகால் தான். பெரும் புகழ் வாய்ந்த உலக அதிசயமான தாஜ்மகால் 1631 வருடம் தொடங்கி 22 ஆண்டுகள் இருபதாயிரம் பணியாளர்களைக் கொண்டு ஆக்ராவில் யமுனா நதிக்கரையில் ஷாஜகான் என்ற முகலாய்ப் பேரரசரால் இறந்துபோன மும்தாஜ் என்ற தன் காதல் மனைவிக்காகக் கட்டப்பட்டது. இது உலகின் உன்னத காதல் சின்னமாகக் கருதப்படுகிறது. தாஜ்மகால் உலக அதிசயம் என்பது மீண்டும் 2007ல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 புதிய உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள அறக்கட்டளை ஒன்று உலகம் முழுவதும் நடத்திய வாக்கெடுப்பின் இறுதியில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு நடந்தது. தொலைபேசி, இணையம், குறுஞ்செய்தி ஆகியவை மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வாக்களித்தனர். 7.7.2007 அன்று 10 கோடி பேர் பங்கேற்று தேர்வான புதிய உலக அதிசயங்களுள் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தது, இந்தியாவின் தாஜ்மகால்தான். இந்த அறிவிப்பால், தாஜ்மகாலை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இந்தியாவுக்கு வரும் பல லட்சம் வௌதநாட்டுப் பயணிகளில் பாதிக்கும் அதிகமானோர் ஆக்ரா சென்று தாஜ்மகாலைப் பார்க்கிறார்கள். இப்போது இது மேலும் அதிகரித்து வருகிறது. டெல்லியின் முதல் முஸ்லிம் பேரரசரான குதுப்புத்தின் அய்பக் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சித் துவக்க அடையாளமாக 1200ம் ஆண்டு கட்டத்துவங்கிய 238 அடி உயரம் 47 அடி அகளம் கொண்ட குதுப் மினார், ஷாஜகான் பேரரசரால் 1618ம் ஆண்டு கட்டப்பட்ட செங்கோட்டை, முதல் உலக யுத்தத்தில் பலியான இந்திய ராணுவத்தினருக்கு அஞ்சலியாக கட்டப்பட்ட இந்திய நுழைவாயில், இந்திய குடியரசுத் தலைவரின் அரசாங்க இருப்பிடமான ராஸ்டிரபதிபவன் போன்று பல சுற்றுலா கவர்ச்சிகள் டெல்லியில் உள்ளன.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஒரு கலாச்சார செழுமை மிகுந்த இடமாகும். யானைகள், ஒட்டகங்கள், பறவைகள் சரணாலயங்கள், திருவிழாக்கள், கோட்டைகள், சொகுசு ரயில்கள், கிராமிய நடனங்கள், கிராமிய இசை, கலைப்பொருட்கள் என்று இங்கே காணக்கூடியவை ஏராளம். இயற்கை அழகு கொஞ்சம் கேரளா, கோட்டை, அணை, கோவில், கடற்கரை, வனவிலங்கு என்று பலவும் கொண்ட ஆந்திரா, மைசூர் அரன்மனை பிருந்தாவனம் போன்ற சிறப்புகளைக்கொண்ட கர்நாடகம், கடற்கரைக்குப் புகழ் வாய்ந்த கோவா, சீக்கியப் பொற்கோவில் உள்ள பஞ்சாப், கஜுராஹோ சிற்பங்களைக் கொண்ட மத்தியப் பிரதேசம் என்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சுற்றுலா சென்று அனுபவிக்க உகந்த இடங்களாய் இருக்கின்றன.

No comments: