Tuesday, July 8, 2008

கலிபோர்னியா

கலிபோர்னியா.கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா நாட்டின் மேற்குப்பகுதியின் தென்பாதியைக் கொண்டிருக்கும் ஒரு பெரிய மாநிலமாகும்.இங்கே 37 மில்லியன் மக்கள் 410 000 சதுர கி.மீ 188 402 சதுர மைல் பரப்பில் வாழ்கிறார்கள்.மக்கள்தொகையில் இம்மாநிலமே ஐக்கிய அமெரிக்காவில் முதலிடம் வகிக்கின்றது.நிலப்பரப்பிலும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் சான் பிரான்சிஸ்கோ போன்றவை இம்மாநிலத்தின் பெரிய நகரங்கள் ஆகும்.சேக்ரமெண்டோ இதன் தலைநகரம் ஆகும்.1769ல் ஸ்பெயின் நாட்டினர் தம்குடியாக்கினர்.ஆனால் 1810.பின்னர் 1846 1848ல் நடந்த அமெரிக்க மெக்சிக்கொ போரில் அமெரிக்கா இப்பகுதையைக் கைப்பற்றியது.1848 1849ல் தங்கம் எடுப்பதற்காக நிகழ்ந்த பெரும் வேட்கையில் இப்பகுதிக்கு 90 000 மக்கள் குடியேறினர்.கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்காவையே முன்னிழுத்துச் செல்லும் பேரியந்திரம் என்றும் கூறுவதுண்டு.கலிபோர்னியா மட்டுமே ஆண்டுக்கு 2005 ஆண்டின் கணக்குப்படி 1.55 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய பொருள் உற்பத்தி செய்கின்றது.உலகிலேயே ஏழு நாடுகள்தான் இம்மாநிலத்தைவிட பெரிய பொருளாதாரம் ஆகும்.அமெரிக்காவின் 13 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் 13% கலிபோர்னியாவின் ஆக்கம்.

No comments: