குவேய்சோ மாநிலத்தின் லீபோ மாவட்டம்
--------------------------------------------------------------------------------
cri தென்மேற்கு சீனாவின் குவேய்சோ மாநிலத்தில், அண்ணாம்பு கல் படிவங்களால் உருவான கார்ஸ்ட் புவியியல் பிரதேசம், அதிகமாக காணப்படலாம். லீபோ மாவட்டம், யுன்னான்-குவேய்சோ பீடபூமியில் அமைந்துள்ளது. இதில், காடுகளின் பரப்பளப்பு, 50 விழுக்காட்டுக்கு மேலாகும். உலக நிலையான இயற்கை பாதுகாப்புப் பிரதேசமான, மௌலன் கார்ஸ்ட் காட்டு இயற்கை பாதுகாப்புப் பிரதேசமும், நாட்டு நிலையான Zhang jiang முக்கிய காட்சி இடமும், இங்கு அமைந்துள்ளன. புயி, சுவே, மியௌ, யௌ ஆகிய சிறுபான்மை தேசிய இனங்கள் குழுமி வாழும் மாவட்டமான லீபோவில், சிறுபான்மை தேசிய இனத்தவரின் எண்ணிக்கை, அதன் மொத்த மக்கள் தொகையில் 87 விழுக்காடு வகிக்கிறது.
கடந்த ஆண்டு ஜுன் திங்கள் நியுசிலாந்தில் நடைபெற்ற உலக இயற்கை மரபுச் செல்வ மாநாட்டில், லிபோ மாவட்டத்தைச் சேர்ந்த சீனாவின் தெற்கு கார்ஸ்ட் என்ற திட்டப்பணி, உலக இயற்கை மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதற்கான விண்ணப்பப் பணிக் குழுத் தலைவர் Ji bao shan இது பற்றி அறிமுகப்படுத்தியதாவது: லீபோவின் மதிப்பு, உலக மரபுச் செல்வத்தில் சேரும் மதிப்பீட்டு வறையரைகளுக்குப் பொருந்தியது. அதாவது, சிறப்பான இயற்கை நிலைமை, அழகான இயற்கைக் காட்சிகள், மதிப்பு ஆகியவையும், உயிரினங்களுக்கான பதிவு, நிலவியல் உருவாக்கம் மற்றும் இயற்கை நிலவியல் தனிச்சிறப்பியல்பு அடங்கிய பூகோளத்தின் வரலாற்று மாற்றப்போக்கின் முக்கிய மாதிரிகளையும், எடுத்துக்காட்டுக்கிறது என்றார் அவர். லீபோ மாவட்டத்தில் பெரிய மற்றும் சிறிய Qi kong காட்சி மண்டலங்கள் மிகவும் புகழ்பெற்ற கார்ஸ்ட் காட்சி இடங்களாகும். முதலில், சிறிய Qi kong காட்சி மண்டலத்தை பற்றி கூறுகின்றோம்.
இக்காட்சி மண்டலத்தில் நுழைந்து, உயரமான மலைகள், பசுமையான காடு, தூய்மையான ஆறுகள் மற்றும் ஏரிகள் ஆகியவை, கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. பயணிகள் இந்த பசுமையான சொர்க்கத்தில் நடந்து பார்வையிட்டு மகிழலாம். பெய்ஜிங்கைச் சேர்ந்த பயணி லீ அம்மையார் கூறியதாவது: நீர் காடு எனக்கு மிகவும் பிடிக்கிறது. கற்களில் வளர்ந்த மரங்கள் மிகவும் அழகானவை என்றார் அவர்.
அவர் சொன்ன நீர் காடு என்பது, சிறிய Qi kong காட்சி மண்டலத்தில் மிகவும் புகழ்பெற்ற காட்சிகளில் ஒன்றாகும். தொலைவிலிருந்து பார்த்தால், பெருமளவிலான பண்டைய காடு, ஆற்றுக்கு மேல் மிச இருப்பது போல காட்சியளிக்கும். உண்மையில், ஆற்றிலுள்ள கற்களில் மரங்கள் நிறைந்து வளர்ந்துள்ளன. இது, கார்ஸ்ட் காட்டில் தனிச்சிறப்பியல்பான காட்சியாகும். கார்ஸ்ட் பிரதேசத்தில், தரிசு நிலத்தால், மரங்கள் வளர்ப்பு வாய்ப்பை கைவிடாது. அவை, கற்களின் இடுக்குகளில் ஊட்டச்சட்டை நாடி, சுற்றுப்புறத்தில் விரிந்து, வேர் விடுகின்றன. நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகால வளர்ச்சி மூலம், கற்களில் மரங்கள் வளர்ந்த சிறந்த காட்சி உருவாக்கப்பட்டது.
நீர் காட்டை தவிர, இந்தக் காட்சி மண்டலத்தில் மற்ற ஈர்ப்பு ஆற்றல் மிக்க காட்சிகள் பல உள்ளன. இதில் yuan yang ஏரி, முக்கிய இடம்பெறுகின்றது. yuan yang என்பது, ஒருவகை பறவை. அவை ஜோதிஜோதியாக வாழ்கின்றன. சீனப்பண்பாட்டில் இது, இன்பமான காதலின் சின்னமாக கருதப்படுகிறது. இரண்டு ஏரிகள் இணைந்து உருவாகியதால், yuan yang எரி என, அழைக்கப்பட்டது. ஏரி நீர் பச்சை ஜேட்டைப் போன்றது. எரியில், படகு சவாரிதல், மிகவும் நன்றாக இருக்கிறது.
No comments:
Post a Comment