Friday, July 11, 2008

china34

உள்மங்கோலியாவில் சுற்றுலாப்பயணம்
--------------------------------------------------------------------------------
உள்மங்கோரியாவின் சிலின்கோரேவிலுள்ள குங்பாவ்ராக் புல்வௌத, பெய்ஜிங்கிலிருந்து சுமார் 3 மணி நேர தொலைவு ஆகும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், அழகான குங்பாவ்ராக் புல்வௌத, ச்சிங் வம்ச அரசர்களின் சிறப்பு குதிரைப் பண்ணையாக விளங்கியது. அரசர் குடும்பத்துக்கு குதிரைகளையும், மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியையும், இப்புல்வௌத சிறப்பாக வழங்கியது. கடந்த சில ஆண்டுகளில், உள்மங்கோரியாவின் புல்வௌதயில் மேய்ப்பர் குடும்பச் சுற்றுலா, படிப்படியாக வளர்ச்சியடைந்தது. பயணியர்கள், மேய்ப்பர் குடும்பத்தினருடன் தங்கியிருந்து, மேய்ப்பர் வாழ்க்கையை உணர்ந்து கொள்ளலாம். மேய்ப்பர் ச்சிலின்தொல்ஜி கடந்த சில ஆண்டுகளுக்கு முன், குங்பாவ்ராக் புல்வௌதயில் 5 மங்கோலிய கூடாரங்களை கட்டியமைத்து, பயணிகளை வரவேற்றார். ஒவ்வொரு கோடைக்காலத்திலும், குங்பாவ்ராக் புல்வௌதயில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள வரும் விருந்தினர்கள் மிகவும் அதிகம் என்று, அவர் கூறினார்.

இங்கே, அழகான புல்வௌதயாகும். விருந்தினர்கள், புல்வௌதயில் மேய்ச்சல் செய்து, மேய்ப்பர்களுடன் பல்வேறு பால் உணவுகளைத் தயாரிப்பதை கற்றுக்கொள்ளலாம். இவை எல்லாம், ஊட்டச் சத்து மிக்க, மாசுபடாத உணவுகளாகும் என்றார் அவர். மங்கோலிய இனத்தவர், உற்சாகத்துடன் விருந்தளிக்கின்றனர். விருந்தினர் வீட்டுக்கு வந்த போது, குடும்பத்தலைவர், ஆட்டைக் கொன்று, இறைச்சியைச் சமைத்து, பால் மது வழங்க வேண்டும். தவிர, பால் ஏடு, வெண்ணெய் உள்ளிட்ட உள்மங்கோலிய மேய்ப்பருக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய பால் உணவுகள், ஆட்டிறைச்சி வறுவல் முதலியவை, விருந்தளிக்கும் தலைச்சிறப்பியல்பான உணவுகளாகும். நீல நிற வானம், வெண்ணிற மேகக்கூட்டம், பசும் புல்வௌத, குதிரைக்கூட்டம் ஆகியவை, உள்மங்கோலிய நடையுடை பாவணையின் முழு உள்ளடக்கமும் அல்ல. உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தின் மேற்கு பகுதியிலுள்ள ஒட்டக ஊரான அராசெனும், எர்தோஸ் புல்வௌதயும், கண்கொள்ளாத பாலைவனம் மற்றும் மணல் கடலால் புகழ்பெற்றன.

உள்மங்கோலிய புல்வௌதயின் தேசிய இனப் பண்பாட்டைப் புரிந்துகொள்ள விரும்பினால், மங்கோலிய இனத்தின் மர்மமான வழிபாட்டு விழா குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் நாடுமு விழா என்பது மங்கோலிய மொழியில் பொழுது போக்கு என்பதாகும். இந்நடவடிக்கை, மங்கோலிய இனத்தின் பாரம்பரிய பண்பாட்டு வாழ்க்கை தனிச்சிறப்பியல்பை நன்றாக எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு கோடைக்காலத்திலும் இலையுதிர்காலத்திலும் புல்வௌதயில் நாடாமு விழா நடைபெறுகின்றது. மேய்ப்பர்கள் ஒன்று திரண்டு, குதிரை பந்தயம், மற்போர், வில்வித்தை ஆகிய விளையாட்டுகளில் கலந்துகொள்கின்றனர். இவை, மங்கோலிய இனத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால புல்வௌத பாரம்பரியத்துடன் தொடர்புடையவை.

இவ்வாண்டின் கோடைக்காலத்தில், உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்ட 60ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பொருட்டு, சிறந்த கொண்டாட்ட விழா நடைபெறவுள்ளது. அப்பொழுது, 70க்கும் கூடுதலான புல்வௌத சுற்றுலா பயண ரக நடவடிக்கைகள் நடைபெறும். இது குறித்து, உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா பணியகத்தின் துணை இயக்குநர் YUN DA PING கூறியதாவது: அவ்வபயம், உள்மங்கோலியாவின் 4வது சர்வதேச புல்வௌத பண்பாட்டு விழா, முதலாவது சீன புல்வௌத மேய்ச்சல் பாடல் போட்டி, 18வது நாடாமு விழா, சீன மங்கோலிய இன ஆடை கலை விழா, ஆர் மலை புனித நீர் விழா, வெப்ப மலை தொல் பொருட்கள் கண்காட்சி முதலிய நடவடிக்கைகள், அடுத்தடுத்து நடைபெறும்

No comments: