Friday, July 11, 2008

china41

லூ ச்சி வட்டம்
--------------------------------------------------------------------------------
சீனாவின் சியாங்சூ மாநிலம், புகழ்பெற்ற பண்டைய வட்டங்கள் ஒன்று திரண்ட பிரதேசமாகும். இதில், LU ZHI என்னும் பண்டைய வட்டம், 2500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட காரணத்தால், ஆற்று வளம் மிகுந்த சீன நீர் கிராமப்புறங்களில், முதலாவது வட்டம் என்று போற்றப்பட்டது. இன்று எங்களுடன் சேர்ந்து, நீங்களும் LU ZHI பண்டைய வட்டத்திற்குச் சென்று பார்க்கலாம்.

சியாங்சூ மாநிலத்தின் சூ சோ நகரத்தைச் சேர்ந்த LU ZHI பண்டைய வட்டம், ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. இவ்வட்டத்தின் மேற்கு வாயிலில், ஒரு உயரமான கல் வில்வளைவு உள்ளது. பிறகு, பயணியர்கள், LU ZHI என்னும் பாலத்தைக் கடந்து சென்றால், இவ்வட்டத்தின் சின்னத்தைப் பார்க்கலாம். அதாவது, தனிச்சிறப்பான வடிவுடைய தனிக் கொம்பு கொண்ட மிருகத்தின் சின்னம். அதன் பெயர் லூ துவன்.

No comments: