Sunday, July 13, 2008

china59

சியு ச்சாய்கெவுவ் இயற்கை காட்சித் தலம்
பிரபல இயற்கை காட்சித் தலமான சியு ச்சாய்கெவுவ் மனிதக் குலத்தின் சுவர்க்கம் என அழைக்கப்பட்டுவருகின்றது.
அது, உலக இயற்கை மரபுச் செல்வமாகும். சியு ச்சாய்கெவுவ் என்பது சுமார் 40 கிலோமீட்டர் ஆழமுடைய பள்ளத்தாக்காகும். இப்பள்ளத்தாக்கில் 9 திபெத் இன சிற்றூர்கள் இருப்பதன் காரணமாக இவ்விடம் புகழ்பெற்றுள்ளது.
சுமார் 620 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவுடைய சியு ச்சாய்கெவுவில் ஆட்கள் குறைவு. நவீனமாக்கத்தின் பாதிப்பு இல்லாமல் இயற்கை காட்சி அழகு ஆரம்ப நிலையிலேயே உள்ளது.
இவ்விடத்தில் நுழைந்த பின் காணக் கூடிய இடங்கள் எல்லாம் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும். பச்சை நிற மலைகள், அமைதியான நீர், மரப்பலகைகளால் போடப்பட்ட நீளமான குறுகிய பாதைகள், மலையில் உலா போகும் வெண்ணிற மேகக் கூட்டங்கள் முதலியவை கண்ணைக் கவர்கின்றன.
சில வேளையில், மலைகளுக்கு ஊடே பாய்ந்து ஓடி, பீடபூமியில் தௌதந்த நீருடன் கூடிய ஏரியை உருவாக்கியுள்ளது. சில வேளையில், அது மலையிலிருந்து அருவியாகக் கெவுட்டுகிறது. நீர் வீழ்ச்சி வேறுபட்ட வடிவத்தில் காணப்படலாம்.
அவற்றில் பல பத்து மீட்டர் அகலமுடைய பச்சை நீர், வழுவழுப்பான பட்டுத் துணிப் போல் மலையிலுள்ள ஏரியில் நுழைந்தமை எழில் மிக்கது.

No comments: