Sunday, July 13, 2008

china69

குவாங்சோ நகரம்
தென் சீனாவில் அமைந்துள்ள குவாங்சோ மாநகரம் புகழ்பெற்ற வரலாற்று நகரமும் சுற்றுலா தலமும் ஆகும். குவாங்சோ மாநகரம், மலர் உலகம் என்று அழைக்கப்படுவது மிகையாகாது.
அனைத்துக் குடும்பங்களின் மாடி முகப்பில் அல்லது முற்றத்தில் மணம் வீசும் மலர்கள் வளர்கின்றன. சீனாவின் முதலாவது தெவுகுதி பிரபல வரலாற்றுப் பண்பாட்டு நகரம், சிறந்த சுற்றுலா நகரம் போன்ற பெயர்களை அது பெற்றுள்ளது.

சர்வதேச பூங்கா நகரமென 2001ல் சர்வதேச பூங்கா சங்கத்தால் தேர்வு செய்யப்பட்டது. இந்நகரில், தெவுன்மை வாய்ந்த கோயில்கள், பூங்காக்கள் முதலிய பல உள்ளன.
குவாங்சோ மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய பெய்யுன் மலை இயற்கை காட்சி மண்டலத்தில் பழமை வாய்ந்த உயர்ந்த மரங்கள் காணப்படுகின்றன.

மலையும் நீரும் உள்ள இவ்விடத்தில் மலர்கள் நறு மணம் வீசுகின்றன. பறவைகள் பாடுகின்றன. பெயுன் மலை, இந்நகரின் வடக்கில் அமைந்துள்ளது. அங்கு மலைத்தெவுடர்கள் கம்பீரமாக நிற்கின்றன. குறுக்கும் நெடுக்குமாக, சிற்றாறு ஓடுகின்றது.
மழைக்குப் பின்னரோ, வசந்த காலத்தின் முடிவிலோ, மலைத்தெவுடரை வெண்ணிற மேகம் சூழ்ந்திருப்பது எழில் மிக்க காட்சியாகும்.

No comments: