கோடை கால மாளிகை
பெய்ஜிங் மாநகரின் வட மேற்குப் பகுதியில் அரச குடும்பப் பூங்காவான கோடை கால மாளிகை, கம்பீரமாக அமைந்துள்ளது.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன், மன்னர் சியென்லுங், தம்முடைய தாயாருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்கென கட்டியமைக்கப்பட்ட மாளிகை இது.
உலகில் இதுவரை முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ள அளவில் மிகப் பெரிய, பண்பாட்டு மதிப்பு மிக்கது இது. செயற்கைக் காட்சித் தலமும் இயற்கைக் காட்சியும் செவ்வனே ஒன்றிணையும் அரச குடும்பப் பூங்காவாக இது.
சீன வரலாற்றில் அனைத்து அரச குடும்பப் பூங்காக்களின் அடிப்படைப் பரவல், பண்பாட்டுக் கூறுகள், சிறந்த கட்டடக்கலை ஆகியவற்றைக் கோடை கால மாளிகை கெவுண்டுள்ளது.
குன்மிங் ஏரியும் வென்சுசென் மலையும் இங்கு உண்டு. குன்மிங் ஏரியின் பரப்பளவு, இம்மாளிகையின் பரப்பளவில் 75 விழுக்காடாகும்.
ஏரியில், கூடார மண்டபங்கள் பல உள்ளன. குன்மிங் ஏரியின் வட கரையில் வென்சுசென் மலை அமைந்துள்ளது.
கோடைகால மாளிகை, புகழ்பெற்ற உலகப் பண்பாட்டு மரபுச்செல்வமாகும்.
No comments:
Post a Comment