சிங்ஹைய்-திபெத் பீடபூமியின் முத்து-சிங்ஹைய் ஏரி. அது மிகவும் அழகானது. உலகின் கூரை என்று அழைக்கப்படும் சீனாவின் சிங்ஜைய்-திபெத் பீடபூமியின் வட கிழக்கு பகுதியில், 4500 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள சிங்ஹைய் ஏரி உள்ளது. இந்த விசாலமான ஏரி மாயமானது. பண்டைக்காலம் தெவுட்டு, மக்களின் கவனத்தை ஈர்க்கும் காட்சித் தலமாக விளங்கிவருகின்றது. சிங்ஹைய் ஏரிக்குத் தனிச்சிறப்பான கவர்ச்சி உண்டு. இது தவிர, இப்பகுதியின் வித்தியாசமான தேசிய இனப் பழக்க வழக்கங்களும் மேலும் அதிகமான பயணிகளை ஈர்த்து வருகின்றன.
பறவைத் தீவு, சிங்ஹைய் ஏரியின் மற்றொரு அற்புதம் என்று கூறலாம். அது, இந்த ஏரியின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. அதன் பரப்பளவு 0.8 சதுரக் கிலோமீட்டர். ஒவ்வொரு ஆண்டின் வசந்த காலத்திலும் இடம்பெயரும் பறவைகள், கூட்டம் கூட்டமாகத் தென் சீனா மற்றும் தென்கிழக்காசியாவிலிருந்து இங்கு வருவது வழக்கம்.
No comments:
Post a Comment