Sunday, July 6, 2008
இருக்கன்குடி
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் இருக்கன்குடி.அம்மன் மாரியம்மன் பிறஅம்மன் வாழவந்தம்மன் பிறஅம்மன் ராக்காச்சிஅம்மன் பிறஅம்மன் பேச்சியம்மன் பிறஅம்மன் முப்பிடாரியம்மன் காவல்தெய்வம் கருப்பசாமி முக்கிய தீர்த்தம் வைப்பாறு பிறதீர்த்தம் அர்ச்சுனாநதி.ஊர் இருக்கன்குடி.மாவட்டம் விருதுநகர்.கல்யாண வரம் வேண்டுதல் உடல்உறுப்புகள் குறைபாடுகள் தீர நேர்ந்து கொள்ளுதல்.இது தவிர இருக்கன்குடி தாய்க்கு நேர்த்திகடனாக கயிறு குத்துதல் கெடா வெட்டுதல் ஆகியவையும் உடல் குறைபாடுள்ளவர்கள் உருவபொம்மை செய்து வைத்து வழிபடுகிறார்கள் குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வைத்து தங்கள் நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.அம்மனுக்கு விளக்கு போடுதல் அம்மனுக்கு புடவை சாத்துதல்.கோயிலின் சிறப்பம்சம் அம்மன் தோற்றம் பொதவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி இருக்கும்.ஆனால் இந்த அம்மனோ இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும் அழித்தலும் நானே.நானின்றி ஓர் அணுவும் அசையாது என்பதற்கேற்ப வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கிறார்.இந்த அமைப்பே இருக்கன்குடி மாரியம்மனின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும்.இருகங்கை குடி.இருகங்கைகள் கூடுவதால் இருக்கங் ன் குடி என்ற கூற்றில் இவ்வூர் போற்றப்படுகிறது.அர்ச்சுனன் நதி.இருக்கண்குடி யின் புராணப்பெயர்கள்.இருகங்கைகுடி இருக்கங்குடி தலபெருமைகள்.மருத்துவர்களால் கை விடப்பட்ட அம்மை தீராத வயிற்று வலி கை கால் ஊனம் ஆகிய நோய்கள் குணமாகும் அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது.மருத்துவர்களால் கை விட்ட பின்புகூட இத்தலத்தில் வழிபடுவோர்க்கு கண்பார்வை கிடைக்கும் அதிசயம் நடக்கிறது.ஆறுகள் புடைசூழ நடுவே உள்ள ஆற்றுத் திட்டில் அமைந்துள்ள இத்திருக்கோயிலின் கிழமேல் அளவு 178 அடி தென்வடல் அளவு 149 அடி அழகிய விமானத்துடன் கூடிய கர்ப்பகிரகத்தில் அருட்கலமாகிய மாரியம்மன் எழுந்தருளி இருக்கிறாள்.விருதுநகரிலிருந்து 32 கி.மீ. சாத்தூரிலிருந்து 8 கி.மீ.அருப்புக்கோட்டையிலிருந்து 32 கி.மீ. திருநெல்வேலியிலிருந்து 82 கி.மீ.மதுரையிலிருந்து 90 கி.மீ.தங்கும் வசதி கோயில் விடுதிகள்.பராசக்தி இல்லம் 24 அறைகள் ரூ.60.சக்தி இல்லம் 12 அறைகள் ரூ.20.பொங்கல் மண்டபம் டார்மன்ட்ரி ரூ.115.இவை தவிர குடும்பத்தோடு வரும் பக்தர்கள் சாத்தூர் அல்லது அருப்புக்கோட்டை உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்றுவரலாம்கட்டணம் ரூ.100 முதல் ரூ.300 வரை.போக்குவரத்து வசதி பஸ்வசதி சாத்தூர் அருப்புக்கோட்டை விருதுநகர் ஆகிய ஊர்களிலிருந்து நிறைய பஸ்கள் உள்ளன.அருகில் உள்ள ரயில் நிலையங்கள் சாத்தூர் அருப்புக்கோட்டை மதுரைஅருகில் உள்ள விமான நிலையம் மதுரை.முக்கிய திருவிழாக்கள் ஆடி வௌளி திருவிழா.தை வௌளி திருவிழா பங்குனி வௌளி திருவிழா.தைகடைசி வௌளி பங்குனி கடைசி வௌளியிலும் பெருந்திரளான மக்கள் அம்மன் அருள் பெறக் கூடுவது கண்கொள்ளாக்காட்சி ஆகும்.விழாக் காலங்களில் அம்மன் அருள்பெற அர்ச்சுனா நதியிலும்.மேற்கண்ட மாதங்களின் கடைசி வௌளி க்கிழமைகளில் 10 லட்சம் பக்தர்கள் திரள்வர்.தல வரலாறு.கூட்டம் கூடியது.அவள் நான் மாரியம்மை எனது திருமேனி இங்கே மணலில் புதைந்து கிடைக்கின்றது.என்னை எடுத்து வழிபடுங்கள் என்று வாக்கருளினாள்.அன்று முதல் இன்று வரை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கொடுத்து வருகிறாள்.மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாதலால் வௌளி கிழமைகளில் கூட்டம் அலை மோதும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment