Sunday, July 6, 2008
கேரளா
அருள்மிகு மகாலட்சுமி கோயில்.பள்ளிப்புரம் கேரளா மூலவர் மகாலட்சுமி இடம் பள்ளிப்புரம் தலபெருமைகள் ஆயிரம் வருடம் பழமையான இந்த அம்மன் கடவில் ஸ்ரீ மகாலட்சுமி என அழைக்கப்படுகிறாள்.இவள் அஷ்ட ஐஸ்வரியங்களையும் கொடுக்கும் மகா சக்தியாக திகழ்கிறாள்.முன் கைகளில் நெற்கதிர் கிளி பின் கைகளில் சங்கு சக்கரத்துடன் அருள்பாலிக்கிறாள்.கிழக்கு திசையில் சூரிய நாராயணனை பார்த்துள்ளாள்.சூரிய உதயத்தின் போது மகாலட்சுமி வந்து இறங்கிய குளத்தில் உள்ள நீரை அருந்தி விட்டு.திருமணத்தடையும் நீங்கும் என்பது நம்பிக்கை. கோயிலின் சுற்றுப்பகுதியில் கணபதி ஐயப்பன் சிவன் கொடுங்காளி க்ஷேத்திர பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள்.பொது தகவல்கள் பூஜை நேரம் காலை 5 முதல் 11 மணிவரை மாலை 5.30 முதல் இரவு 8 மணிவரை.இருப்பிடம் ஆலப்புழையிலிருந்து 30 கி.மீ. துணரத்தில் உள்ளது சேர்த்தலா சேர்த்தலை.போன் 0478 255 2805 094464 93183அருகிலுள்ள விமான நிலையம் கொச்சிஅருகிலுள்ள ரயில்வே ஸ்டேஷன் ஆலப்புழை சேர்த்தலை கோயிலின் சிறப்பம்சம் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அதிதேவதை இருக்கும்.மகாலட்சுமி முதலையில் வந்து இறங்கிய இடத்தை இன்றும் பராமரித்து வருகிறார்கள்.கோயிலின் அருகில் மிகப்பெரிய ஏரி உள்ளது.ஏரி நீர் நின்றால் நல்ல தண்ணீராக இருக்க வேண்டும்.இந்த ஏரி நீர் உப்பாக உள்ளது.சிறிய ஸ்பூன் வைத்தே உப்பை எடுக்க வேண்டும்.ஏரியில் உள்ள நீர் உப்பாக இருக்கும்.பக்தர்களின் மீது கருணை கொண்ட அந்த செல்வத்தாய் தான் வந்து இறங்கிய இடத்தில் மட்டும் பக்தர்கள் குடிக்குமளவு தண்ணீருக்கு சுவையைத் தந்திருக்கிறாள்.உப்பின் அளவு குறைவாக இருக்கும்.ஒரே ஏரியில் இப்படி இருவிதமான மாறுபட்ட நிலை இருப்பது லட்சுமியின் சக்தியால் தான்.முதலைக்கு உணவு கேரள கோயில்களில் முதலை உருவம் செய்து வழிபடுவது சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சி.லட்சுமி பூஜை.லட்சுமி இங்கு முதலையில் வந்து இறங்கியதால் ஒரு காலத்தில் இங்கிருந்த முதலைக்கு பக்தர்கள் உணவளித்தனர்.அதை வழிபட்டும் வந்தனர்.தற்போது முதலைக்கு சிலை வடித்து கர்ப்பகிரகத்தின் அருகில் வைத்து விட்டார்கள்.முக்கிய திருவிழாக்கள் புரட்டாசியில் நவராத்திரி மார்கழியில் 12 நாள் களப பூஜை தை மகரசங்கராந்தி தை புனர்பூச நட்சத்திரத்தில் பிரதிஷ்டை தின விழா மாசி மகாசிவராத்திரி மற்றும் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.தல வரலாறு.இவர்கள் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காலத்தில் மகாலட்சுமிக்கென தனிகோயில் கட்டி வழிபாடு செய்து வந்தனர்.இங்கும் மகாலட்சுமியை தொடர்ந்து வழிபட விரும்பினர்.இதன்பின்னர் இங்கு கோயில் அமைக்கப்பட்டது.தன் பக்தர்களைக் காண மகாலட்சுமி காஞ்சிபுரத்திலிருந்து முதலை மூலமாக இத்தலத்திற்கு வந்தாள் என புராணம் கூறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment