Sunday, July 6, 2008

கோட்டை மாரியம்மன்

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில்.சேலம் அம்மன் மாரியம்மன் பிறபெயர்.கோட்டைமாரி சிரசு அக்னிஜூவாலை கருவறை மிகசிறியது விசேசம் பூப்போடுதல் தலமரம் அரச மரம் தீர்த்தம் திருமணிமுத்தாறு கோபுரம் 81 அடி ஊர் சேலம் மாவட்டம் பிரார்த்தனையும் நேர்த்திகடனும் மண் உரு சாத்துதல்.கண்ணடக்கம் சாத்துதல் கண்ணில் பூ விழுந்தாலோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ அம்மனிடம் வேண்டிக்கொண்டால் குணமடையும்.நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பொன்னாலோ அல்லது வௌ஢ளியாலோ தகடுகளாலோ கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாத்துவர்.உருவாரம் சாத்துதல்.அடியளந்து கொடுத்தல் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மூன்று முறை திருக்கோயிலை சுற்றி வருகின்றனர்.இதற்கு அடியளந்து கொடுத்தல் என்று பெயர்.உப்பு மிளகு போடுதல்.நீருடன் கலந்து உப்பு எவ்வாறு கறைந்து விடுகிறதோ அதேபோன்று நோயும் நீங்கிவிடுவதாக ஐதீகம்.இத்தலத்தில் வழிபட்டால் கல்யாணபாக்கியம் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது கோயிலின் சிறப்பம்சம் பூப்போட்டுப் பார்த்தல்.குடும்பத்தில் சிக்கல் தீர திருமணம் நடைபெற நோய் தீர உத்தியோகம் கிடைக்க.இப்படி தங்கள் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க பக்தர்கள் வௌ஢ளை சிவப்பு நிறங்களில் உள்ள பூக்களை தனித்தனி பொட்டலங்களில் கட்டி அம்மன் திருவடிகளில் வைத்து எடுப்பார்கள்.அம்மன் ஈசாணி மூலையை பார்த்தபடி உள்ளது தமிழ்நாட்டிலேயே சிறிய கருவறை உள்ள அம்மன் கோயில் இதுவாகத்தான் இருக்கும்.மற்ற அம்பாள் தலங்களில் மனித தலை இருப்பது போல் அல்லாமல் இந்த அம்மனின் காலடியில் தாமரை மொட்டு உள்ளது.நைவேத்தியம் படைக்கப்படுவதில்லை.மாறாக இத்தலத்தில் எடுத்து அம்பாளுக்கு ஊட்டியே விடப்படுகிறது என்பது சிறப்பம்சம்.சேலம் நகரின் மத்தியில் உள்ளது.கட்டணம் ரூ.200 முதல் ரூ.800 வரை.போக்குவரத்து வசதி சேலம் நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் பக்தர்கள் எளிதாக கோயிலை அடையலாம் அருகிலுள்ள ரயில் நிலையம் சேலம் அருகிலுள்ள விமான நிலையம் கோவை முக்கிய திருவிழாக்கள் ஆடித்திருவிழா இது இத்தலத்தின் மிகப்பெரிய விழா ஆகும்.இது தொன்று தொட்டு வரும் நிகழ்ச்சி ஆகும்.இத்திருவிழா மொத்தம் 15 நாட்கள் நடைபெறும்.பூச்சாட்டுதல் கம்பம் நடுதல் சக்தி அழைப்பு சக்தி கரகம் உருளுதண்டம் பொங்கலிடுதல் மகா அபிசேகம் ஆகியவை முக்கிய அம்சங்கள் ஆகும்.இவ்விழாவின்போது 7லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வணங்குவது பிரம்மாண்டமான காட்சி ஆகும்.இவை தவிர இத்திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி.நவராத்திரி தீபாவளி திருக்கார்த்திகை தைப்பொங்கல் மகாசிவராத்திரி.

No comments: