Tuesday, July 8, 2008
குவாங் சூங் கோயில்
உள்மங்கோலியாவிலுள்ள குவாங் சூங் கோயில்.சீனாவின் உள்மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தைச் சேர்ந்த ஹேலன் மலை அடிவராரத்தில் நீண்ட வரலாறுடைய திபெத் புத்த மதக் கோயிலான குவாங் சூங் கோயில் அமைந்துள்ளது.உள்மங்கோலியாவின் அலாசானைச் சேர்ந்த குவாங் சூங் கோயில்.உள்ளூர் மக்களால் தெற்கு கோயிலாக அழைக்கப்படுகிறது.இக்கோயிலின் சுற்றுப்புறத்தில் மரங்களும் மலர்களும் புற்களும் வளர்ந்து காணப்படுகின்றன.காடுகளில் பறவைகளின் ஒலியைக் கேட்கலாம்.கோயிலின் தென்பகுதியில் தூய்மையான சிறு நதி உள்ளது.உலிச்சி என்னும் லாமா எமது செய்தியாளர்களை வரவேற்க வௌதயே வந்தார்.அவர் குவாங் சூங் கோயிலில் சுமார் 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார்.இக்கோயிலின் கட்டிடங்களை எமது செய்தியாளரிடம் அவர் அறிமுகப்படுத்தி கூறியதாவது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment