Sunday, July 6, 2008
மகாபலிபுரம்
அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் கோயில்.மகாபலிபுரம் மூலவர் ஸ்தலசயனப்பெருமாள் உற்சவர் உலகுய்ய நின்றான் தாயார்.நிலமங்கைத் தாயார் தலவிருட்சம் புன்னை மரம் தீர்த்தம் புண்டரீக புஷ்கரணி மங்களாசாசனம் பூதத்தாழ்வார் சிறப்பு பூதத்தாழ்வார் அவதார தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று.தரிசனம் கண்டவர்கள் புண்டரீக மகரிஷி ஊர் மகாபலிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தல வரலாறு மாமல்லபுரம் பகுதியிலுள்ள காடுகளில் புண்டரீக மகரிஷி என்பவர் தவம் செய்து வந்தார்.பறித்த பூக்களை கூடையில் வைத்துக்கொண்டு செல்லும் போது அங்கிருந்த கடல் வழியை அடைத்து கொண்டிருந்ததை கண்டு திகைத்தார்.பக்திபெருக்கால் கடலில் வழி ஏற்படுத்த தன் கைகளால் கடல் நீரை இரவு பகலாக வௌதயே இறைக்க ஆரம்பத்தார்.இவரது பக்திக்கு மெச்சிய பெருமாள் ஒரு முதியவர் வடிவம் எடுத்து வந்து இவரிடம் சாப்பிட உணவு கொடுக்குமாறு கேட்டார்.இந்த நிலையிலும் அவருக்கு உணவு கொடுக்க நினைத்தார் மகரிஷி.உடனே தன் கையில் வைத்திருந்த மலர்க்கூடையை முதியவரிடம் கொடுத்து.இதை வைத்திருங்கள்.நான் சென்று உணவு கொண்டு வருகிறேன் என்று கூறி சென்றார்.இதைக்கண்டு ஆனந்தமடைந்த மகரிஷி பெருமாளே நான் என்றென்றும் தங்கள் பாதத்தருகில் அமரும் பாக்கியம் தந்தருள வேண்டும் என வேண்டினார்.பெருமாளும் அவ்வாறே வரம் தந்தார்.சயன திருக்கோலத்தில் காட்சி தந்ததால் தலசயனப்பெருமாள் என அழைக்கப்படுகிறார்.சிறப்பம்சம் பெருமாள் கையில் தாமரை மொட்டுடன் நிற்கிறார்.108 திருப்பதியில் கையில் தாமரை மொட்டுடன் நிற்கும் உற்சவர் இவர் மட்டும் தான்.தன் கையில் உள்ள தாமரையை மூலவரின் பாதங்களில் சேர்ப்பப்பதாக ஐதீகம்.2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாமல்லபுரம் சிறந்த கடற்கரை நகரமாக விளங்கியது.இங்கு பல்லவர் கால சிற்பங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது.இத்தலத்தை திருமங்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.ஒரு காலத்தில் இங்கு ஏழு கோயில்கள் இருந்ததாகவும் அப்போது இத்தலத்திற்கு ஏழு கோயில் நகரம் என்ற பெயர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இவை கடல் சீற்றத்தினால் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டன.அதன் பன் பல்லவ மன்னன் ராஜசிம்மன் 3 கோயில் கட்டினான்.அதில் இரண்டு கடல் சீற்றத்தால் அழிக்கப்பட்டு விட்டன.மிஞ்சிய ஒன்று தான் தற்போதுள்ள கோயில்.இதுவும் கடல் அலைகளால் தாக்கப்பட்டு வருகிறது.இதை மனதில் கொண்டோ என்னவோ 14ம் நுணற்றாண்டில் விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குசன் மாமல்லபுரம் நகருக்குள் ஆகமவிதிப்படி கோயில் கட்டி இங்கிருந்த பெருமாளை பிரதிஷ்டை செய்தார்.இவருக்கே தற்போது வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.12 ஆழ்வார்களுள் பூதத்தாழ்வார் இத்தலத்தில் அவதரித்தவர்.இங்குள்ள பெருமாள் தன் வலது திருக்கரத்தை தன் மார்பன் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார்.இத்தல பெருமாளை தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்டநாதனை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.பூஜை நேரம் காலை 7 முதல் 12மணி மாலை 3 முதல் 8 மணி.இருப்பிடம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மகாபலிபுரத்தில் கோயில் உள்ளது.போன் 044 2744 3245அருகில் உள்ள ரயில் நிலையம் செங்கல்பட்டுஅருகில் உள்ள விமான நிலையம் சென்னை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment