Tuesday, July 8, 2008
புதுச்சேரி
புதுச்சேரி ஆங்கிலம் Puducherry எனவும் பாண்டிச்சேரி புதுவை எனவும் அழைக்கப்படும் இந்நகரம் தென்னிந்தியாவில் தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரில் இருந்து 170 கல் தொலைவில் வங்கக் கடலோரத்தில் அமைந்த இடம்.இது புதுவை மாநிலத்தின் தலைநகரும் கூட.ஆந்திர மாநிலத்தின் அருகாமையிலுள்ள ஏனாம் நகரும் தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையிலுள்ள காரைக்கால் நகரும் கேரள மாநிலத்தின் அருகிலுள்ள மாஹே நகரும் இந்த மாநிலத்தின் அங்கமாகையால் ஆங்கிலம் பிரெஞ்சு தமிழ் மொழிகளுடன் தெலுங்கு மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.[தொகு] புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி.புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி என்பது மகாகவி பாரதி புதுவைக்கு வருவதற்கு முன்பிருந்தே துவங்கிய ஒன்று.அந்த வழியில் மகாகவி பாரதியார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தேவநேயப் பாவாணர் முதலான அறிஞர் பெருமக்கள் இலக்கியத் தொண்டினை பின்பற்றி புதுவையின் கவிஞர் பெருமக்கள் பண்ணார் தமிழன்னைக்கு முத்தாரம் சூட்டி உலக அரங்கில் முன்னிறுத்த பெரும் பாடுபட்டனர் என்று சொன்னால் அது மிகையல்ல.பல பிரெஞ்சு இலக்கியக் கழகங்கள் இன்றும் இங்கு இயங்கி வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment