Monday, July 7, 2008

புன்னைநல்லூர்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்.புன்னைநல்லூர் அம்மன் மாரியம்மன் பிறபெயர்.முத்துமாரி பெருமை சுயம்பு சிறப்பு ஸ்ரீசக்கரம் அம்பிகை துர்க்கை தலமரம் வேம்புமரம் தீர்த்தம் வெல்லகுளம் ஊர் புன்னைநல்லூர் பழையபெயர்.புன்னைவனம் மாவட்டம்.இத்தலத்தில் தங்கி வழிப்பட்ட சில தினங்களில் அம்மை இறங்கி குணமாகி விடுகிறது.தவிர தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் உடம்பில் சொறி சிரங்கு உள்ளவர்கள் உடம்பில் கட்டிகள் ஏற்பட்டு தொல்லை உள்ளவர்கள் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரால் கூட கைவிடப்பட்டவர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்து குணமடைகிறார்கள்.மேலும் வேலை வாய்ப்பு தொழில் விருத்தி.உத்தியோக உயர்வு அம்மை நோய் கண்டவர்கள் அம்மை இறங்கியவுடன் அம்மனுக்கு மாவிளக்கு போடுகிறார்கள்.குறிப்பாக கண் நோயால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் கண்ணில் மாவிளக்கு போடுகின்றனர்.வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் வயிற்றில் மாவிளக்கு போடுகின்றனர்.உடம்பில் கட்டிகள் இருந்து குணமானவர்கள் வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கிப் போடுகிறார்கள்.சொரி சிரங்கு இருந்தவர்கள் உப்பு வாங்கிப் போடுகின்றனர்.ஆடு மாடு கோழி காணிக்கை தருகின்றனர்.கணவருக்காக நேர்ந்து கொண்ட பெண்கள் திருமாங்கல்யம் சாத்துதலை நேர்த்திகடனாக செய்கின்றனர்.முடிக்காணிக்கை பால்குடம் எடுத்தல் பால்காவடி அக்னி சட்டி எடுத்தல் போன்றவையும் இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்கள் ஆகும் தவிர திருமணம் வேண்டுவோர் அம்மனுக்கு நிலைமாலை சாத்துகிறார்கள்.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.கோயிலின் சிறப்பம்சம் சுயம்பு அம்மன் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பது ஒரு தனிச் சிறப்பாகும்.மூலவர் அம்மன் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிசேகங்கள் செய்யப்படுவதில்லை.தைலக் காப்பு சாற்றப்படுகிறது.விஷ்ணு துர்க்கைக்கும் அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் நித்தியபடி அபிசேகம் நடைபெறுகிறது.அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைல காப்பு அபிசேகம் நடைபெறும்.அவ்வமயம் ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாகனம் செய்து.அதற்குதான் அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும்.அப்போது மூலஸ்தான அம்பாளுக்கு 48 நாட்களிலும் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம் புணுகு அரகஜா ஜவ்வாது ஆகியவற்றால் அபிசேகம் நடைபெறும்.தைலாபிசேக நேரத்தில் அம்பாளின் தைலகாப்பின்போது உக்ரம் அதிகமாகும்.அதை தவிர்க்க அம்பாளுக்கு தயிர் பள்ளயம் இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும்.உள்தொட்டி நிரப்புதல் அம்மன் சந்நிதிக்கு அருகில் உள்ள தொட்டி உள்தொட்டி என்றும்.பிரகாரத்தை சுற்றி உள்ள தொட்டி வௌதத்தொட்டி என்றும் அழைக்கப்படுகிறது.இவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது.ஒவ்வொரு வருடமும் கோடைநாட்களில் அம்பாளுக்கு முகத்திலும் சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்து தானாக மாறிவிடும் பழக்கம் தற்போதுவரை உள்ளது.இதன் காரணமாகவே அன்னையை முத்து மாரி என்று அழைக்கின்றார்கள்.குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வைசூரி வார்க்கும் சமயத்தில் அம்மனுக்கு பிரார்த்தனை செய்து உள்தொட்டி சுயம்பு வடிவாய் புற்று மண்ணால் ஆன அம்மன் சுமார் 6 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறாள் அம்மன்.அம்மனுக்கு தைல அபிசேகம் மட்டுமே.அபிசேகங்கள் கிடையாது.உள்தொட்டி நிரப்புதல் என்பது இங்கு சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை ஆகும்.அம்மை நோய் 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோர்க்கு குணமாகிவிடுகிறது.பசுமையான வயல்களுக்கு மத்தியில் புன்னைநல்லூர் கோயில் அமைந்துள்ளது.கண்ணைக் கவரும் மராத்திய மன்னர்களது நிறைந்த வௌதமண்டபம் கோயிலுக்குள் நுழைந்தவுடன் காணப்படுகிறது.ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளால் மாரியம்மன் யந்திர பிரஷ்டை செய்யப்பட்டதாகும்.ஆகம விதிப்படி தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் கோயில் இது.இத்திருக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோயில்களில் ஒன்றாகும்.பொது தகவல்கள் தொடர்பு கொள்ள வேண்டிய டெலிபோன் எண் 91 4362 267740.முக்கிய ஊர்களிலிருந்து தூரம் தஞ்சை நகரிலிருந்து கிழக்கே 7 கி.மீ. தங்கும் வசதி குடும்பத்தோடு வருபவர்கள் தஞ்சை நகரில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.தஞ்சை நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.கட்டணம் ரூ.150 முதல் ரூ.600 வரை.தவிர மாவட்ட தலைநகரான தஞ்சாவூரில் தனியார் விடுதிகள் விபரம்.ஹோட்டல் தமிழ்நாடு போன் 21421 21024 21325ஹோட்டல் கணேஷ் போன் 22789ஹோட்டல் சங்கம் போன் 24895ஹோட்டல் பரிசுத்தம் போன் 212466ஹோட்டல் ஓரியன்டல் டவர்ஸ் போன் 31467 கட்டணம் ரூ.200 முதல் 2000 வரை போக்குவரத்து வசதி தஞ்சை நகரிலிருந்து கிழக்கே 7 கி.மீ. தொலைவில் புன்னை நல்லூர் கோயில் இருக்கிறது.தஞ்சையிலிருந்து அடிக்கடி பேருந்துப் போக்குவரத்து வசதி உள்ளதால் கோயிலுக்கு சென்றடைவது எளிது.அருகிலுள்ள ரயில் நிலையம் தஞ்சை அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.முக்கிய திருவிழாக்கள் ஆடி மாதம் முத்துப்பல்லக்கு ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும்.புரட்டாசி மாதம் தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழா.வருடத்தின் சிறப்பு நாட்களான விநாயகர் சதுர்த்தி.தீபாவளி பொங்கல் தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.தல வரலாறு.அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படி கூறவே.அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிரமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார்.1728.அம்பிகையின் அருளை எண்ணி அவ்வரசன் அம்பிகைக்கு சிறிய கோயிலாக கட்டினார்.காலப்போக்கில் இது இவ்வளவு கோயிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.

No comments: