Saturday, July 5, 2008
ஆடுதுறை
ஆடுதுறைப் பெருமாள் கோயில்.கேடிஸ்ரீ சென்ற வாரம் திருக்கண்டியூர் என்கிற திவ்ய ஸ்தலத்தைப் பார்த்தோம்.108 திவ்ய தலங்களில் அடுத்து வருவது ஆடுதுறைப் பெருமாள் கோயில் என்னும் திருக்கூடனூராகும்.சங்கம ஷேத்திரம் என்று அழைக்கப்படும்.மீனாட்சி குடிக்கொண்டிருக்கும் மதுரையில் உள்ள கூடலூர் தென்திருக்கூடலூர் என்றும்.தஞ்சையில் உள்ள இத்திருக்கூடலூர் வடதிருக்கூடலூர் என்றும் அழைக்கப்படுகிறது.தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் அமைந்துள்ள ஆடுதுறை இதுவல்ல.திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள ஒரு சிறிய கிராமமே இந்த ஆடுதுறை ஆகும்.இக்கிராமத்தில் பெருமாள் எழுந்தருளியுள்ளதால்.இத்தலத்திற்கு ஆடுதுறைப் பெருமாள் கோயில் என்று பெயர் வரக்காரணமாயிற்று.தல வரலாறுபிரம்மாண்ட புராணம் பாத்ம புராணம் மற்றும் வடமொழியில் உள்ள கூடற்புராணம் ஆகிய புராணங்களில் இத்தலத்தைப் பற்றி அதிகம் சொல்லப்பட்டுள்ளது சிறப்பு.அன்று பெருமாள் வராஹ அவதாரம் எடுத்து பூமிக்குள் மறைந்தது இந்த இடம்தான் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது.பெருமாள் பூமியை இந்த இடத்தில் பிளந்து உள்புகுந்து ஸ்ரீமுஷ்ணத்தில் வௌதவந்தார் என்று சொல்லப்படுகிறது.அப்போது மகாலட்சுமியை தாங்கி காட்சியளித்தார்.மகாலட்சுமியை காக்கும் பொருட்டு வராஹ அவதாரம் எடுத்து ஸ்ரீமுஷ்ணத்தில் தேவியை அணைத்துக் கொடுத்தாலும் முதலில் இவ்விடத்தில் பூமியைக் கீறி உள்புகுந்ததால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை மட்டும் பாடி ஸ்ரீமுஷ்ணத்தை பாடாது விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.கடும் தவத்தில் ஈடுபட்டான்.மன்னனின் தவநிலையை சோதிக்க எண்ணிய துர்வாச முனிவர் மன்னனின் குடிலுக்கு வந்தார்.மன்னனிடம் முனிவர் அவனின் ஏகாதசி விரதத்தின் பலனை தனக்கு கொடுக்குமாறு கேட்டார.ஆனால் மன்னன் துருவாச முனிவர் வந்திருப்பதையும் பொருட்படுத்தாமல் தனது விரதத்திலேயே மூழ்கியிருந்தான். இந்நிலையில் ஏகாதசி முடிந்து துவாதசி வந்துவிட்டது.அப்போதும் மன்னன் ஸ்ரீமந் நாராயணன் நினைவாக தவத்தில் ஆழ்ந்து இருந்தான்.இதனால் கடும் கோபம் கொண்ட துர்வாச முனிவர் மன்னன் அம்பரிஷிக்கு சாபம் கொடுத்தார்.இதனால் மன்னன் மகாவிஷ்ணுவை துதிக்க மகாவிஷ்ணு துர்வாசர் மீது தனது சக்ராயுதத்தை ஏவ.உடனே எம்பொருமான் சக்ராயுதத்தை திருப்பிப் பெற்றது மட்டுமல்லாமல் துர்வாச முனிவரையும் மன்னித்தார்.பிறகு மன்னன் திருமாலின் வேண்டுகோளின்படி பொன்னியாற்றின் கரையில் திருக்கோயில் எழுப்பி நீண்ட நாள் வழிபட்டு இறைவன் அடி அடைந்தான்.மன்னன் அம்பரிஷனால் கட்டப்பட்ட கோயில்.ஒரு சமயம் பொன்னி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அழிந்து மண்மேடாகி போனது.மூலவரும் உற்சவரும் தாயாரும் அன்று அந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.அப்படி அடித்துச் செல்லப்பட்ட மூலவர் உற்சவர் தாயார் ஆகிய மூன்று விக்ரகங்களும் கரையின் ஒருபுறம் ஒதுங்க மீன் வேட்டைக்கு அப்போது வந்த பரதவர் வலையில் சிக்கின.பின் அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின் இருப்பிடத்தில் வைக்கப்பட்டன.இந்நிலையில் ஆற்றில் வெள்ளம் வடிந்து பழைய நிலை திரும்ப.ஒருநாள் மதுரையில் நிலா முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளின் கனவில் மகாவிஷ்ணு தோன்றினார்.ஆற்றக்கரையில் ஒதுங்கிச் சேரியில் இருக்கும் தமக்கு கோயில் கட்டுமாறு பெருமான் ராணியை கேட்டுக் கொள்ள.ராணி கோயிலை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு ஓடிவந்த மீனவத் தலைவன் இறைவன் தனது சேரியில் இருப்பதை ராணியிடம் தெரிவிக்க ராஜ மரியாதையுடன் அங்கு வழிபாடு செய்த ராணி அந்த சிலைகளை பெற்றுக் கொண்டாள்.பின்பு எங்கு கோயில் கட்டுவது என்று கேள்வி எழ அது ஓரிடத்தில் நிலைத்து நின்று மறைய இறைவனும் குறிப்பால் உணர்த்தினால் என்றே நினைத்த ராணி அந்த ஒளி தோன்றிய இடத்தில் அதாவது ஆடுதுறை கிராமத்தில் கோயில் கட்டினாள்.அன்று முதல் எண்ணற்ற தான தர்மங்களுடன் பெருஞ்சிறப்பான வழிபாடுகள் இக்கோவிலில் நடைபெற்றன.ஆனால் தற்போது இக்கோயில் எந்தவிதமான பராமரிப்பும் இல்லாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.இன்று இக்கோயிலில் சேரியிலிருந்து கொண்டு வரப்பட்ட உற்சவரும் தாயாரும் மட்டும்தான் இருக்கிறது.மூலவர் விக்கிரகம் அருகில் உள்ள வழுத்தூரில் வைக்கப்பட்டுள்ளது.தாயார் பத்மாசனி மற்றும் புஷ்பவல்லி என்று அழைக்கப்படுகிறார்.இத்திருத்தலத்தில் சங்கத்தீர்த்தம் இந்திர தீர்த்தம் காவேரி தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் உள்ளன.மேலும் மன்னன் அம்பரிஷி நந்தக முனிவர் மற்றும் காவேரி ஆகியோருக்கு இத்தலத்து பெருமான் காட்சியளித்து அருள் செய்திருக்கிறார்.இத்திருத்தலத்தில் தவமிருந்ததாக சொல்லப்படுகிறது.நந்தக முனிவரோடு தேவர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து.இங்கு வழிப்பட்டமையால் இத்தலத்திற்கு வந்து வழிபட்டமையால் இத்தலத்திற்கு கூடலூர் என்று பெயர் உருவானதாக கூறப்படுகிறது.இத்தலத்தைப் பற்றி திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்கள் மங்களாசாசனம் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் பொன்னி நதியின் கரையிலிருந்து அழிந்துபட்ட திருக்கோயில்.இன்றைய ஆடுதுறைப் பெருமான் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் மண்மேடிட்டி உள்ளது.இப்பகுதியை பெருமாள் பொட்டல்.இப்பகுதி மக்கள் இன்றும் அழைப்பது சிறப்பு.ராணி மங்கம்மாளுக்கு இக்கோவிலில் சிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இக்கோவிலின் மதில்சுவர் மிக நீண்டு அதிக உயரமானதாக இருப்பது காண்போரை பிரமிக்க வைக்கும் அழகு கொண்டது.ஒருமுறை ஆஞ்சநேயர் விண்வெளியில் சென்று கொண்டிருக்கும் போத இக்கோவிலில் இருந்த கூட்டத்தை வானிலிருந்து பார்த்த ஆஞ்சநேயர்.ஏன் இந்த கூட்டம் என்று இங்கு பார்க்க வந்தாராம்.தனது தெய்வம் ஸ்ரீராமருக்கே மக்கள் இங்கு வழிபாடு எடுக்கிறார்கள் என்று அறிந்து கொண்ட அவர் தாமும் அவர்களோடு கலந்து ஆனந்தக் கூத்தாடி மூர்ச்சித்துக் கிடந்தாராம்.அப்போது ஒளிமயமாக பெருமாள் ஆஞ்சநேயருக்கு காட்சி தந்தாராம்.தன் நினைவாகவே இக்கோவிலின் முன் கூத்தாடும் பாவனையில் ஆஞ்சநேயருக்கு.இன்றும் ஒரு சிறிய கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.முன்னொரு காலத்தில்.ஹரி என்றும் கூவும் பழக்கம் கொண்டிருந்தது.அதை எடுக்க வந்த வேடன் அக்கிளியைச் சுற்றி ஒரு ஒளிவட்டம ருப்பதைக் கண்டு பயந்து ஓடிப்போக தன் உயிர்பிரியும் தருவாயில்கூட அக்கிளி ஹரி ஹரி என்றே முனக இறுதியில் அக்கிளிக்கு திருமால் காட்சி கொடுத்து நீ முன்பிறவியில் வித்யா கர்வத்துடன் அனைவரையும் இகழ்ந்து பேசவே இப்பிறவியில் மட்டும் என் பெயரை மட்டுமே சொல்லிக் கொண்டே திரியும் கிளியாக ஆனாய்.வேடனின் அம்பு பட்டதும் உன் பூர்வ ஜென்ம பாவம் நீங்கிய என்றதும் ஜோதிமயமான மானிட உருப்பெற்று.இறைவனுடன் அக்கிளி கலந்த காட்சியை அங்கு கூடியிருந்த மக்கள் கண்டு ஹரி ஹரி என்று கோஷமிட்டதாக வரலாறு கூறுவதாக இங்கு சொல்லப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment