Saturday, July 5, 2008

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி மாநிலத்திலுள்ள இந்துக் கோயில்கள் சரவணன் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் பிரிட்டிஷாரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தும் பாண்டிச்சேரி மாநிலம் இந்தியத் தன்மையிலான தனித்துவத்தை விடாது காப்பாற்றி வருகிறது.பிரிட்டிஷார் மட்டுமன்றி மொகலாயரும் சிறிது காலம் இங்கு ஆட்சி நடத்தியிருக்கிறார்கள்.சுத்தத்துக்கும் ஒழுங்குக்கும் பெயர் பெற்ற பாண்டிச்சேரி இந்து சமய நெறியையும்.வழிபாட்டுத் தலங்களையும் தொடர்ந்து பேணிக் காத்து வந்திருக்கிறதற்கு.அழியாமல் ஊர் முழுக்க நிரம்பியிருக்கும் கோயில்களே சாட்சி.திருநள்ளாறுக் கோயிலின் இறைவன் தர்ப்பாரண்யேசுவரர்.இறைவி போக மார்த்த பூண் முலையம்மை.கோயிலி தீர்த்தம் நளதீர்த்தம்.பதிகம் பாடியவர்கள் அப்பர் சுந்தரர் சம்பந்தர்.காரைக்காலுக்கு மேற்குப் புறமாக 5கி.மீ தொலைவில் திருநள்ளாறு உள்ளது.இந்தத் தலத்தை சப்தவிடங்கப் பதிகளுல் ஒன்றாகக் கருதுகின்றனர்.சப்தவிடங்கம் என்பது உளிபடாத மூர்த்தி ஏழு என்பதாகும்.இந்தக் கோயிலில்தான் நள மன்னன் வழிபட்டுக் கலி நீங்கி அருள் பெற்றதாகக் கோயில் வரலாறுகள் தெரிவிக்கின்றன.இந்திரனிடத்தில் லிங்கங்களைப் பெற்று வந்த முசுகுந்த மாமன்னன் ஏழு பதிகளுள் லிங்கத்தை நிறுவினான்.அவற்றில் ஒன்றுதான் திருநள்ளாறு லிங்கம் என்பது ஐதீகம்.மதுரையில் சமணர்களோடு திருஞான சம்பந்தர் வாதிட்ட போது நெருப்பிலிடப்பட்ட பதிகங்களுள் இவ்வூர் பதிகங்களும் ஒன்று.அப் பதிகத்துக்கு பச்சைப் பதிகம் என்று பெயர். இங்குள்ள லிங்க மூர்த்தியின் உருவம் தர்ப்பைப் புல்லுடன் சேர்ந்தது போலக் காணப்படுகிறது.சனி பகவான் சிறப்புடன் விளங்கும் தலமும் இங்குள்ளது.அதனைப் பகவான் கோயில் என்கின்றனர். இக்கோயிலில் சொர்ண விநாயகர் வைரவர் உருவங்களும் உள்ளன.கோயிலின் நளதீர்த்தம் ஊருக்கு வட மேற்கில் உள்ளது.திருவேட்டக்குடி க் கோயிலின் றைவன் திருமேனியழகர்.இறைவி சாந்த நாயகி.தீர்த்தம் சந்திரபுட்கரணி.திருஞான சம்பந்தர் பதிகம் பாடிய ஊர்.அர்ச்சுனன் தவம் செய்து கொண்டிருந்த போது சிவபெருமான் வேடனாக வந்து அருள் புரிந்த இடம் திருவேட்டக்குடியாம்.இந்த ஊர் காரைக்காலுக்கு வடகிழக்கில் சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது.திருத்தருமபுரம் இறைவன் யாழ்மூரி நாதேசுவரர்.இறைவி தேனமிர்தவல்லி மதுரமின்னம்மை.கோயிலின் தீர்த்தம் விண்டு தீர்த்தம் பிரம தீர்த்தம்.சம்பந்தர் யாழ்மூரிப் பதிகம் பாடிச் சிறப்பித்த ஊர்.காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து மேற்காக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலமுள்ளது.நான்முகன் தருமபுத்திரர் முதலானோர் இவ்வூர் வந்து வழிபட்டுள்ளதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.இவ்வூருக்கருகில் தக்களூர் எனும் வைப்புத் தலமும் உள்ளது.மாதர் மடப்பிடி.என்னும் பதிகம் பாடி சம்பந்தர் திருத்தருமபுரத்தைச் சிறப்பித்துள்ளார்.

No comments: