Tuesday, July 8, 2008

அராலி

அராலி முத்துமாரியம்மன் கோயில்.மேற்கு நோக்கிய வீதியில் ஆவரம்பிட்டியில் அமைந்துள்ளது.இவ்வம்மன் மலையாள தேசத்திலிருந்து வந்ததாக ஐதீகம்.இக்கோயிலின் வடக்கு வீதியில் அமைந்துள்ள நாவல் மரம் மிகப் பழமை வாய்ந்தது.அடுத்த வௌ஢ளி சனிக்கிழமைகளில் முடிவடையுமாறு உற்சவம் நடைபெறும்.9வது நாள் ஆடு கோழிகளைப் பலியிடும் வேள்வி ஆரம்பத்தில் நடைமுறையில் இருந்தது.பின் நிறுத்தப்பட்டுவிட்டது.ஒவ்வொரு வருடமும் புதிய கமுகு மரத்தின் உச்சியில் நடுவே சிங்கம் வரையப்பட்ட வௌ஢ளைச்சீலையும் நான்கு நிறச்சேலைகளும் கட்டப்பட்டுத் திறந்த வௌத அரங்கில் கொடிமரம் ஏற்றப்படும்.8ம் நாள் சுவாமி வேட்டைக்குச் சென்று திரும்ப வைகறையாகிவிடும்.அடுத்த நாள் பொங்கல் பூசைகள் நடைபெறும்.இதற்குப் பின் சங்காபிஷேகமும் நடந்தேறும்.அன்று பகல் அன்னதானம் வழங்கப்பட்டு மாலை பூந்தண்டிகையில் அம்பாள் வலம்வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

No comments: