Saturday, July 5, 2008

அய்யாவாடி

அருள்மிகு மகா பிரத்தியங்கிராதேவி திருக்கோயில்.அய்யாவாடி அம்பிகை பிரத்யங்கிராதேவி மூலவர் அகத்தீசுவரர் அம்பாள் தர்மசம்பர்த்தினி முகம் சிம்ம முகம் எட்டுதிக்கும் சுடுகாடு விசேசம் நிகம்பலயாகம் தலமரம் ஆலமரம் ஊர் அய்யாவாடி புராணபெயர்.ஐவர்வாடி மாவட்டம் இழந்த பதவிகளை சிறப்புகளை மரியாதைகளை மீண்டும் பெறுவதற்கு இத்தலத்தில் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.அதாவது மீண்டும் ராஜ யோகம் கிடைக்க வேண்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபடுவது விசேசம் சத்ரு பயம் கடன் தொல்லை பில்லி சூன்யம் திருஷ்டி ஏவல் ரணம் காயப்படுத்தல் ரோகம் வியாதி கஷ்டங்கள் செய்வினை கோளாறுகள் விலகவும் உத்தியோக உயர்வு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறல் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள்.ஜாதகத்தில் ஏற்படும் தோஷங்கள் 3 6 8.நேர்த்தி கடன் நிகும்பல யாகம் இந்த யாகம் நடத்துவதே இத்தலத்து முக்கிய நேர்த்திகடன் ஆகும்.முடிந்த அளவு இந்த யாகத்திற்கு தேவையான பொருட்களை அளித்து யாகத்தை பார்த்து அம்மனை வழிபடல் வேண்டும்.விநாயகர் சுப்ரமணியர் சாஸ்தா பைரவர் சரபர் சூலினி வாராகி சுதர்சனம்.பின்பு வைவேத்திய ஹோமம் நடக்கும்.அன்னதானம் 96 வகையான ஹோம சாமான்கள் பழவகைகள் நவதானியங்கள் பட்டுப்புடவை நெய் ஆகியவற்றை குண்டத்தில் போட்டு பின்பு கடைசியாக ஏராளமான மிளகாய் வற்றலை போட்டு யாகம் நடத்துகிறார்கள்.இந்த யாகம் மிகவும் சக்தி வாய்ந்தது.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.கோயிலின் சிறப்பம்சம் பிரத்யங்கிரா தேவி.கரிய வண்ணமுடையவளாய் சந்திர கலை சிரத்தில் பிரகாசிக்க சூலம் பாசம் டமருகம் ஆகிய பல ஆயுதங்களை ஏந்திவாறு இருக்கிறாள்.ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆங்கிரஸ்.இவள் சரபேஸ்வரருடைய நெற்றிக் கண்ணிலிருந்தும் தோன்றியவள்.தலவிருட்சம் இங்கு தலமரமாக உள்ள ஆலமரம் வித்தியாசமானதாக உள்ளது.இந்த மரத்தில் அதாவது ஒரே ஆலமரத்தில் ஐந்து விதமான இலைகள் உள்ள அதிசயத்தை காணலாம்.இலை வடிவங்கள் மாறி மாறி ஆல் அரசு புரசு இச்சி மா என்று ஐந்து வடிவங்களிலும் காணப்படுகிறது.தலபெருமைகள் ஸ்ரீ அதர்வண பத்திரகாளி மகா பிரத்தியங்கிராதேவி திருக்கோயில் இவ்விடம் மட்டுமே உள்ளது.இத்திருக்கோயில் வேறு எங்கும் இல்லை.எட்டுத்திக்கிலும் சுடுகாடுகள் இருக்க அதன் நடுவே உள்ள அமைந்துள்ள கோயில்.இந்த தேவியைப் பற்றி ருக் வேதத்தில் 48 பஞ்சாதிகள் பெருமைப்படுத்துகிறது.18 சித்தர்கள் பூஜித்த தலம் அகத்தியருக்கு அம்பிகை காட்சி தந்த தலம் ஸ்ரீராமர் லட்சுமணர் ஆகியோர் பூஜித்த தலம் இராவணன் மகன் மேகநாதன் இந்திரஜித் நிகும்பல யாகம் செய்ய வேண்டி வந்த தலம்.பஞ்சபாண்டவர்கள் மீண்டும் தங்களுக்கு ராஜ யோகம் கிடைக்க வேண்டி பூஜை செய்த தலம்.இதனால் இவ்வூருக்கு ஐவர்வாடி.அய்யாவாடி என்று பெயர் வந்தது.சனிபகவான் உடைய குமாரர் குளிகன் இந்த தேவியை வழிபட்டு உள்ளான்.ஒரே ஆலமரத்தில் ஐந்து விதமான இலைகள் உள்ள தலம்.பொது தகவல்கள் தொடர்பு கொள்ள வேண்டிய டெலிபோன் எண் 91 435 2463414. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் கும்பகோணம் 7 கி.மீ.தஞ்சை 30 கி.மீ. தங்கும் வசதி குடும்பத்தோடு வருபவர்கள் கும்பகோணம் நகரில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.கும்பகோணம் நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.கட்டணம் ரூ.150 முதல் ரூ.600 வரை.தவிர மாவட்ட தலைநகரான தஞ்சாவூரில் தனியார் விடுதிகள் விபரம்.ஹோட்டல் தமிழ்நாடு போன் 21421 21024 21325ஹோட்டல் கணேஷ் போன் 22789ஹோட்டல் சங்கம் போன் 24895ஹோட்டல் பரிசுத்தம் போன் 212466ஹோட்டல் ஓரியன்டல் டவர்ஸ் போன் 31467 கட்டணம் ரூ.200 முதல் 2000 வரை போக்குவரத்து வசதி கும்பகோணத்திலிருந்து தெற்கில் காரைக்கால் திருநள்ளாறு மார்க்கமாகச் செல்லும் சாலையில் கிழக்கே 5 மைல் தூரத்தில் திருநாகேசுவரம் உள்ளது.இவ்வூரின் அருகிலேயே அய்யாவாடி உள்ளது.அய்யாவாடிக்கு கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.அருகிலுள்ள ரயில் நிலையம் கும்பகோணம் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.முக்கிய திருவிழாக்கள் மிளகாய் வற்றல் யாகம் நிகும்பல யாகம் இந்த கோயிலில் ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் நடக்கும் நிகம்பல யாகம் மிகவும் புகழ்வாய்ந்தது.ஏராளமான அளவில் மிளகாய் வற்றலை தீயில் கொட்டி யாகம் வளர்ப்பர்.சாதாரணமாக ஒரு மிளகாய் வற்றலை தீயில் போட்டாலே நெடியின் வீரியம் தாங்க முடியாத அளவில் இருக்கும்.ஆனால் இங்கு ஏராளமான அளவில் சில சமயம் மூட்டை மூட்டையாக மிளகாய் வற்றலை கொட்டியும் சிறு கமறலோ நெடியோ வருவதில்லை என்பது ஆச்சர்யமான உண்மை.இதை பார்ப்பதற்கு ஒவ்வொரு யாகத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.ஒவ்வொரு மாத அம்மாவாசை தினங்கள் தவிர ஆடி அம்மாவாசை தை அம்மாவாசை தினங்களில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும்.தல வரலாறு ஸ்ரீ பிரத்தியங்கிரா சரபேசுவரருடைய நெற்றிக் கண்ணிலிருந்தும் தோன்றியவள்.நரசிம்மம் என்ற கண்ட பேருண்டத்தை அடக்கவே அவதரித்தாள்.அவள் ஆயிரம் முகங்கள் இரண்டாயிரம் கைகள் சிவப்பேறிய மூன்று கண்கள் கரியநிறம் மிகப்பருத்த சரீரம் பெருங்கழுத்து நீலநிற ஆடை.அவளே உக்ரபிரதியங்கிரா.அந்த தேவி சாந்தம் அடைய சரபரும் தேவர்களும் ரிஷிகளும் எல்லோருமே துதித்தனர்.அவள் விஸ்வரூபம் அடங்கி மகா பிரத்தியங்கிரா தேவியாக காட்சி தந்தாள்.இந்திரஜித் ராமரோடு யுத்தத்தில் தோற்றுப்போய் இவ்விடத்தல் அம்பிகையை வழிபாடு செய்தான்.அம்பிகை ராமருக்கு அனுகிரகம் செய்து விட்டு மறைந்து விட்டாள்.அம்பிகையும் வரம் அளித்தாள்.இதனால் இந்த தலம் இந்திரஜித் வரம் பெற்ற தலம் என்ற சிறப்பு பெற்றது.

No comments: