Tuesday, July 8, 2008

பல்கேரியா

பல்கேரியா.இன்றைய பல்கேரியா ஐந்து நாடுகளுடன் எல்லை கொண்டுள்ளது.வடக்கே டானூப் ஆற்றை ஒட்டி ருமேனியா மேற்கே செர்பியாவும் மாசிடநூனியாவும் தெற்கே கிரீசும் துருக்கியும் கருங்கடலும்.முற்காலத்தில் பல்கேரியாவில் திரேசியம் என்னும் இந்தோ.ஐரோப்பிய மொழி பேசிய திராசியர் வாழ்திருந்தனர்.அதன் பின்னர் பழம் கிரேக்கர்களும் ரோமானியர்களும் இங்கு வாழ்ந்தனர்.அதன் பின்னர் இடைக்காலத்தில் ஐரோப்பாவின் பலம்பொருந்திய பல்கேரியப் பேரரசு இங்கு நிறுவப்பட்டது.இதன் பயனாய் இலக்கியம் கலைப் பண்பாடுளின் தாக்கம் பால்க்கன் பகுதியின் பெரும்பான்மையான இடங்களிலும் கிழக்கு ஐரோப்பாவின் சிலாவிக் மக்கள் இடையேயும் பரவியது.இரண்டாவது பல்காரியப் பேரரசின் வீழ்ச்சியின் பிறகு பல்காரியா 5 நூற்றாண்டுகளுக்கு ஆட்டநூமன் பேரரசுக்குக் கீழ் இருந்தது.பின்னர் 1878ல் பல்காரியா மேண்டும் அரசியல்சட்ட முடியாட்சியுடன் மீண்டும் நிறுவப்பட்டது.இதுவே மூன்றாவது பல்காரியப் பேரரசின் துவக்கம் என்று கூறப்படுகின்றது.இது நேட்டோ .NATO கூட்டுப் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினரான நாடுகளில் ஒன்று.

No comments: