Monday, July 7, 2008
சென்னை
சென்னை மாவட்டம.தமிழ்நாட்டின் முதல் நகரம் சென்னை.350 வருட பாரம்பரியம் மிக்க பழைமையானது சென்னை.1639 இல் சென்னை மாநகருக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.அப்போது ஆட்சி செய்த கிழக்கு இந்திய கம்பெனியின் Francis Day அன்று தான் சென்னைக்கான வித்திடப்பட்டது.சென்னையில் தான் வௌதநாட்டநூடு வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது.ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி 1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது.அனைத்து தரப்பினரும் வந்து தங்கி வியாபாரம் செய்து.வௌதநாட்டுக்கு ஈடாக எல்லா துறைகளிலும் முன்னேற்றம் கண்டு ஒரு மாதிரி நகரமாக திகழ்கிறது.முக்கிய இடங்கள்.Fort St. George.பிரிட்டீஷ்காரர்களால் 1940இல் கட்டப்பட்டது.தமிழ் நாட்டின் சட்டசபை மண்டபம் ஆகும்.சட்டசபை கூட்டங்களும் இயங்குகின்றன.அதனுள் St Mary s Church உள்ளது.Robert Clive என்ற ஆங்கிலேயர் 1680ல் இந்த தேவாலயத்தை இதனுள் கட்டினார்.தொல்பொருள் கண்காட்சியகமும் இங்கு இயங்கி வருகிறது.உயர் நீதி மன்றம் George Town War Memorial Pantheon Complex Rippon Building முதலானவையும் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டவை.Lord Rippon என்ற ஆங்கிலப் பிரபுதான் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தினார்.எனவே இக்கட்டிடம் அவர் பெயராலையே வழங்கப்படுகிறது.தற்போது தமிழ்நாட்டின் மாநகராட்சி அதாவது Corporation என்னும் உள்ளாட்சி அமைப்புகள் இங்குதான் இயங்குகின்றன.1913ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் இந்திய இஸ்லாமிய யூரோப்பிய கலாச்சாரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.வள்ளுவர் கோட்டம்.தமிழ் நாட்டின் கோயில்களுக்கெல்லாம் முன்மாதிரியான தோற்றத்துடன் கூடிய கோட்டம் இது.இங்கு திருவள்ளுவர் இயற்றிய 1330 பாடல்களும் கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டுள்ளது.இங்கு திருக்குறள் ஆராய்ச்சி மையம் ஒன்றும் இங்கு இயங்கி வருகிறது.இதனுள் கல்லில் செதுக்கப்பட்ட தேர் ஒன்று காண்பவர்களின் கண்களை கவரும்.கோடம்பாக்கம்.சினிமா தொழில் செய்யும் தொழிலதிபர்கள் அதிகம் வாழும் இடம் சினிமா கலைஞர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது.கிட்டத்தட்ட 50% படதயாரிப்புக்களும் சினிமாக்களும் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் நடிப்பவர்களும் கலைஞர்களும் அதிகமாக வாழும் இடம்.தென்னிந்தியாவின் Hollywood என்றும் பெயர் பெற்றது.கிண்டி நேஷனல் பார்க்.மான் போன்ற சாகப்பட்சிகள் வாழும் இடமாகவும் கவர்னரின் மாளிகையுடன் கூடிய இடமாகவும் இதனுள் குழந்தைகளுக்கான விளையாடும் இடமும் சிறிய மிருக காட்சி சாலையும் பாம்புகள் பண்ணை ஆகிய பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடம்.மேலும் காந்தி காமராசர் இராஜாஜி இவர்களின் நினைவு இல்லங்கள் இதன் வரிசையில் அமைந்துள்ளது அதற்கு எதிரில் Anna University of Technology Engineering College Central Leather Research Institute ஆகியவை உள்ளன.எலியட்ஸ் பீச்.தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னைக்கு அழகு சேர்க்கும் முக்கியமான இடங்களில் எலியட்ஸ் பீச்சும் ஒன்று.இந்தியாவின் துறைமுகங்களில் ஒன்றான சென்னை துறைமுகம் இங்கு உள்ளது.மேலும் கடற்கரையின் நீண்ட கரையில் அன்னை வேளாங்கன்னி கோயில்.அஷ்டலஷ்மி கோயில்.முதலியன அமைந்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment