Monday, July 7, 2008
கடலூர்
கடலூர் மாவட்டம்.சிதம்பரம்.தில்லை என்ற பெயரும் சிதம்பரத்திற்கு உண்டு.நடராஜ பெருமாள் நடனமாடிய திருத்தலங்களுள் ஒன்று சுமார் 245 கி.மீ. தொலைவில் உள்ளது.நடராஜர் திருக்கோயில்.சிதம்பர நகரின் நடுவில் அமைந்துள்ளது இக்கோயில்.தமிழ்நாட்டின் பழைமையான கோயில்களில் இதுவும் ஒன்று.இங்கு 5 இடங்கள் உள்ளன.நிருத்ய சபா தேவ சபா கனக சபா சிட் சபா ராஜ்ய சபா ஆகியன.சிட் சபாவில் ஆகாய லிங்கம் அமைந்துள்ளது.கனக வாயில் நடராஜரின் நிழல் வீடுகள் உள்ளன.நிருத்ய சபாவில் 6 கால் நடன மண்டபம் உள்ளது.இங்குள்ள கற்களில் அமைந்துள்ள நடன விளக்க கல்வெட்டுகள் வாழ்க்கையின் ரகசியத்தை போதிக்கின்றன.தேவ சபையில் நிர்வாக கமிட்டி கூட்டங்கள் நடைபெறும்.Raja Sabha வில் 100 கால் மண்டபம் உள்ளது.இவை ஒவ்வொன்றும் 103 அடி நீளமும் 58 அடி அகலமும் உடையது.இங்கு மன்னர்கள் தங்களது வெற்றி விழாக்கள் கொண்டாடுவது வழக்கம்.சபாக்களின் மண்டபங்களின் சுற்று 108 விதமான நடன காட்சிகள் அமைந்துள்ளது இக்கோவிலுக்கே உரிய தனிசிறப்பு.தில்லை காளியம்மன் கோவில்.சிதம்பரத்தின் வடக்கு பகுதியில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும் இது.அண்ணாமலை பல்கலை கழகம்.ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகம்.தமிழ் ஆராய்ச்சிக்கும் மேற்படிப்புக்கும்.கர்நாடக இசைப்பயிற்சிகளுக்கும் பெயர் போன பல்கலைக்கழகம்.Festivals.சிதம்பரத்தில் ஆருத்ரா பண்டிகையும் ஆனி திருமஞ்சனம் பங்குனி உத்திரம் நாட்டியாஞ்சலி சிவராத்திரி முதலிய பண்டிகைகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன.பிச்சாவரம்.சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. மேற்கே அமைந்துள்ளது.இங்குள்ள மாஞ்சோலை கண்கவர் சோலையாகும்.இங்குள்ள வாய்க்காலில் கடல் நீர் கலப்பதும் சிறப்பாகும்.நீர் விளையாட்டுகளுக்கு Water games இது ஒரு சிறந்த இடமாகும்.விருதாச்சலம்.சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.மணிமுத்தாற்றின் கரையில் உள்ளது விருதகிரிஸ்வரர் மற்றும் விருதாம்பிகை ஆலயங்கள் இங்குள்ளன.ஷ்ரீமுஸ்னம்.ஷ்ரீ புவரஸ்வாமி திருக்கோயில் இங்குள்ளது.வடலூர்.சிதம்பரத்திலிருந்து 36 கி.மீ தொலைவில் உள்ளது.இராமலிங்க ஸ்வாமிகளின் Sathyagnana Sabai இங்குள்ளது.இங்கிருந்து சிதம்பரத்தின் 4 முக்கிய கோவில்களின் கோபுரத்தை காணமுடியும்.திருவெங்காடு.28 கி.மீ. தொலைவில் உள்ளது.இங்குள்ள சிவாலயத்தில் வழிபாடு செய்வதன் மூலம் எல்லா வெற்றிகளையும் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பும் கிடைக்கும் திருத்தலமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment