Sunday, July 13, 2008

சியுவான்சி காட்சித் தலம்

சியுவான்சி காட்சித் தலம்
மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத்து யிசாங் நகரிலுள்ள சிகுவெய் மாவட்டத்தில் சியுவான்சி காட்சித்தலம் அமைந்துள்ளது. துருவி ஆராய்வது, பொழுதுபோக்கு, சுற்றுப்பயணம் ஆகியவை தழுவிய உயிரின பொழுது போக்கு மண்டலமாக இத்தலம் திகழ்கின்றது. தெப்பப் பயணம், இக்காட்சித் தலத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா நிகழச்சியாகும். உயரமான மலைகள், பள்ளத்தாக்குகள் ஆகியவற்றுக்கூடாக சியுவான்சி சிற்றாறு ஓடுகின்றது. அதன் நீண்ட இரு கரையோரத்தில் எழிலான காட்சி தென்படுகிறது. தெப்பப் பயணத்துக்கு இது மிகவும் பொருத்தமானது. சிகுவெய் மாவட்ட சுற்றுலாப் பயணத்துறையின் தலைவர் சாய்க்ச்சுவான் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது, யாங்சி ஆற்றின் மு மலை இடுக்கு பிரதேசத்தில் மிகவும் சிறந்த தெப்பப் பயண நிகழ்ச்சி இதுவாகும். பயணிகள், தானே பங்கெடுத்து, ஓட்டலாம்.
ஒவ்வொருவரும், பயணிகளுக்கென தயாரிக்கப்பட்ட மேல் சட்டை, யூனியன் அரைக் கால் சட்டை மற்றும் காலணியை வேண்டும். பின், பாதுகாப்புக்கான ஆடையையும் தெவுப்பியையும் அணிய வேண்டும். இரண்டு பயணிகள் ஒரு தெப்பத்தில் பயணம் துவக்குவர். பயணப் போக்கில், தெப்பப் பயணத்தின் மகிழ்வை நேரில் உணர்ந்து கெவுள்ளும் அதே வைளையில், இரு கரையோர எழிலான இயற்கை காட்சியைக் கண்டுகளிக்கலாம். 7 கிலோமீட்டர் நீள தெப்பபயணப்போக்கில், தீவிர நீரோட்டம் மற்றும் அபாயகரமான நீர்ப்பரப்பைச் சந்திக்கலாம். அமைதியான ஆழமான குளமும் காணப்படும்.
தத்தமது அக்கறைக்கிணங்க, சுமார் 3 மணி நேரம் நேரத்தை எப்படி கழிப்பது என்பதைப் பயணிகள் தீர்மானிக்கலாம். முழு மூச்சுடன் தெப்பத்தை ஓட்டுகையில், இயற்கைக்கு அறைகூவல் விடுப்பதில் ஆனந்தத்தை அனுபவிக்கலாம். தவிர, அமர்ந்த வண்ணம், நீரோட்ட்ததுடன் தெப்பப் பயணம் செய்யலாம். பெரும் அலை அல்லது தீவிர நீரோட்டம் என்ற நிலையில் இருக்கும் போதும் பயப்பட வேண்டாம். தலையில் மூங்கில் பட்டையான தெவுப்பி அணிந்த கையில் மூங்கில் கோலைக் கெவுண்ட காவலர்கள் இருப்பர். பயணிகள் அபாய நிலையில் இருக்கும் போது, அவர்கள் உதவிடுவர். தெப்பம் இல்லல் நிலையிலிருந்து விடுபட்டு, தெவுட்ரந்து முன்னேற முடியும். சியுவான் சிற்றாற்றின் கரையோரத்தின் ஆழமற்ற மணல் காட்சித்தலம், பயணிகளுக்கெனஸ, சில ஓய்விடங்களை நிறுவியுளளது. இங்கு பயணிகள் தற்காலிகமாகக் காற்றையும் அலையையும் தவிர்த்த, தமது பெவுருட்களை ஒழுங்கு செய்யலாம். உள்ளூர் குடி மக்கள் விற்கும் பழவகைகளும் வேளாளர் குடும்பம் தயாரிக்கும் சுவைப்பெவுருளும் ருசியானவை. அன்றி, விலையும் மலிவு.
தெப்பப் பயணத்தின் போது ஆடைகள் ஈரமானால் பயணிகளுக்கு குளிர் உணர்வு ஏற்படலாம். அப்படியானால், மலை வாவ் மக்களால் செவுந்தமாகத் தயாரிக்கப்பட்ட மச்சாச் சோள மதுவை அருந்தி, குறிரைப்போக்கலாம். பயணிகள் சிலர், மதுவையும் ஈச்சம் பழத்தையும் வாங்கி, குளம் அருகில் அம்ரந்து மதுவைச் சுவைத்துக்கொண்டே இயற்கைக் காட்சியைக் கண்டுகளிப்பார்கள். பெய்ச்சிங்கைச் சேர்ந்த மென்தேவெய் என்னும் பயணி, கரை ஏறிய பின்னரும், தமது மகிழச்சிச உணர்வை மறைக்க முடியவில்லை. அவர் கூறியதாவது, சிறந்த ஆட்டம், சிறந்த ஆட்டமே. அதிர்ச்சி இருந்தாலும், அபாயம் ஏற்படவில்லை. மிகவும் அதிசயம். வாய்ப்பு ஏற்படும் போது, அடுத்த ஆண்டு நான் இங்கு வருவேன் என்றார். சிகுவெய் மாவட்ட போக்குவரத்து சுற்றுலா நிலையத்தைச் சேர்ந்த பயண வழிகாட்டி சியான்யுன் தெப்பப்பயணம் பற்றிக் குறிப்பிடுகையில், பயணிகள் பலர், மீண்டும் மீண்டும் தெப்பப்யணத்துக்காக எங்கள் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளதாகக் கூறினார்.
இப்பயணம் பற்றி, பயணிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். பலர், ஒருமுறை மட்டுமல்ல, பல முறை தெப்பப் பயணம் செய்தனர். நான் வரவேற்ற பல பயணிகள், ஒரு முறை தெப்பபயணம் செய்துள்ளனர். பின்னர், என்னுடன் தெவுலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவர்களின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் வருவதாகத் தெரிவித்தனர். சியுவான்சி காட்சித் தலத்தில், தெப்பப் பயணம் தவிர, துச்சியா இன ஆடல்பாடலும் மிகுதியும் தனித்துவம் வாய்ந்தது. இளைஞர்களின் இனிய பாடல்களும் மங்கையர்களின் மனமுருகும் ஆடல்களும் பயணிகளின் மனதில் ஆழப்பதிந்துள்ளன. மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கத் தோன்றும். சியுவான்சி காட்சித் தலத்துக்கு வருகை தரும் போது, அங்குள்ள நான்கு முக்கிய வட்டார உற்பத்திப்பெவுருட்களை வாங்கத் தவற வேண்டாம். தேயிலை, கிச்சிலிப்பழம், orchid மலர், கல் ஆகியவை இந்நான்கு பெவுருட்களாகும். அங்குள்ள தேயிலை, தலை சிறந்தது எனப் பாராட்டப்படுகின்றது.

No comments: