சீனாவின் பழங்கால வீடுகள்
சீனாவின் அன்ஹுவெய் மாநிலத்தைச் சேர்ந்த யிசியெ மாவட்டம், செசியெ மாவட்டம் ஆகியவற்றுக்கு அருகில், மிங் வமிச மற்றும் சிங் வமிச கால கிராமங்கள் அமைந்துள்ளன. அவற்றில், சுமார் நூறு ஆணஅடு வரலாறுடைய பழைய வீடுகள் எங்கெங்கும் காணப்படுகின்றன. உலக வரலாற்று பண்பாட்டு மரபுச் செல்வம் என யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட ஹெவுங்சன் கிராமம் அன்ஹுவெய் மாநிலத்தில் மிக அழகான பழங்கால கிராமமாகும். 500 ஆண்டுகள் வரலாறுடைய இந்த சிற்றூர் இம்மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள குன்று பிரதேசத்தில் அமைகின்றது. ஹெவுங்சன் கிராமத்தில், மிங் வமிச மற்றும் சிங் வமிச காலவங்களில் கட்டப்பட்ட 300க்கும் அதிகமான வீடுகள் இன்றுவரை பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. வௌளை சுவர், குறுப்பு ஓடு ஆகியவற்றைக் கண்டு, இந்த வீடுகளில் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் நீண்ட வரலாற்றை அறிந்துகெவுள்ளலாம். பின்யௌ நகரம், சான்சி மாநிலத்தில் சிறிதும் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட ஒரு பழைய நகரமாகும். அதில உள்நாட்டில் மிகவும் முழுமையாக பாதுகாக்கப்பட்ட மிங் வமிச கால நகரச் சுவர், சதுர முற்றத்துடன் கூடிய பழங்கால மாளிகை, ஆயிரம் ஆண்டு வரலாறுடைய தௌ மத கோயில் ஆகியவை உள்ளன.
இந்நகரில், சியௌ குடும்ப மாளிகை, மிகப் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு பழங்கால கட்டடமாகும். சியௌசியாபௌ கிராமத்தின் மையத்தில் இந்த மாளிகை அமைந்துள்ளது. நாலாப் புறமும் 9 மீட்டர் உயரமுடைய செங்கல் சுவராகும். கதவு, கிழக்கை நோக்கி கட்டியமைக்கப்படுகின்றது. மாளிகையின் உச்சி பகுதி உயரமாகவும் தாழ்வாரம் அகலமாகவும் நீளமாகவும் இருக்கின்றன. கதவுக்கு மேல், எழுத்தக்களுடன் கூடிய ஒரு பலகையும் இரு பக்கங்களில் ஈரடி செய்யுள்ளும் காணப்படுகின்றன. வாசலின் எதிரே, செங்கல்களில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட நீண்ட ஆயுள் எனும் படங்கள் இருக்கின்றன. அதில், பல்வடிவங்களில் செதுக்கப்பட்ட நீண்ட ஆயுள் என்பதை வௌதப்படுத்தும் நூறு சீன எழுத்துக்கள் இடம்பெறுகின்றன. இந்த மாளிகை, மெவுத்தம் ஆறு பகுதிகள் பிரிக்கப்படுகின்றன.
சியௌ குடும்ப மாளிகை, சிங் வமிச காலத்தின் சியாசிங் மற்றும் தௌகுவான் பேரரசர் ஆட்சிகாலத்தில் அதாவது 1796ஆம் ஆண்டு முதல் 1821ஆம் ஆண்டு வரையான காலத்தில் கட்டப்பட்டது. இந்த மாளிகையின் உரிமையாளர் ஈட்டிய செல்வம் அதிகரிக்க அதிகரிக்க அது 6 பெரிய பகுதிகளையும் 20சிறிய பகுதிகளையும் 313 அறைகளையும் கெவுண்ட மெவுத்தம் 8700 சதுர மீட்டர் பரப்பளவுடைய மிக பெரிய குடியிருப்பு வீடாக விரிவாக்கப்பட்டது. அதன் அளவு, கட்டமைவு, அலங்காரம் ஆகியவை, வட சீனாவின் வீட்டுக் கட்டடக் கலையிலான முத்து எனும் புகழுக்குப் பெவுருத்தமானவை. பெங்குவாங் நகரம் ஹுனான் மாநிலத்தின் மேற்கு பகுதியில் அமையும் ஒரு பழங்கால நகரமாகும். சீனாவின் மிக அழகான சிறு நகரங்களில் ஒன்று என நியூசிலாந்து எழுத்தாளர் லுயிஎரி அதைப் போற்றினார்.
சிங் வமிசத்தின் கான்சி பேரரசர் ஆட்சி காலத்தில் அதாவது ஏறக்குறைய 1662ஆம் ஆண்டில், மேற்கு ஹுனான் மாநிலத்தின் முத்து என போற்றத் தக்க இந்த சிறு நகரம் கட்டப்பட்ட்து. இந்நகரில், கிழக்கிலிருந்து மேற்குக்குச் செல்லும் ஒரே ஒரு வீதி இருக்கின்றது. இந்த பழங்கால நகரம் புதிய பகுதி, பழைய பகுதி என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. பழைய பகுதி மலையின் அடிவாரத்தில் உள்ளது. தௌதந்த துஓசியாங் ஆறு, இந்நகருக்கு ஊடாக ஓடுகின்றது. அந்தி வேளையில்பாலத்தின் பக்கத்திலும் ஆற்றங்கரையிலும் மகளிர் தடியால் ஆடையை அடித்த வண்ணம், சலவை செய்கிறார்கள். தடியடி ஓசையும் நீரலை ஓசையும் வெகு தூரத்துக்கப் பரவுகின்றன. குழந்தைகள் ஆற்றில் விளையாடுகின்றனர். இவையனைத்தும், இந்நகருக்கு அழமாக காட்சியெவுன்றை அளிக்கின்றது.
இந்தப் பழங்கால நகரில், பழமை வாய்ந்த, துச்சியா இன மணம் கமழும் வீடு மிகவும் புகழ் பெற்றது. ஆனால், ஆற்றங்கரையில் அமைந்த இத்தகைய வீடுகள் பல, அழிந்துவிட்டன. தற்போது, ஹுவெய்லுங்தென் எனும் இடத்தில் மட்டும் இன்னும் பத்து இத்தகைய பழைய வீடுகள் காணப்படுகின்றன. இதுவரை, சீனாவின் சில பழைய நகரங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த நகரங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. கட்டடங்களின் பாணி, பண்பாடு, அங்குள்ள பழக்க வழக்கங்கள் ஆகியவை வேறுபட்டவை. ஒவ்வெவுரு இடத்துக்கும் தனிச்சிறப்பியல்பு உண்டு. பயணிகள் இந்த இடங்களுக்கு வருகை தந்தால், அவர்களுக்கு வேறுபட்ட பட்டறிவு ஏற்படும். இனி சுற்றுலா பற்றிய தகவல் சாங்காய் மாநகரின் நாங்சிங் துங்லு வெய்தானுக்கும் புதுங் கீழை முத்துக் கோபுரத்துக்குமிடையில் கட்டியமைக்கப்பட்டுள்ள வெய்தான் சுற்றுலா குடைவழியின் முழு நீளம் 646.70 மீட்டராகும். இது, சீனாவில் வாங்புசியாங் ஆற்றைக் கடந்துசெல்லும் முதலாவது செயற்கை குடைவழியாகும்.
No comments:
Post a Comment