சீனாவில் 4 புகழ்பெற்ற புத்த மத மலைகள் உள்ளன. அவை, சாங்சி மாநிலத்தின் வுதை மலை, ஸ்ச்சுவான் மாநிலத்தின் எமெய் மலை, செக்கியாங் மாநிலத்தின் பூதூ மலை, அன்ஹுவெய் மாநிலத்தின் ச்சியுஹுவா மலை என்பனவாகும். ச்சியுஹுவா மலை, மத்திய சீனாவின் அன்ஹுவெய் மாநிலத்தின் மேற்கு பகுதியிலுள்ள சிங்யாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதன் நிலபரப்பளவு 120 சதுர கிலோமீட்டராகும். ச்சியுஹுவா மலை அவ்வளவு உயரமாக இல்லை. கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் நீட்டர் உயரத்தில் 30க்கும் அதிகமான மலைகள் உள்ளந. எனினும், இவற்றில் மிக உயரமான மலையான ஷிவான் சிகரத்தின் உயரம் 1342 மீட்டர் மட்டுமே.மலையின் உயரம் முக்கியம் என்பதல்ல. தெய்வம் இருந்தால் அது புகழ் பெறும். ச்சியுஹுவா மலையில் 2 பேர் இருப்பதன் காரணமாக சீனாவில் புகழ்பெற்றது. இவர்களில் ஒருவர், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முந்திய தாங் வமிச காலத்தில் மா கவிஞர் லீபெய் என்பவர். மற்றவர், தாங் வமிச காலத்தில் சீனா வந்தடைந்த தென் கெவுரிய இளவரசர் கிம் கியோ கா என்பவர் ஆவார். கவியரசர் லீபெய், ச்சியுஹுவா மலையில் சுற்றுலா மேற்கெவுண்ட போது உணர்ச்சி வசப்பட்டு, ச்சியுசி மலையை ச்சியுஹுவா மலை எனப் பெயர் மாற்றினார்.
இம்மலையில் உள்ள 9 சிகரங்கள், தாமரைப்பூ போல காணப்படுவதாக வர்ணித்த அவர் மலையின் பெயரை ச்சியுஹுவா மலை என மாற்றினார். தென் கெவுரிய இளவரசர் கிம் கியோ கா இம்மலை சென்றடைந்த போது, வயது 24. அவர் முதுமை காலம் வரை தியானம் செய்துவந்தார். மரணமடைந்த பின் அவருடைய பூதவுடல் 3 ஆண்டு வரை அழிந்துபோகவில்லையாம். பௌத்த திருமறையில் கஷிதிகர்பாவின் மறு பிறப்பு என மக்கள் கருதியதால் ச்சியுஹுவா மலையானது, கஷிதிகர்பாவின் இடமாக அதாவது புத்த துறவிகள் அல்லது தாவோ மத குருமார்கள், மத நடவடிக்கையில் ஈடுபடும் இடமாகும். கவியரசர் லீபெய், இளவரசன் கிம் கியோ கா ஆகிய இருவரின் காரணமாக, ச்சியுஹுவா மலை, தாமரை புத்த மத இடம் என பின்னர் அழைக்கப்பட்டுவருகின்றது. இவ்விடமானது, புத்த மதத்தவர், புனித யாத்திரை மேற்கெவுள்ளும் பிரபல மலையாகவும் பயணிகள் மலைச் சிகரங்களைப் பார்வையிடும் சிறந்த இடமாகவும் திகழ்கின்றது.
ச்சியுஹுவா மலைக்குச் செல்லும் வழியில் மலைத் தெவுடர்கள் எங்கெங்கும் காணப்படலாம். அருகில் பசுமையான கெவுடி செடிகளும் மரங்களும் வளர்கின்றன. தெவுலைவில் சமையல் புகை தென்படுகின்றது. மலைகளிடையில் காணப்படும் மஞ்சள் நிறச் சுவராலும் கறுப்பு நிற ஓடுகளாலும் ஆன வீடுகள் கோயில்களாகும்.
வரலாற்றுப் பதிவேட்டின் படி, ச்சியுஹுவா மலையில் மெவுத்தம் 14 மதத் துறவிகளின் அழிந்துபோகாத பூதவுடல்கள், கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் சில காரணங்களினால், சில வூதவுடல்கள் நாசப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, அங்கு 5 பூதவுடல்களைக் காணலாம். இளவரசன் கிம் கியோ காவின் பூதவுடல், 1200 ஆண்டுகளுக்கு முன் வௌளை சலவைக் கல்லான கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
கம்பி வட வாகனம் மூலம் மலை ஏறிய போது, உயரமான செங்குத்தான மலைகளும் கடல் போன்ற மேகங்குளும் காணப்படுகின்றன. மேலே இருந்து கீழே பார்க்கும் போது, ச்சியுஹுவா பட்டினத்தில் கறுப்பு நிற ஓடுகளால் வேயப்பட்ட வெண்ணிற சுவருடைய குடியிருப்பு வீடுகள் வெகு தெவுலைவில் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பண்டைகால வழிபாட்டு மேடையைச் சென்றடையும் போது, மனித உலகம் மிக தெவுலைவில் உள்ளது போல் தோன்றுகிறது.
பண்டைக் கால வழிபாட்டு மேடையானது, கிம் கியோ கா, அக்காலத்தில் ச்சியுஹுவா மலையில் புத்த திருமறை ஓதும் போது, ஒரு முறை நெற்றி நிலத்தில் படும்படி வணங்கினார். அவர் பக்தி மிக்கவர். திருமறை ஓதும் இடத்தில் மிகப் பெரிய இரட்டை அடிச்சுவடுகளை அவர் விட்டுச்சென்றார். யாத்திரிகளும் பயணிகளும் அங்கு சென்றடைந்த போதெல்லாம், அவர்களில் பலர் தமது காலணிகளைக் கழற்றி வெறும் கால்களால் கிம் கியோ காவின் அடிச்சுவடுதகளை மிதித்து நடக்க விரும்புகின்றனர். மங்களத்தை வீட்டுக்குக் கெவுண்டுசெல்ல வேண்டும் என்பது மூவர்களுடைய விருப்பமாகும். இது பற்றி வழிகாட்டி சாங் யெஹெவுங் குறிப்பிடுகையில், ஒருவர் உயிருடன் இருக்கும் போது, தீய செயலில் ஈடுபட்டால், அவர் மரணமடைந்த பின், நரகத்தில் துன்புறுத்தப்படுவார். இத்தீயவர்களின் ஆத்மாவைத் துயரத்திலிருந்து கஷிதிகர்பா விடுவிப்பார். உலகில் துன்பத்துக்குள்ளாகிய அனைவரின் ஆத்மாவைத் துயரத்திலிருந்து விடுவித்த பின்னர் தான், தாம் புத்தராக மாற வேண்டும் என்பது அவருடைய விருப்பம் என்று புத்த திருமறை கூறுகின்றது.
ச்சியுஹுவா மலையின் கீழ்ப்பகுதியில், phoenix தேவதாரு நிலையம் யுள்ளது. இந்த பண்டை கால தேவதாரு, phoenix தேவதாரு என்று பெயர் பெற்றது. இது, phoenix மலையில் சுற்றுலா பரவளுக்கான அடையாளமாகத் திகழ்கின்றது.
No comments:
Post a Comment