அன்சான் நகரின் தென் கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் சியென்சான் மலை அமைந்துள்ளது. சீனா, முதன் முறையாகத் தேர்ந்தெடுத்த 10 புகழ்பெற்ற இயற்கைக் காட்சித் தலங்களில் அதுவும் ஒன்றாகும்.
சியென்சான் மலையைத் தொலைவிலிருந்து பார்க்கும் போது, வட சீன மலைகளுக்குரிய கம்பீரம் காணப்படவில்லை. எனினும், அது எழில் மிக்கது. மலை எங்கும் பசுமையாகக் காணப்படுகின்றது. கோயில்களிலிருந்து மணியோசை ஒலித்த வண்ணம் உள்ளது.
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் ஸ்வெய் மற்றும் தாங் வமிசக் காலத்தில் சியென்சான் மலையில் கோயில்கள் கட்டியமைக்கப்பட்டன. புத்த மதமும் தௌ மதமும் இணையும் இடம் இது ஆகும். இதுவரை இம்மலையில், 20க்கும் அதிகமான பணஅடைக்கால கோயில்கள் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. வூலியான் கோயில், லுங்சியெ கோயில், வூவ் சிகரம் ஆகியவை, சியென்சான் மலையிலுள்ள முக்கியக் காட்சித் தலங்களாகும்.
1667ல் கட்டியமைக்கப்பட்ட வூலியான் கோயில் அளவில் பெரியது. சியென்சான் மலையின் தௌ மதக் கோயில்களில், இது முதலிடம் வகிக்கின்றது. தௌ மதக் கோயிலுக்குள்ளே குவாயின் மண்டபம் கட்டியமைக்கப்பட்டது விசித்திரமானது. சியென்சான் பௌத்த சத்துவர்களில் ஒருவராவார். சியென்சான் மலை, புத்த மதமும் தௌ மதமும் இணையும் இடமாகும் என்பதை, இது நிரூபித்துள்ளது.
லுங்சியென் கோயில், தேவதாரு மரங்களுக்கும் சைப்ரஸ் மரங்களுக்குமிடையில் அமைந்துள்ளது. இக்கோயில், புட்டியில் மலர்கள் செருகிவைத்தது போல காட்சியளிக்கின்றது.
லுங்சியென் கோயிலை விட்டு கிழக்கு நோக்கி சில கிலோமீட்டர் தூரம் சென்ற பின், வூவ் சிகரத்தைக் காணலாம். கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தச் சிகரம், சியென்சான் மலையின் 2வது சிகரமாகும். சிகரத்தில் மார்பளவு புத்தர் கற்சிலைகள் 5 உள்ளன. இதனால், வூவு சிகரம் எனவும் அது பெயர் பெற்றது. இச்சிகரத்தில் நின்று பார்க்கும் போது, சுமார் ஆயிரம் மலைச் சிகரங்கள் தெநஅபடுவது போல் தோன்றுகிறது. இதனால், சியென்சான் என்று அது அழைக்கப்படுகின்றது.
மலைகளின் வடிவம், ஆயிரம் தாமரைப் பூக்கள் மலர்வது போல இருப்பதால், ஆயிரம் தாமரை பூ மலை எனவும் அழைக்கப்படுகின்றது. ஆண்டு தோறும் ஜுன் திங்கள் துவக்கத்தில் சியென்சான் மலையில் மாபெரும் புத்த மத விழா நடைபெறுகின்றது. துறவிகளும் பெண் துறவிகளும் அதிக அளவில் வருகை தந்து, புத்த நடவடிக்கையில் ஈடுபட்டு, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்கின்றனர்.
அன்சான் நகரிலுள்ள jade ஆல் ஆன புத்தர் தோட்டம் 1996ஆம் ஆண்டு, பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டது.
இத்தோட்டத்தில் அமைந்துள்ள புத்தர் சிலை, சுமார் 260 டன் எடையுடைய jade ஒன்றால் செதுக்கப்பட்டது.
Jade உற்பத்தியில் புகழ்பெற்ற வட கிழக்கு சீனாவின் யூசியெ மாவட்டத்தில், 1960ல், அது கண்டுபிடிக்கப்பட்டது. jade மன்னர் என அது பெயர் பெற்றது. இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய Jadeஇல், புத்தர் சில செதுக்குவதென உள்ளூர் அரசு 1994ஆம் ஆண்டு முடிவு மேற்கொண்டது.
இந்த புத்தர் தோட்டத்தின் முன் வாசலில், பதாகையொன்று தொங்கவிடப்பட்டுள்ளது. இப்புத்தர் சிலை, கின்னஸ் சாதனை நூலில் இடம்பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக அதில் எழுதப்பட்டுள்ளது.
இந்த புத்தர் தோட்டம், பயணிகளுக்குத் திறந்துவைக்கப்பட்ட பின், அன்சான் நகரில் புதிய சுறஅறுலா தலமொன்று, அதிகரித்துள்ளது. அன்சான் சுற்றுலா பயணப் பணியகத்தின் தலைவர் தியென்சன்சு, இது பற்றி குறிப்பிடுகையில், மத கோயில்களில் பயணம் மேற்கொள்வது என்பது, அன்சான் சுற்றுலா துறையின் முக்கியமான பகுதியாக மாறியுள்ளது என்று சுட்டிக்காட்டினார். தற்போது, அந்சான் நகரின் சுற்றுலாத்துறை, வளர்ச்சியடையத் துவங்கியது. அதன் வளர்ச்சிப் போக்கு சிறந்து காமப்படுகின்றது. 1999ஆம் ஆண்டில் 24000 வெளிநாட்டுப் பயணிகளும் 38 லட்சம் உள்நாட்டுப் பயணிகளும் இந்நகருக்கு வருகை தந்தனர். சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமான அதிகரிப்பு விகிதம், 20 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.
No comments:
Post a Comment