Sunday, July 13, 2008

ஹெய்ஹெவு ஆறு

பயணிகளைக் கவரும் ஹெய்ஹெவு ஆறு
ஹெய்ஹெவு ஆறு, டியான்ஜின் மாநகரப் பகுதிக்கூடாகச் செல்கிறது. டியான்ஜின் மாநகரின் தாய் ஆறு என்று அது போற்றப்படுகின்றது. இவ்ஆற்றினால் இந்நகரம் வளர்ச்சியடைந்துள்ளது. சுமார் 1000 கிலோமீட்டர் நீளமுடைய இந்த ஆறு, வட சீனாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். அதன் மேற் பகுதியில் 9 கிளைகள் உள்ளன. விசிறி வடிவத்தில் அமைந்த இக்கிளைகள் டியான்ஜின் மாநகருக்கு ஊடாக ஓடி, கடலில் கலக்கின்றன. ஆற்றின் இரு கரைகளும் டியான்ஜின் மாநகரில் மிகவும் பரபரப்பான இடமும் காட்சித் தலமும் ஆகும்.

தோணியில் ஏறி, இரு கரையிலான காட்சியைக் கண்டுகளிப்பது என்பது, பயணிகளின் முதன்மைத் தெரிவாகும். கப்பலில் அமர்ந்த வண்ணம், இவ்வாற்றின் இரு கரைகளிலும் அமைந்த வௌதநாட்டுப் பாணியிலான கட்டடங்களைப் பார்வையிடுவது என்பது ஹெஹெவு ஆற்றுப் பிரதேச சுற்றுலாவில் முக்கியமாக இடம்பெறுகின்றது. வரலாற்றில், டியான்ஜின் மாநகரில் வௌதநாடுகளின் கன்சலேட், வணிகச் சங்கம் ஆகியவை மிகுதியாக இருந்தன. இரு கரையிலுமுள்ள ஐரோப்பிய பாணியில் அமைந்த கெவும்பு வடிவ அல்லது வட்ட வடிவக் கட்டடங்களின் நிழல், ஆற்று நீரில் தென்படுவதைத் தோணியில் அமர்ந்த வண்ணம் கண்டு களிக்கலாம். இவற்றைப் பார்வையிடும் போது, ஐரோப்பாவின் ஒரு ஆற்றுப் பிரதேசத்தில் சுற்றுலா மேற்கெவுள்வது போன்று உணர்வு ஏற்படலாம். தற்போது இவ்வாற்றின் இரு கரையிலும், இத்தாலி மற்றும் ரஷிய பாணியில் அமைந்த கட்டடங்கள் காணப்படுகின்றன. பிரெஞ்சு பாணியில் அமைந்த கட்டடங்கள் கட்டியமைக்கப்பட்டுவருகின்றன அல்லது மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இக்கட்டடங்கள் கட்டியமைக்கப்பட்ட பின், இரு கரை காட்சி மேலும் அழகாக இருக்கும் என்று டியான்ஜின் மாநகரின் சுற்றுலா வளர்ச்சிக் கமிட்டி அலுவலக அதிகாரி ஜின்தியெலின் கூறினார். 600 ஹெக்டர் நிலப்பரப்பில் கட்டியமைக்கப்பட்ட பிரெஞ்சு பாணி கட்டடங்களில், ஹெவுமெவுபாங் பெவுழுதுபோக்கு மையம், பிரெஞ்சு பாணியில் அமைந்த பூங்கா, பிரான்சின் தனிச்சிறப்பு வாய்ந்த பாலம், பிரெஞ்சு பண்ணை வடிவ குடியிருப்பு பிரதேசம் ஆகியவை இடம்பெற்றுள்ளன என்றார் அவர்.
ஹெய்ஹெவு ஆற்றின் இரு கரைகளிலும் ஏற்பட்ட மாற்றங்களை டியான்ஜின் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். முதியவர் ஊலிமிங், பயணத் தோணித் தலைவராவார். ஆற்றின் மாற்றத்துக்குச் சாட்சியாளரும் ஆவார். 1970ல் இப்பணியில் ஈடுபட்டேன். அப்போது, இவ்வாற்றின் இரு கரைகளிலும் உயரமான கட்டடங்கள் மிகவும் குறைவு என்றார் அவர். ஆற்றின் இரு கரைகளிலும் ஏற்பட்ட மாபெரும் மாற்றங்கள் டியான்ஜின் மக்கள் பெருமைப்படத் தக்கவை. இதனால், அவர்களில் பலர் இவ்விடத்துக்கு வருகை தர விரும்புகின்றனர்.
ஆற்றுக் காட்சியைப் பார்வையிடும் அதே வேளையில், டியான்ஜின் மாநகரின் மாற்றத்தையும் கண்டறியலாம். வார இறுதியில், ஹெய்ஹெவுய் ஆற்றுப் பிரதேச சுற்றுலா நெறி, அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளது. இவர்களில், முதியோரும் பெற்றோருடன் பயணம் மேற்கெவுள்ளும் துவக்கப் பள்ளி மாணவரும் அதிகமாக இடம்பெற்றுள்ளனர். டியான்ஜின் மாநகரின் மாற்றத்தையும் ஹெய்ஹெவு ஆற்றின் இரு கரை காட்சியையும் கண்டுகளிக்கவே, நான் இங்கு வந்திருக்கிறேன் என்று டியான்ஜின் பல்கலைக்கழக நூலகத்தின் பணியாளர் லீசியான் கூறினார்.
ஹெய்ஹெவு ஆற்றைச் சுற்றுலா ஆறாக மாற்றும் பெவுருட்டு, டியான்ஜின் மாநகரில், இவ்வாற்றின் நெடுகிலும் பன்னோக்க வளர்ச்சித் திட்டப்பணி நடைபெற்றுவருகின்றது. இதில், பூங்கா, சதுக்கம் ஆகியவற்றின் கட்டுமானப் பணி இடம்பெற்றுள்ளது. நீர் வழி நெறிகள், போக்குவரத்துக்குத் திறந்துவிடப்படும். சுற்றுலாவின் உள்ளடக்கம் அதிகரிக்கப்படும். ஹெய்ஹெவு ஆற்றுப் பிரதேச சுற்றுலா மையத்தின் பணியாளர் லியூச்சின்யுன் கூறியதாவது, ஹெய்ஹெவு ஆற்றை உலகின் புகழ்பெற்ற ஆறாக மாற்ற டியான்ஜின் நகராட்சி அரசு பெரிதும் பாடுபட்டுவருகின்றது.
2005ஆம் ஆண்டு, சீரமைப்புப் பணி நிறைவடைந்த பின், இவ்வாற்றின் இரு கரையும் மேலும் அழகாக காட்சி தரும். அத்துடன், இங்குள்ள சுற்றுலாத் துறைக்கும் புதிய வாய்ப்பு கிடைக்கும். அப்போது, மேலும் அதிகமான பயணிகள் வருகை தருவர். ஹெய்ஹெவு ஆற்றை அடிப்படையாகக் கெவுண்டு, பயணிகளின் கோரிக்கைக்கிணங்க, சுற்றுலா நெறியை அதிகரித்து, டியான்ஜின் மாநகரின் எழில் மிக்க இயற்கை காட்சியை அதிக அளவில் சீன மற்றும் வௌத நாட்டுப் பயணிகளிடம் அறிமுகப்படுத்துவோம் என்றார் அவர். இவ்வாற்றின் நுழைவாயில், நீல நிற வானம், கடல், வெண்ணிற கடலலை, பறக்கும் பறவைகள் ஆகியவை பயணிகளுக்குப் புதிய உணர்வை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

No comments: