Sunday, July 13, 2008

குவாங்சோ

குவாங்சோவில் சுற்றுலா
குவாங்சோவில் சுமார் 30 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஹென் சி ஹவு கூறியதாவது, குவாங்சோவிலுள்ள காட்சித் தலங்கள் பற்றி குறிப்பிடும் போது, இந்நகரின் 8 காட்சித் தலங்கள் புகழ்பெற்றவை. குவாங்சோ மக்கள் தமது பிறந்தகத்தை நேசிக்கின்றனர். பண்பாட்டுப் பாரம்பரியமுடைய குவாங்சோவில், பெய்யுன் மலை, சூச்சியாங் ஆற்றின் இரவு காட்சி, யெசியூ மலை முதலியவை, பார்வையிடத் தக்கவை. இவை, குவாங்சோ மாநகரின் எழில் மிக்க காட்சியைப் பிரதிபலித்துள்ளன என்றார் அவர். பெயுன் மலை, இந்நகரின் வடக்கில் அமைந்துள்ளது. அங்கு மலைத்தொடர்கள் கம்பீரமாக நிற்கின்றன. குறுக்கும் நெடுக்குமாக, சிற்றாறு ஓடுகின்றது. மழைக்குப் பின்னரோ, வசந்த காலத்தின் முடிவிலோ, மலைத்தொவுடரை வெண்ணிற மேகம் சூழ்ந்திருப்பது எழில் மிக்க காட்சியாகும்.
குவாங்சோ மக்கள் பெயுன் மலையை விரும்புகின்றனர். நேரம் கிடைக்கும் போது, அங்குச் சென்று தூய்மையான காற்றை சுவாசிக்கின்றனர். வசந்த கால அறிவிப்புப் பள்ளத்தாக்கு, peack மலர் சிற்றாறு, நன்லன் கோயில், வான் மூட்டும் மலை உள்ளிட்ட காட்சித் தலங்கள், ஈர்ப்புத் தன்மை வாய்ந்தவை. இந்த 8 காட்சித் தலங்களில் முத்து ஆற்றின் இரவு காட்சியைக் கண்டுகளிக்கப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குவாங்சோ நகரின் ஊடாக ஓடும் முத்து ஆறு, தாய் ஆறு என்று குவாங்சோ மக்களால் அழைக்கப்படுகின்றது. இந்த ஆறு, குவாங்சோ நகருக்கு உயிராற்றல் தருகின்றது. 23 கிலோமீட்டர் நீளமுடைய முத்து ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள கட்டிடங்கள் மேல் வண்ண விளக்குகள் ஔதவீசுகின்றன. ஆற்றில் படகுகளில் செல்லும் பயணிகள் இந்த அழகான காட்சியைக் கண்டுகளிக்கின்றனர். குவாங்சோ மாநகரின் துங்சாங் சதுக்கத்தில், மாபெரும் செயற்கை நீர் வீழ்ச்சி உள்ளது. தியெஹ நீர் வீழ்ச்சி என்று அழைக்கப்படுகின்றது. அதன் பின்புறம், 89 மீட்டர் உயரமுடைய கண்ணாடிச் சுவர் ஆகும். ஆசியாவில் மிகப் பெரிய செயற்கை நீர்வீழ்ச்சியாக இது திகழ்கின்றது. ஒரு லட்சம் ஹெக்டர் நிலப்பரப்புடைய பசுமை மயமாக்க சதுக்கம், பண்டைக் கால மாதிரி மலர் படுக்கை, சிற்பங்கள் ஆகியவை, சதுக்கத்தின் சுற்றுப்புறத்திலுள்ள கட்டடங்களுக்கு இசைவாக அமைந்துள்ளன. சுன்ஹுவா வென்னீர் ஊற்று, விண்வௌதப் பயணக் காட்சி உலகக் காட்சி, துங்பாங் பொழுதுபோக்கு இடம், குவாங்சோ கடல் வாழ்வன அகம், சாங்லுங் இரவு விலங்கு உலகம், வுலுன்சான் விடுமுறை மண்டலம், சியான்சியாங் வன விலங்கு உலகம் முதலியவை தனிச்சிறப்பியல்பு மிக்கவை. சாங்லுங் இரவு விலங்கு உலகம் என்னும் காட்சித் தலத்தில், பயணிகள், பழமையான சிறிய தெவுடர் வண்டியில் அமர்ந்து மெல்ல மெல்ல முன்னேறி, செயற்கைப் பள்ளத்தாக்கு, காடு, புல்வௌத ஆகியவற்றுக்கூடாகச் சென்று, சுற்றுலாவின் மகிழ்ச்சிகரமான உணர்வைப் பெறலாம்.
இரவு விலங்கு உலகத்தைப் பார்வையிட்ட பயணிகள் மகிழ்ச்சிகரமான கடலில் மூழ்குகின்றனர். வண்ண விளக்கு ஔதயில், உலகில் தலைசிறந்த விலங்கு காட்சிக் குழுக்களும் விலங்கு நடிகரும் உயர் நிலை கலை நிகழ்ச்சியை வழங்கின. சியாசியாங் வனவிலங்கு உலகமானது, சீனாவின் மிகப் பெரிய வெண்ணிற புலி கண்டுகளிப்பு மற்றும் இனப் பெருக்கத் தளமாகும். இத்தலத்தில் வெண்ணிறப் புலிகளின் எண்ணிக்கை, 60ஐத் தாண்டியுள்ளது. இது, உலகின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியாகும். பயணிகள், சற்று தொலைவில் இருந்தவாறு, விலங்குகளுடன் தொடர்பு கொள்ளலாம். வழிகாட்டி யெச்சியெஅ கூறுகிறார், தற்போது குவாங்சோ மாநகரின் தொடர்புடைய வாரியங்கள், உயிரின வாழ்க்கை சுற்றுலா, கண்காட்சி சுற்றுலா, அறிவியல் தொழில் நுட்பச் சுற்றுலா, வேளாண் சுற்றுலா, தொழிற்துறை சுற்றுலா, உடல் நலக் காப்புச் சுற்றுலா ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளன.
இவற்றில், ஒரு நாள் பயணம், தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சுற்றுலா முதலியவை உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் சிறந்த தெரிவாகத் திகழ்கின்றன. சுற்றுலா வகைகள், பின்வருமாறு, குவாங்சோவில் ஒரு நாள் சுற்றுலா, முத்து ஆற்றங் கரையிலான பண்பாட்டு வரலாற்றுச் சின்ன சுற்றுலா, அண்மைக்கால புரட்சி வரலாற்றுச் சின்ன சுற்றுலா, பண்டைக் கால வணிக நகரச் சுற்றுலா, வின்நான் பூங்கா பண்பாட்டுச் சுற்றுலா, குவாங்சோ மௌவென் மலை உயிரின வாழ்க்கை சுற்றுலா, முத்து ஆற்று இரவு சுற்றுலா என்பனவாகும் என்றார் அவர்.
தற்போது, குவாங்சோவில், 1570க்கும் அதிகமான உணவு விடுதிகள் உள்ளன. இவற்றில் 190, நட்சத்திர நிலை உணவு விடுதிகளாகும். தவிர, நட்சத்திர நிலை சேவை வரையறையை எட்டிய உணவு விடுதிகளும் மலிவான உணவு விடுதிகளும் பல உள்ளன. ஒரு நாளுக்கு 2 லட்சத்துக்கு அதிகமான பயணிகளை அவை வரவேற்க முடியும் என்று வழிகாட்டி யெ கூறினார்.

No comments: