ச்சியௌசு இயற்கை காட்சி
சீனாவின் ஹோனான் மாநிலத்தில் ச்சியௌசு நகரம் அமைந்துள்ளது. அதன் புறநகரில் காணப்படும் மலைகள் கம்பீரமானவை. சென்நுங் மலை அவ்வற்றில் ஒன்றாகும். சென்நுங் மலை வான ளாவியது. இதற்கு ஒரு கதை உண்டு. பண்டைக் கால மன்னர் சென்நுங் இவ்விடத்தில் தானியங்களை வித்தியாசப்படுத்தி, பல்வகை புல்லைச் சாப்பிட்டுப்பார்த்தாராம். அப்பெவுழுது முதல், வேளாண் பயிர் பயிரிடும் சமுதாயத்தில் சீனா அடி எடுத்துவைத்தது. இம்மன்னரை நினைவு கூரும் பெவுருட்டு, சென்நுங் மலை என அதுற்குப் பெயர் சூட்டப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் உயரத்தில் சென்நுங் மலை அமைந்துள்ளது. அதன் உச்சியில் நின்றால், காற்று வீசும் போது உருவாகும் ஒலி, காதில் விழும். இவ்விடத்தில் கம்பீரமான மலை செங்குத்தான கற்பாறை ஆகியவற்றைக் கண்டுகளிக்கலாம்.
இலையுதிர் காலத்தில் இம்மலையிலான மரங்களின் இலைகள் சிவப்பாக மாறிவிடும். பயணி சுச்சியெ கூறியதாவது, இங்குள்ள இயற்கைக் காட்சியைக் கண்டுகளித்த நான், சீனாவை எண்ணிப் பெருமைப்படுகின்றேன். இங்குள்ள காட்சி எழில் மிக்கது என்பது உண்மையே என்றார் அவர். இம்மலைக்கு அருகில் பெய்சுங் மலை அமைந்துள்ளது. பெய்சுங் மலையின் அகலமான இடத்தின் அளவு, இரண்டு, மூன்று மீட்டராகும். குறுகியது ஒரு மீட்டர். இம்மலை கரடுமுரடானது. மலையின் இரு பக்கங்களிலும் ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ளன. மலையில் நின்று கீழ் நேவுக்கிப் பார்த்தால் பயமாக இருக்கும். சென்நுங் மலையிலும் வட கிழக்கு சீனாவின் சாங்பெய் மலையிலும் மட்டும், வெண்ணிற தேவதாரு மரங்கள் காணப்படுகின்றன. இத்தகைய தேவதாரு மரங்களின் வயது 400 ஆண்டுகளைத் தாண்டினால் தான், அவை வெண்ணிறமாகிவிடும். சென்நுங் மலையில் 16000க்கும் அதிகமான வெண்ணிற தேவதாருகள் வளர்கின்றன.
1000 ஆண்டுக்கு முந்தியவை அவை. இத்தகைய மரங்களின் இலை பெரியதல்ல. வெண்ணிற அடி மரங்கள் மட்டும் உண்டு. கற்பாறையில் வளரும் இம்மரங்கள் பலவிதமானவை. அவற்றில் சில, பயணிகளை வரவேற்கும் தெய்வம் போல் காணப்படுகின்றன. வேறு சில, தோகை விரித்தாடும் மயில் போல காட்சியளிக்கின்றன. இந்த வெண்ணிற தேவதாரு மரங்களில் எண்ணற்ற செந்நிறத் துணியும் நூல்களும் கட்டப்பட்டிருக்கின்றன. தமக்கு இன்பம் தருமாறு மக்கள் இம்மரத்தை வேண்டிக்கெவுள்கின்றனராம்.
பண்டைக்காலம் தெவுட்டு, தேவதாரு மரம், நீண்ட ஆயுளின் சின்னமாக விளங்கிவருகின்றது. முதியோருக்கு வாழ்த்து தெரிவிப்பதையும், குழந்தை உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்ற விருப்பத்தையும் மனதில் கெவுண்டு, செந்நிற நூலை இந்த வெண்ணிற மரங்களில் மக்கள் கட்டியிருக்கின்றனர் என்றார் அவர். சென்நுங் மலையானது, அரசு நிலை குரங்கு இயற்கை புகலிடமாகும். 9000க்கும் அதிகமான குரங்குகள் நாள்தோறும் இங்கு விளையாடுகின்றன. அவற்றில் சில, பயணிகளுடன் உறவாடுகின்றன. நிலக்கடலை, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பெவுருட்களைப் பயணிகள் வீசியெறிந்தால், நீ முந்தி, நான் முந்தி என அவை அவற்றை எடுத்துத் தின்கின்றன. வழிகாட்டி லீ செஃவன் கூறியதாவது, ச்சியௌசுவில், தௌதந்த நீரோட்டம் உண்டு. சென்நுங் மலை, கம்பீரத்தினால் புகழ்பெற்றது. இது போல, சிங்தியெ ஆறு, தௌதந்த நீரினால் புகழ்பெற்றது.
சிங்தியெ ஆற்றுக் காட்சித் தலத்தில் தாசியென் ஏரி சுட்டத்தக்கது. இந்த ஏரியின் நீளம் சுமார் 7 கிலோமீட்டராகும். அகலம் 90 மீட்டர். நீரின் ஆழம் சுமார் 60 மீட்டராகும். இந்த ஏரியில் பல்வகை மீன்கள் வளர்கின்றன. இதனால், தாசியென் ஏரி, மீன் பிடிக்க விரும்புவோர் பெரிதும் விரும்பும் இடம் என்று கூறலாம். இரு கரையிலான கற்கள், மக்களை ஈர்க்கின்றன. இவற்றைக் கற்பனையுடன் கண்டுகளித்தால் கதை வரும். வழிகாட்டி ஹெவுயூஹெவுன் கூறியதாவது, இதோ பார், வலது கரையின் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஒரு மலைக் குன்றில், 4 சிறிய கற்கள் உள்ளன.
தென் பக்கத்தில் காற்களைக் குறுக்காக வைத்துவிட்டு அமரும் ஒரு மூதாட்டியின் உருவச் சிலை காணப்படலாம். அவருடைய உடையில், சீனாவின் பாரம்பரிய மகளிர் தனிச்சிறப்பு தென்படுகின்றது. அவருடைய பெயர் சான்நியாங். அவருக்கு முன் பக்கத்தில் 3 சிறிய கற்கள் உள்ளன. இவை, அவருடைய 3 மகன்களாகும். நன்றாகக் கல்வி கற்குமாறு, தம் குழந்தைகளுக்கு சான்நியாங் அறிவுரை கூறுகிறார் என்பது தெரிகின்றது. இதனால் இக்காட்சித் தலத்தின் பெயர், சான்நியாங் மகன்களுக்கு அறிவுரை கூறுவதென்பதாகும் என்றார் அவர். தாச்சியென் ஏரியில் காட்டு வாத்துக்கள் உள்ளன. நாள்தோறும் அதிகாலையில், அவை இந்த ஏரிக்கு வந்து, அந்திப்பெவுழுதில் வீடு திரும்புகின்றன. ச்சியௌசுவின் எழில் மிக்க இயற்கை காட்சி அவற்றையும் ஈர்த்துள்ளதாம்.
No comments:
Post a Comment