Sunday, July 13, 2008

ஹென்சான் கோயில்

ஹென்சான் கோயில்
சீனாவில் துவக்கப் பள்ளி கல்வியறிவு பெற்றவர் அனைவருக்கும் சுசோ புறநகரிலுள்ள ஹென்சான் கோயில் பற்றி நன்கு தெரியும். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்,தாங் வமிச ஆட்சிக் காலத்திலான பிரபல கவிஞர் சாங்ச்சியெ,இக்கோயில் பற்றி இயற்றிய கவிதை,சீனாவின் துவக்கப் பள்ளியின் சீன மெவுழி பாட நூலில் சேர்க்கப்பட்டிருப்பது,இதற்குக் காரணமாகும். பல ஆண்டுகளாக,மிக அதிகமானோர் இக்கவிதை மூலம் ஹென்சான் கோயிலை அறிந்துகெவுண்டுள்ளனர். அத்துடன்,இக்கவிதையில் வர்ணிக்கப்பட்ட அழகான இயற்கை காட்சியினால்,ஹெவுன் சான் கோயிலைப் பார்வையிட,அவர்கள் தெவுலைவிலிருந்து சுசோவுக்கு வருகை தந்தனர். சுமார் 1400 ஆண்டு வரலாறுடைய ஹெவுன்சான் கோயில்,புத்த மதக் கோயிலாகும். அதன் பரப்பளவு 10 ஆயிரம் சதுர மீட்டராகும்.மண்டபத்தின் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் மணிக்கூண்டு உண்டு. புத்தாண்டு மலரும் போதெல்லாம்,கவலையை நீக்கி,அருமையான எதிர்காலம் தருமாறு,வழிபாடு நடத்த மக்கள் இக்கோயிலுக்கு வந்து மணியோசையைக் கேட்பது வழக்கம்.
ஹென்சான் கோயில் பற்றி பல கதைகள் உள்ளன. இவற்றில் ஒன்று மக்களிடையே பரவலாகப் பரவிவருகின்றது. வழிகாட்டி தன்தன் கூறுகின்றார், துறவிகளான ஹென்சானும் ச்தேவும் இக்கோயிலின் தலைவர்களாவர். முடிவு மேற்கெவுள்ளும் போது,அவர்கள் இருவரும் தன்னடக்கத்துடன் இருப்பதன் காரணமாக,அடிக்கடி முடிவு மேற்கெவுள்வது சிரமம். ஒரு நாள்,கோயிலின் முன்வாசலில், ஒரு மூதாட்டியை அவர்கள் கண்டனர். கோயில் தலைவருக்கு மந்திர வித்தை தேவை. நீங்கள் இருவரும் அவரவர் திறமையைக் காட்டுங்கள். யாருடைய மந்திர வித்தை உயர்வோ,அவரே கோயிலின் தவைவராக விளங்குவார். அவருடைய பெயரே இக்கோயிலின் பெயர் என்றார் மூதாட்டி.
அதன் பின்,கோயிலுக்கு முன்னாலுள்ள ஆற்றைச் சுட்டிக்காட்டி மூதாட்டி கூறுகிறார் போய்வருவது சிரமமாக உள்ளது. நீங்கள் மந்திரத்தைப் பயன்படுத்தி,பாலத்தை உண்டாக்குங்கள். எவரால் முடிகிறதோ,அவர் தான் திறமையானவர் என்றார் மூதாட்டி. ச்தெ முதலில் மந்திரத்தைப் பயன்படுத்தினார். தமது ஆடையைக் கழற்றி,ஆற்றை நோக்கி வீசியெறிந்தார். ஆடை,ஒரு பாலத்தின் மேற் பகுதியாக மாறியது. ஆனால்,பாலத்தின் கீழ் மரச்சட்டம் இல்லாததால்,காற்று வீசிய போது,அது அசைந்து விழ்ந்துவிடும் நிலையில் இருந்தது. ஹென்சான்,உடனே,தமது கைத் தடியை ஆற்றின் கரையில் போட்டு மந்திரத்தைப் பயன்படுத்தினார்.கைத்தடி ஒரு மரமாக மாறி,ஆற்றுக் குறுக்கே சென்றதால்,முழுமையான பாலம் ஆற்றின் மேலே உருவாயிற்று. ஹென்சானின் திறமை அதிகம் என்று மூதாட்டி கூறினார். எனவே,ஹென்சான்,இக்கோயிலின் தலைவராகியானார். இக்கோயில்,ஹென்சான் கோயிலென பெயர் பெற்றது. சீனாவின் அனைத்துக் கோயில்களிலும் இக்கோயில் மட்டுமே துறவியினால் புகழ்பெற்றது. இதுவரை,ஹென்சான் கோயிலில்,ஹென்சான் மற்றும் சதேவின் உருவச்சிலை காணப்படலாம். இத்துறவிகள்,சாதாரண துறவிகளிலிருந்து வேறுபடுகின்றனர்.அவர்கள்,விளையாடிக்கெவுண்டிருக்கும் குழந்தைகள் போல காணப்படுகின்றனர். அவர்களில் ஒருவர்,கையில் தாமரைப் பூ ஏந்திய வண்ணம் அமர்ந்திருகின்றார். மற்றெவுருவர்,கையில் பெட்டியை ஏந்திய வண்ணம் இருக்கின்றார். அவை,அவர்களுடைய மதக் குருமார் மரணமடைவதற்கு முன் அவர்களுக்குத் தந்தவை. இருவரும் இணக்கமாக இருப்பது என்பது மதக் குருமாரின் நேவுக்கமாகும். ஹென்சான் கோயிலில் நடந்துசெல்லும் போது,மிகுந்த பண்பாட்டுச் சூழ்நிலையைப் பயணிகள் உணரலாம். இக்கோயிலில் கற்சாசனம் இடம்பெறும் ஊடுவழியில்,சீன வரலாற்றில் அறிவாளர் இயற்றிய கவிதையும் அவர்களுடைய நேர்த்தியான சீன கையெழுத்துக்களும் உள்ளன. கற்சாசனத்தில் செதுக்கப்பட்ட கவிதைகள் பல,சீனாவின் நேர்த்தியான கையெழுத்துக்களில் உள்ளடங்கும் பலவிதமான பெவுருளை முழுமையாக வௌதப்படுத்தியுள்ளன.
சீனாவில்,சுசோ நகரின் ஹென்சான் கோயில் பற்றிக் குறிப்பிடும் போது,கோயிலுள்ள மணிக்கூண்டு பற்றி குறிப்பிடுவது உறுதி. வழிகாட்டி தென்தென் கூறுகின்றார், ஓர் ஆண்டில் வௌ஢ளப்பெருக்கு ஏற்பட்டது. நீரிலுள்ள ஒரு மணிக்கூண்டைக் காப்பாற்றும் போது ச்தே காணாமல் போனார். ச்தே இறந்துவிட்டார் என்று கருதிய ஹென்சான் மிகவும் வருத்தம் அடைந்தார். ஆனால்,உண்மையிலே,சதே,இம்மணிக்கூண்டைப் படகாகப் பயன்படுத்தி,கிழக்கு நேவுக்கி ஜப்பானுக்குச் சென்றுவிட்டார். இதனால்,தற்போது ஜப்பானில் சதே கோயில் உள்ளது. ஹென்சானும் சதேவும் மணியோசை மூலம்,ஒருவரை ஒருவர் நினைக்கும் உணர்ச்சியை வௌதப்படுத்தும் போது,இரு இடங்களிலும் மணியோசை ஒலிக்கின்றது. இதன் காரணமாக,ஜப்பானிய பயணிகள் பலர்,சுசோ நகரிலுள்ள ஹென்சான் கோயிலுக்கு வருகை தருவது வழக்கம். புத்தாண்டு வரும் போதெல்லாம்,ஹென்சான் கோயிலில் மணியோசை கேட்டல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 11 42 மணிக்கு ஹென்சான் கோயிலின் தலைவர் மணியை அடிக்கும் போது, அங்குள்ள பயணிகள் அனைவரும் கணக்கிடுவர். 108வது மணியோசைக்குப் பின்,கோயிலுக்கு வௌதயே,பட்டாசுகள் கெவுளுத்தப்படும். குதூகலமான சூழ்நிலைகாணப்படும்.
ஹென்சான் கோயிலுக்கு வந்து,மணிக்கூண்டை அடிப்பதும் மணியோசை கேட்பதும் இவ்விடத்தில் உலா மேற்கெவுள்ளும் பயணிகளின் இன்றியமையாத நிகழ்ச்சியாக மாறியுள்ளது. ஓர் ஆண்டில்,பல பத்து முறை பயணிகளை ஹென்சான் கோயிலுக்குக் கூட்டிக்கெவுண்டு வருவதாக,வழிகாட்டி தன்தன் கூறினார். இப்பயணிகளில் சிலர்,உள் நாட்டுப் பயணிகள். ஜப்பான் உள்ளிட்ட வௌதநாட்டுப் பயணிகளும் உண்டு. இக்கோயிலுக்கு வருகை தரும் பயணிகள்,மணிக்கூண்டை அடிக்க விரும்புகின்றனர் என்றார் அவர். உண்மையிலே,சுசோ நகரின் அதிகமான அழகான காட்சித் தலங்களில்,ஹென்சான் கோயில் சாதாரணமானது. இவ்வளவு அதிகமான பயணிகள் இக்கோயிலுக்கு வருகை தருவதற்கு,சீனப் பண்பாட்டின் எல்லையற்ற கவர்ச்சியாற்றல் தான் காரணமாகும். ஹென்சான் கோயிலின் மணியோசை,சுசோ புறநகரில் சுமார் 1000 ஆண்டுக் காலம் எதிரெவுலித்திருக்கிறது. அது தெவுடர்வது உறுதி.

No comments: