Sunday, July 13, 2008

சுசோ பூங்கா

தொன்மை வாய்ந்த சுசோ பூங்கா
கிழக்கு சீனாவில் சுமார் 2500ஆண்டு வரலாறுடைய பிரபல பண்பாட்டு நகரம் ஒன்று உள்ளது. மனித குலத்தின் தேவலோகமென சீன மக்களால் அழைக்கப்படும் சுசோ நகரம் தான் அது. தெவுன்மை வாய்ந்த பூங்கா, இந்நகரின் தனிச்சிறப்பியல்பாகும். இந்நகரில் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ள 60க்கும் அதிகமான பழங்கால பூங்காக்கள் உள்ளன. இவற்றில் 9, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது நேயர்களுடன் இணைந்து இந்நகரைப் பார்வையிடுகின்றோம். பழங்கால சுசோ நகரம் கி.மு. 514ல் உருவாயிற்று.
கடந்த 2500 ஆண்டுக் காலத்தில் எண்ணற்ற போர்களும் இயற்கைச் சீற்றங்களும் நிகழ்ந்த போதிலும், இது வரையிலும் அது பாதிக்கப்படவில்லை. பழைய நகரப்பகுதியில், நீர் வழிப் போக்குவரத்தும் தரைப்பாதைப் போக்குவரத்தும் இணைந்து பயன்படுத்தப்படுவதும் ஆறும் வீதியும் இணைந்திருப்பதுமான நகரப் பரவல் நிலைமை அடிப்படையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. யாங்சி ஆற்று முகத்துவாரத்தில் அமைந்துள்ள சுசோ நகரில் விளை நிலம் வளம் மிக்கது. கால நிலை பரவாயில்லை. போக்குவரத்து வசதியானது. கி.பி, 400ஆம் ஆண்டிலான நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தில், பணியிலிருந்து விலகி ஓய்வு பெற்ற சீன அதிகாரிகளில் பலர், தமது முதுமைக் காலத்தைக் கழிக்க இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்துப் பூங்கா அமைத்தனர். சீனாவின் மிங்-சிங் வமிச ஆட்சிக் காலத்தில் சுசோ நகரின் பூங்கா கட்டமைப்பின் கலை மேலும் பக்குவப்பட்டு, பூங்கா கட்டடக் கலைஞர் பலர் மட்டுமல்ல, சிறந்த பூங்காக் கட்டடங்களும் தோன்றின. சுசோ நகரிலுள்ள பழங்கால பூங்காக்களில் பல, தனியார் பூங்காவாகும். அதன் பரப்பளவு குறைவு. இருப்பினும், எல்லைக்குட்பட்ட இடத்தில் பூங்கா நிறுவியோர் செயற்கைக் குன்றை உருவாக்கி, மரம் வளர்த்து, கூடார மண்டபங்களைக் கட்டியமைத்து, குளம் உண்டாக்கி, பாலம் அமைத்தனர் என்று சுசோ நகரப் பூங்காப் பணியகத்தின் தலைவர் சியுவன்தாவ் அறிமுகப்படுத்தினார்.
அவர் கூறுகின்றார், இப்பழங்காலப் பூங்காக்களில் ஒரு பகுதி இருப்பிடம். மற்றெவுரு பகுதி பூங்கா. இருப்பிடமானது, தென் கிழக்குச் சீனாவின் பண்டைக் காலக் கட்டடத்தில் முக்கியமானதெவுரு சிறந்த பகுதியாகும். பூங்காவானது, மனிதரும் இயற்கையும் சுமுகமாக இருப்பதற்கு முன் மாதிரியாகும். 4 பருவ காலங்களில், இப்பூங்காவின் காட்சி வேறுபடுகின்றது. இப்பூங்காவில் வாழ்வோர், 4 பருவ காலங்களின் வேறுபாட்டையும் இயற்கை காட்சியையும் உணரலாம் என்றார் அவர். பண்டைக் காலத்தில் சீனாவில் பூங்காவை நிறுவியோர், பண்பாட்டு அறிவு மிக்கவர். அவர்கள், கவிதை இயற்றுவதிலும் ஓவியம் தீட்டுவதிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்கள், பூங்காவை உருவாக்கிய போது ஓவியத்தை அடிப்படையாகவும் கவிதையைக் கருப்பெவுருளாகவும் கெவுண்டு, குளத்தையும் குன்றையும் உருவாக்கினர்.
அதன் மூலமும், மலர் மற்றும் மர வளர்ப்பு மூலமும் கவிதை, ஓவியம் ஆகியவை தழுவிய காட்சி தோன்றுமாற செய்தனர். இதனால், சுசோவிலுள்ள தெவுன்மை வாய்ந்த பூங்கா, ஓசை இல்லாத கவிதை, கன வடிவ ஓவியம் என அழைக்கப்படுகின்றது. பூங்காவில் உலா வரும் போது, கவிதை பாடுவது, ஓவியம் கண்டுகளிப்பது போல தோன்றுகிறது. சுசோ நகரில், தெவுன்மை வாய்ந்த பூங்காக்களை உருவாக்குவதென்ற உருவரைவுக் கருத்தை உலகப் பண்பாட்டு மரபுச் செல்வக் கமிட்டி புகழ்ந்து பாராட்டியுள்ளது. 1997ஆம் ஆண்டு, சுசோ நகரின் சுவெவுசன் பூங்கா, வான்ஸ் பூங்கா, லியூ பூங்கா, சிங்கப் பூங்கா ஆகியவை, உலகப் பிரபல பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. பின்னர், சாங்லெவுங் கூடார மண்டபம் உள்ளிட்ட 5 பூங்காக்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

No comments: