Friday, July 11, 2008

china28

அற்புதமான அழகான சந்திர ஏரி
--------------------------------------------------------------------------------
மங்கோலிய மொழியில், டான்கோலி, வான் என்ற பொருளாகும். தாலேய், ஏரி என்ற பொருளாகும். இதனால் இந்த ஏரியின் பெயருக்கு, வானிலான கடலை ஒட்டியமையும் அழகான ஏரி என்று பொருளாக இருக்கிறது.

புதுச்சிக் என்பவர், முன்பு ஆசிரியராக வேலை செய்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு, அவர், சந்திரஏரி இயற்கைக்காட்சி மண்டலத்துக்குச் சென்று வேலை செய்கிறார். விருந்தினர்கள் இங்கே வரும் போது, புதுச்சிக்குறும் வேறு ஆயர்களும் பாடல் பாட்டி, ஹாடாவையும் மதுவையும் வழங்குவர். புதுச்சிக், எமது செய்தியாளரிடம் கூறியதாவது

உள்ளூர் மக்களின் பேரூக்கத்தை உணர்ந்த பிறகு, எமது செய்தியாளர்கள், சந்திரஏரி இயற்கைக்காட்சி மண்டலத்தில் நுழைந்தனர். இங்கே தங்கி வரும் பயணிகள், மனிதரும் இயற்கையுடன் இணக்கமாக இருக்கும் அழகான காட்சியைப் பாராட்டுகின்றனர். நிங்சியா குவே தன்னாட்சி பிரதேசத்தின் பயணியர் ஒருவர் எமது செய்தியாளரிடம் கூறியதாவது இங்கே மிகவும் அழகானது. வழமையாக, பணிச்சுமை மிகவும் அதிகமானதால், சனி ஞாயிறு இரு நாட்களில் தான், இங்கே வர முடியும். இங்கே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, ஒட்டகம் மீது சவாரி செய்ய வேண்டும் என்றார் அவர். ஒடக்கம் மீது ஏறிச்செல்வது என்பது, உள்ளூர் சுற்றுலாவின் தனிச்சிறப்பியல்பு ஆகும். அலாசன், புகழ்பெற்ற ஒட்டக ஊராக அழைக்கப்பட்டது. சென் பூர் என்பவர், இந்த இயற்கைக்காட்சி மண்டலத்தில் ஓட்டகத்தை வளர்ப்பவர்களில் ஒருவராவார். முன்பு அவர், உள்ளூரின் ஒரு ஆயர். இவ்வியற்கைக்காட்சி மண்டலம் கட்டியமைக்கப்படத் தொடங்கிய போது, அவர் குடும்பமும், மற்றொரு குடும்பத்துடன், தொடர்ந்து தங்கியிருந்து, உடன்படிக்கையின் படி, இங்குள்ள அனைத்து ஒடக்கங்களையும் வளர்க்கும் பணிக்குப் பொறுப்பேற்றது. அவர் கூறியதாவது

எமது வீடு, இந்த ஏரியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆண்டுதோறும் மே திங்கள் முதல் அக்டநூபர் திங்கள் வரை, எங்கள் இரு குடும்பங்கள் ஒடக்கங்களுடன், இங்கு வந்து, வேலை செய்கின்றோம். வேறு நேரத்தில், நாங்கள் மேய்ச்சல் பிரதேசத்தில் வாழ்கின்றோம். துவக்கத்தில் எங்களுக்கு 5 அல்லது 6 ஒடக்கங்கள் மட்டும் உண்டு. தற்போது, இக்காட்சி மண்டலத்தின் ஆதரவுடன், ஒட்டகங்களின் எண்ணிக்கை, 30க்கு மேலாக அதிகரித்துள்ளது

No comments: