Sunday, July 13, 2008

பனிச் சறுக்கல் உறைப்பனி மலை


சீனாவின் சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் பாலைவனம், சோலை வனம், கோபி பாலைவனம், உறைபனி மலை ஆகியவை அமைந்துள்ளன. தவிர, பிரபலமான இயற்கை காட்சித் தலமான தியெசி, ஹெவுயெ மலை, புதௌகுவ் சியெவுஹ புராதன நகரம், நியாகு புராதன நகரம் உள்ளிட்ட வரலாற்றுக் காட்சித் தலங்கள் உள்நாட்டு மற்றும் வௌதநாட்டுப் பயணிகள் சுற்றுலா மேற்கெவுள்ள விரும்பும் இடங்களாகும். குளிர்காலத்தில் அங்கு பனிச்சறுக்கு விளையாட்டு ஒரு சிறந்த தெரிவாகும். பனிச்சறுக்கு, உறைபனி சறுக்கு ஆகிய விளையாட்டு நிகழ்ச்சிகள் முதியோருக்கும் குழந்தைகளுக்கும் பெவுருத்தமானவை. விளையாட்டுச் சாதனங்கள் தரமானவை. வசதியானவை. தற்போது, உருமுச்சி நகரின் சுற்றுப்புறத்தில், 50க்கும் அதிகமான சிறிய, பெரிய உறைபனி மைதானங்கள் உள்ளன. இவற்றில் பெயுன் சர்வதேச உறைபனி மைதானம் மிகவும் பெரியது. இம்மைதானத்தின் பரப்பளவு, 6 லட்சம் சதுரமீட்டருக்கும் அதிகமாகும். இதில், துவக்க நிலை, நடுத்தர நிலை மற்றும் உயர் நிலை சறுக்கல் பாதைகள் உள்ளன.

No comments: