Sunday, July 13, 2008

சியாமன் நகரில் சுற்றுலா

சியாமன் நகரில் சுற்றுலா
சியாமன் நகரில் போக்குவரத்து, மிகவும் வசதியாக உள்ளது. கப்பல், தொடர் வண்டி, விமானம் மூலம் அங்கு சென்றடையலாம். இவற்றில், விமானப் போக்குவரத்து குறிப்பிடத் தக்கது. பெய்ஜிங், சாங்காய், குவாங்சோ, சிங்தௌ போன்ற பெரிய நகரங்களிலிருந்து, 2 மணி நேரத்தில் விமானம் மூலம் அங்குச் செல்லலாம். டோக்கியோ, பாங்கொக், சிங்கப்பூர், சியோல் ஆகியவற்றிலிருந்து சியாமன் நகருக்கு விமானப் போக்குவரத்து உண்டு. நகரப் பகுதியிலிருந்து, சுமார் 20 நிமிடத்தில், சியாமன் நகரின் சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்ல முடியும். நன்புதெவு, வான்ஷி மலை தாவரப் பூங்கா போன்ற காட்சித் தலங்களில், பேருந்து நிலையம் உண்டு. வாடகை காரின் கட்டணம், மிகவும் குறைவு. உறைவிட வசதி மக்கது சியாமன் நகர்.இயற்கை காட்சியினாலும், கோல்ப் மைதானத்தினாலும், சுற்றுலா வசதி, தரமான சேவை ஆகியவற்றின் காரணமாகவும், ஆண்டுதோறும் அதிகமான உள் நாட்டு வௌதநாட்டுப் பயணிகளை அது ஈர்த்துள்ளது.

No comments: